-க. பாலசுப்ரமணியன்

 

bhudda

 

போதிமரத்தடியில் புனிதமாய் ஒளிரும் பேரொளி
புன்னகையைக் கண்களில் செதுக்கிய புதுமொழி
புலனடக்கி மனமடக்கி புவிவென்ற நல்வழி
புரியாத வாழ்க்கைக்கு வழிகாட்டும் அன்புநெறி!

கரைகடந்த வெள்ளமென நிலைமறந்து தவித்துடுமே
கள்ளுண்ட போதையெனக் கலங்கிடும் ஆசைமனமே!
உள்ளடங்கா மாந்தருக்கு உடலென்றும்  போர்க்களமே
உண்மை உணர்த்த வந்ததுவே போதிசத்வமே!

சித்தனில்லை புத்தனவன் விவேகத்தின் எல்லை
மோகமில்லை முக்தனவன் முடிதுறந்த முல்லை
சோகமில்லை சுந்தரனே சுகம்விடுத்த பாதை
தேடவில்லை தேறியவன் தானறிந்த உலகமறை!

வானுயரப் புகழ்வந்தும் வாடிவிடும் மானுடமே!
ஊனுருக நாடிச்சென்றால் உண்மை ஒளிர்ந்திடுமே!
தானறியத்  தனித்திருந்தால் நிகரில்லாத் தவமே!தானடங்கிய உள்ளத்தில் தெளிவது அன்புமயமே!

 

 

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “போதிமரத்தடியில்…

  1. அரச குடும்பத்திலிருந்து துறவு பூண்ட கௌத புத்தர் (கி.மு 566 – கி.மு 486) இயற் பெயர் சித்தார்த்தர். தனது 29 ஆம் வயதில் துறவு பூண்டவர் தனது 36ம் வயதில் போதிமரத்தடியில் ஞானோதயம் அடைந்தார். ஆசையை அறவே ஒழி என்றார். ஆசை தான் துன்பத்திற்கு அடிப்படை காரணம் என்றார்.சித்தனில்லை புத்தனவன் விவேகத்தின் எல்லை
    மோகமில்லை முக்தனவன் முடிதுறந்த முல்லை
    சோகமில்லை சுந்தரனே சுகம்விடுத்த பாதை
    தேடவில்லை தேறியவன் தானறிந்த உலகமறை. என்று கவிதை படைத்த நண்பர் திரு க. பாலசுப்ரமணியன் அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.

  2. தங்கள் அன்பான பாராட்டுதல்களுக்கு உளமார்ந்த நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *