சி. ஜெயபாரதன், கனடா

aq
படைப்பும் நானே
படைத்ததும் நானே
திட்டமும் நானே
திட்ட மிட்டதும் நானே.
அணுவும் நானே
அகிலமும் நானே
ஆதியும் நானே
அந்தமும் நானே
ஒளியும் நானே
இருளும் நானே
எங்கும் நானே
இல்லாததும் நானே
உயிரும் நானே
உடலும் நானே
கல்லும் நானே
கடலும் நானே
புல்லும் நானே
புழுவும் நானே
பிறப்பும் நானே
இறப்பும் நானே
இளமையும் நானே
முதுமையும் நானே
வளமையும் நானே
வறுமையும் நானே
கறுப்பும் நானே
வெளுப்பும் நானே
உருவ மில்லை எனக்கு
அருவத் தோற்றம் எனக்கு
ஒளிமய மான நான்
உலவுவது இருட்டில் தான்.

+++++++++++++++++++++++

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “படைப்பாளி

  1. காற்றும் நானே கடமையும் நானே எதிலும் நானே ஒளிமையமான சூரியன் உதயமாவது பகலில் தான் படைப்பாளி கவிதையை படைத்த நண்பர் சி. ஜெயபாரதன் அவர்களுக்கு எனது உளமார்ந்த பாராட்டுக்கள்

  2. காற்றும் நானே
    ஊற்றும் நானே
    ஆக்கம் நானே
    ஊக்கம் நானே.

    மானிடருக்கு ஆக்கமும், ஊக்கமும் அளிப்பது படைப்பாளியே.

    பாராட்டுக்கு மிக்க நன்றி நண்பர் நீலமேகம் ராமலிங்கம் சஹஸ்ரநாமன்.

    சி. ஜெயபாரதன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *