இன்று கிரேசி கிரியேஷன்ஸ் 38ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது….!

kesav
கமல் சார் போன வருடம் அடுத்த நாடகத்திற்காக கொடுத்த தலைப்பு
‘’கும்மாள கோகுலம்’’….!

‘’வேண்டுதல் வெண்பா’’
———————————————

‘’ஆண்டுமுப்பத்(து) எட்டில் அடியெடுத்து வைக்கின்றோம்
வேண்டுதல் வேண்டாமை விட்டவிஷ்ணு -தூண்டுதலால்:
கூட்டுக் குடும்பமாய், கும்மாள கோகுலமாய்
மாட்டுத் தொழுவத்தில் மேய்’’….கிரேசி மோகன்….!

(OR)
‘’ஆண்டுமுப்பத்(து) எட்டில் அடியெடுத்து வைக்கின்றோம்
வேண்டுதல் வேண்டாமை விட்டவிஷ்ணு -தூண்டுதலால்:
கூட்டுக் குடும்பமாய் கண்ணா எமையுந்தன்
மாட்டுத் தொழுவத்தில் மேய்’’….கிரேசி மோகன்….!

‘’சாக்லேட் கிருஷ்ணா’’ 150தாவது ஷோவில் ’’பிரஷ்ணப் பிரேமி’’(BRUSHணப் பிரேமி)’’….!
கேசவ் எனக்கு ஒரு ‘’சாக்லேட் கிருஷ்ணா’’ ஓவியம்
பரிசாக அளித்தார்….!அப்போது எழுதிய வெண்பா….!

kesav1

கேசவ் சாக்லேட் கிருஷ்ணா ஓவியம் பார்த்து(கேசவ் பரிசளிப்பை இணைத்துள்ளேன்)…..!
——————————————————-
’’இடைப்பிள்ளை உந்தன் இசையில் மயங்கி
மடிப்பால் நிலத்தில் மணக்க -கடைக்காலை
கன்றென எண்ணிக் கறவை வருடிட
நின்றிடென் நெஞ்சில் நிலைத்து’’….!கிரேசி மோகன்….!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *