உழவர் திருநாள் நற்செய்தி!

பவள சங்கரி

 

விவசாயிகளின் துயர் துடைக்க செயற்கை மழையை வரவழைத்து பயிர்செய்ய வழிவகுக்க அரசு ஏன் முயலவில்லை? சீனாவின் மஞ்சள் நதி பிரதேசத்தில் வறட்சி ஏற்பட்டபோது ஆண்டொன்றிற்கு 55 பில்லியன் டன் செயற்கை மழையின் மூலமாக நீர் வரவழைத்து விவசாயம் தழைக்கச் செய்துள்ளனர். இன்று 55 பில்லியன் என்ற அளவை நான்கு மடங்காக அதிகரிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். 55 பில்லியன் என்பது 4 காவேரி நீர் வரத்திற்கு இணையாகும்..
 
100 மி.மீ மழை மட்டுமே பெய்யக்கூடிய துபாய் நாட்டில் அமெரிக்காவின் துணையோடு செயற்கை மழை பெய்வித்துள்ளனர்.
 
உழவர் திருநாளான இன்று விவசாயப் பெருமக்களின் துயர் துடைக்கும் அளவில் இதுபோன்று நல்ல திட்டங்களை செயல்படுத்த அரசு முன் வரவேண்டும். பொது மக்களின் வாழ்வாதாரமும் இதில்தான் அடங்கியுள்ளது என்பதையும் அரசு உணர்ந்து போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.
 
2013 ஆம் ஆண்டிலேயே சீனர்கள் இந்த செயற்கை மழைத் திட்டத்தை செயல்படுத்திவிட்டனர். இனிமேலாவது நாமும் விழித்துக்கொள்ளாவிட்டால் தமிழகமே பாலைவனம் ஆகும்.. பஞ்சம் தலைவிரித்தாடும்!
பவள சங்கரி

எழுத்தாளர், பத்திரிக்கையாளர்.

Share

About the Author

பவள சங்கரி

has written 383 stories on this site.

எழுத்தாளர், பத்திரிக்கையாளர்.

One Comment on “உழவர் திருநாள் நற்செய்தி!”

  • பழ.செல்வமாணிக்கம் wrote on 16 January, 2017, 21:05

    திரு பவளா அவர்களின் வார்த்தைகள் சிந்திக்க வேண்டியவை. அடிப்படை தேவையான உணவு உற்பத்திக்கு நீர், அதாவது மழை வேண்டும். அதற்கான முயற்ச்சியே உடனடித்தேவை :

Write a Comment [மறுமொழி இடவும்]


one + = 3


Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.