ரா.பார்த்தசாரதி

 

மனம் ஒரு கண்ணாடி ,

நமது எண்ணங்களை பிரதிபலிக்கும்,

 

மனம்  ஒரு குரங்கு

அது எண்ணங்களை தாவ வைக்கும்

 

மனம் ஒரு  நீர்க்குமிழி

அது  எண்ணங்களை உருவாக்கி அழிக்கும்

 

மனம்  ஒரு கடல் அலை

அது  மாறி, மாறி  எண்ணங்களை மோத விடும்

 

மனம் ஒரு அணையா நெருப்பு

அதில் பொறாமை என்பது கொழுந்துவிட்டு எரியும்

 

மனம் ஒரு குப்பைத்தொட்டி

அதில் தேவையில்லாத கெட்ட எண்ணங்களை சேர்த்துவைக்கும்

 

மனம் ஒரு  கடிவாளம் இல்லா குதிரை

அது தன்  விருப்பப்படியே  பறந்தோடும்

 

மனம்  ஒரு கனவு உலகம்

கனவு உலகத்தில் அடிக்கடி சஞ்சரிக்கும்

 

மனம்   ஒரு அழகின்  அடிமை

அழகான காட்சிகளுக்கு சரணடையும்

 

மனம்  எனும் பேய்

மனிதனை  சுயநலமாய், தீயவற்றிற்கு அடிமையாக்கும்

 

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “மனம் எனும் பேய்

  1. மனம் என்பது மாயை. இந்த மனம் என்னும் மாயை அடக்கினால் எளிதாக வெற்றியடைலாம். எதையும் எதிர்பார்க்காமல் இருந்தாலே போதும். போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து. . நண்பர் திரு ரா. பார்த்த சாரதிக்கு பாராட்டுக்கள். நன்றி வணக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *