cleopatra1

 [பேரங்க நாடகம்]

மூலம்: ஷேக்ஸ்பியர் & பெர்னாட்ஷா
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

அங்கம் -2 பாகம் -5

“அவளது கனிவுக்குரல் மொழிகள் வாத்திய இசைக்
கருவியின் பல்வேறு நாண்கம்பிகள் போன்றவை.
மாந்தரின் முகப்புகழ்ச்சி மொழிகள் நான்கு தரப்பின;
ஆனால் அவளிடமிருந்தவையோ ஆயிரம்!”

புளூடார்க், கிரேக்க வரலாற்றுப் பதிவாளர் [Plutarch (46-120) A.D.]

வயது மலரும் அவள் வளமையில் செழித்து!
பொங்கிடு மிளமை அங்க மனைத்தும்!
வான்வெளி நிலவையும் வசீகரம் செய்பவள்!
வாக்கு வன்மையில் நெகிழ வைப்பவள்!
நானவளை வெறுப்பேன் ஆயினும் அவள்
மோக உடலை நோக்குவேன்! கவரும்
எழிலைச் சபிப்பேன் ஆயினும் அவளைத்
தழுவக் கைகள் தானாய்த் தாவிடும்!

ஜான் டிரைடென் [John Dryden, Drama: All for Love]

வயது ஏறினும் வதங்காது அவள் மேனி!
வழக்க மரபுகளால் குலையாது அவள் பாணி!
வரம்பிலா விதங்களில் அவளோர் வனப்பு ராணி!

வில்லியம் ஷேக்ஸ்பியர் [அண்டனி & கிளியோபாத்ரா]

நேரம், இடம்:

அலெக்ஸாண்டிரியாவில் எகிப்த் மன்னர் அரண்மனை.

பாரோ மன்னர் வரலாற்றுஓவியங்கள் உயர்ந்த
சுவர்களை அலங்கரிக்கின்றன.

பகல் வேளை.

நாடகப் பாத்திரங்கள்:

பால்ய அரசன் டாலமி, போதினஸ், தியோடோடஸ்,cleo2
அக்கில்லஸ், ஜூலியஸ்சீஸர், ரூஃபியோ, ரோமானியக் காவலர், எகிப்தின் படையினர், கிளியோபாத்ரா,
கம்பள வணிகர்.

காட்சி அமைப்பு:

பதினைந்து வயது பால்ய அரசன் டாலமி,
[கிளியோபட்ராவின் தமையன் (கணவன்)] பல படிகள்
உள்ள பீடத்தின் உயரத்தில் பாதுகாப்பாளர் போதினஸ்
அருகில் வர அரச ஆசனத்தை நோக்கிப் படிகளில்
ஏறுகிறான். டாலமியின் பயிற்சியாளர் தியோடோடஸ்
வலதுபுறம் படி ஏறுகிறார்.

படைத் தளபதிஅக்கில்லஸ் இடது புறத்தில் இருக்கிறார்.
மற்ற அரண்மனை அதிகாரிகள், காவலர் சற்று தூரத்தில்
கூடியுள்ளனர். அனைவரும் எழுந்துநின்று
மன்னர்டாலமிக்கு வணக்கம் தெரிவித்த பிறகு, அரசன்
அமர்ந்த பின் தாமும் உட்காருகின்றனர். சிறிது நேரம்
கழித்து ஆங்கே ஜூலியஸ் சீஸர், அவரது அரசாங்கச்
செயலாளர் பிரிட்டானஸ் மற்றும் ரோமானியக் காவலர்
சிலரும் நுழைகிறார்.

[அகில்லஸ் ஜூலியஸ் சீஸர் முன்வந்து கைகுலுக்கிறான்]

அக்கிலஸ்: [சிரித்துக் கொண்டு] ஜெனரல்! நான்தான் அக்கிலஸ்.

பூரிப்பான என்னினிய வரவேற்பு உங்களுக்கு!cleo3
டாலமி மாவேந்தரின் படைத் தளபதி நான்!
எகிப்த் நாட்டின் போர்த் தளபதி! ஏகத் தளபதி!

ஜூலியஸ் சீஸர்: அப்படியா? உங்களைச் சந்தித்ததில்
எனக்கும் மிக்க பூரிப்பே. நீங்கள்தான் எகிப்தின் ஏகத்
தளபதியா? நேற்று நான் மனிதச் சிங்கத்தின்அருகில்
சந்தித்த பெல்ஸானரும் எகிப்தின் படைக் காப்டன் என்று
கூறினாரே! அப்படி என்றால் எகிப்துக்கு இணையான
இரட்டைத் தளபதிகளா? போரென்று
வந்தால் யார் படைகளை நடத்திச் செல்வார், நீங்களா
அல்லது பெல்ஸானரா?

அக்கிலஸ்: [வெடிச் சிரிப்புடன்] ஓ! பெல்ஸானரா? அவர் எனக்கு உதவிப் பதவியில் உள்ளவர்! ஆனால் எனக்கு இப்போது எதிரியாகப் போனார்! அவரதுஅரசி
கிளியோபாத்ராவே தலைமறைவாக எங்கோ ஒளிந்து
கொண்டுள்ளார்! பெல்ஸானர் அவளுடைய நிழலாக
நடமாடுகிறார்! போர் வந்தால் யார் படைகளை
நடத்துவார்? நல்ல கேள்வி! எகிப்தின் ஏகத் தளபதி
நான்தான் நடத்திச் செல்வேன். பெல்ஸானர் உயிரும்,
உடலுமற்ற ஓர் எலும்புக் கூடு!

ஜூலியஸ் சீஸர்: ஓ! அப்படியா சங்கதி?

[தியோடோடஸைப் பார்த்து]  நீங்கள் …யார்?

தியோடோடஸ்: [எழுந்து நின்று கைகொடுத்து] நான் தியோடோடஸ்!

வேந்தரின் பயிற்சியாளர்.

ஜூலியஸ் சீஸர்: [சிரித்துக் கொண்டு] ஓ! நீங்கள்தான் பாலகன் டாலமிக்கு அறிவூட்டும் அமைச்சரா? அரசாங்க நிர்வாகத்தில் அறிவுரை கூறி நடத்தும்நிபுணரா? நல்ல பணி உமக்கு.

நீங்கள்தான் மெய்யாக எகிப்தின் போலி மன்னர்! …
[டாலமியைப் பார்த்து] …. நானிங்கு வந்த காரணத்தைச் சொல்ல வேண்டுமே!

….. மாமன்னர் டாலமி அவர்களே! எமக்கு நிதி தேவைப்படு
கிறது! ஆண்டாண்டு கப்பம் செலுத்தும் நாளும் கடந்து
விட்டது! எத்தனை நாள் கடந்து விட்டதுஎன்பதை விட,
எத்தனை மாதம் என்று நான் சொல்வது நல்லது.

டாலமி: [போதினஸைப் பார்த்து] என்ன தகாத புகாரிது? நாம் கப்பம் கட்டவில்லை என்று சீஸர் நம்மைக் குற்றம் கூறி நிதி கேட்கும் நிலைக்கு வைக்கலாமா?…

[சீஸரைப் பார்த்து] சொல்லுங்கள், எத்தனை மாதம் ஆகிறது!

ஜூலியஸ் சீஸர்: ஆறு மாதங்கள் ஓடி விட்டன! எங்கள்
பொக்கிசம் காலி! செலவுக்குப் பணம் அனுப்ப நாங்கள்
ரோமுக்குச் செய்தி அனுப்பும் நிர்ப்பந்தம்வந்துவிட்டது!

போதினஸ்: [வருத்தமுடன்] ஜெனரல் சீஸர் அவர்களே! எங்கள் பொக்கிசமும் காலியாகப் போய்விட்டது! என்ன செய்வது ஓராண்டு காலம் வரி வாங்கத் தவறி விட்டோம்! ஆறு மாதம் கப்பம் கட்டாமல் உங்கள் பொறுமையை முறித்ததற்கு எங்களை மன்னிக்க வேண்டும்!

அடுத்த நைல் நதி அறுவடைவரும்வரை பொறுப்பீரா?

ஜூலியஸ் சீஸர்: [வெகுண்டு எழுந்து] இந்த சாக்குப் போக்கெல்லாம் எதற்கு எங்கள் பொறுமை எல்லை கடந்து விட்டது! இனி பொறுப்பதில்லை!

டாலமி: [கோபமாக எழுந்து] என்ன நமது பொக்கிசமும் காலியா? என்னவாயிற்று நம் நிதி முடிப்புகள்?

போதினஸ்: மகா மன்னரே! நாம் கிளியோபாத்ராவை நாடு
கடத்தும் முன்பே அவள் நமது பொக்கிச நிதியைக் கடத்தி
விட்டாள்!

டாலமி: எனக்குத் தெரியாமல் போனதே! கள்ள ராணி!
என் பொக்கிசத்தைக் களவாடிய கொள்ளை ராணி! … [அக்
லஸைப் பார்த்து] கிளியோபத்ரா எங்கு
ஒளிந்திருக்கிறாள் என்று கண்டுபிடித்து, அவளைக்
கொன்று வா! கொள்ளைப் பணத்தைக் கொண்டுவா!
.. போ! அவள் எங்கிருந்தாலும் சரி! போய்ப் பிடி!
அவள் எகிப்தில் கால் வைக்கக் கூடாது!
ஆனால் நம்முடைய முழு நிதியையும் கைப்பற்றிக்
கொண்டுவா! ….

[சீஸரைப் பார்த்துக் கெஞ்சலுடன்] .. முடிந்தால்இந்த
முறை கிளியோபாத்ராவிடம் வாங்கிக் கொள்ளுங்கள்! அவளிடம் உள்ளது எங்கள் நிதி! அந்தப் பணம் உங்களைச் சேர்ந்தது! அவளும் எகிப்தின்அரசிதான் மேலும் உங்களுக்கும் பிடித்தவள் அவள்! … அடுத்த முறை கப்பம் அளிப்பது எனது கடமை! ஒருமுறை டாலமி, ஒரு முறை கிளியோபாத்ரா என்றுமாற்றி மாற்றி, நீங்கள் கப்பம் பெற்றுக் கொள்வதே நியாயமானது.

ஜூலியஸ் சீஸர்: என்ன கேலிக் கூத்தாய்ப் போச்சு?பாலகர் டாலமி நியாயம் பேசுகிறாரா? இந்த பொறுப்பற்ற
போக்கு எமக்குப் பிடிக்காது! ஒருவேளைகிளியோபாத்ரா
செத்துப் போயிருந்தால்…!

டாலமி: கப்பத்தை நான் கட்டி விடுகிறேன்.
கிளியோபாத்ரா செத்துப் போனாளா அல்லது
உயிரோடிருக்கிறாளா வென்று உமது ஒற்றர்களை
உளவறியச்சொல்வீர்! எமது ஆட்களும் அவளது எலும்புக்
கூட்டை பாலைவனத்தில் தேடிக் கொண்டுதான்
இருக்கிறார்! ஆனால் அவளது அழகிய மேனி உயிரோடு
நடமாடி வருவதாகவே நான் கருதுகிறேன். சீக்கிரம்
அவளைப் பிடித்தால், நிச்சயம் உங்கள் கப்பத்
தொகையைக் கறந்து விடலாம்!

பிரிட்டானஸ்: [அழுத்தமாக] கிளியோபாத்ரா
உயிரோடிருக்கிறாளா,
எலும்புக் கூடாய்ப் போனாளா என்பதைப் பற்றி எமக்குக்
கவலையில்லை! எங்கள்கண்ணில் அரசராகத் தெரிபவர்
நீங்கள் ஒருவரே! கடத்தப் பட்ட கிளியோபாத்ராவைத்
தேடிப் பிடிப்பது எமது பொறுப்பில்லை! அது உமது
வேலை! எமக்குத்தேவை கப்பத் தொகை! சட்டப்படி
எகிப்த் ரோமாபுரிக்குக் கப்பம் செலுத்த உங்கள் தந்தை
மன்னராய் உள்ள போது கையெழுத்திட்டு ஒப்புக்கொண்ட
உடன்படிக்கை! அந்த ஒப்பந்தத்தின்படி அப்பணத்தை
உங்களிடமிருந்து பெற்றுக் கொள்வது சீஸரின் கடமை!

டாலமி: [சீஸர்ப் பார்த்து] சட்டம் பேசும் இந்த ஞானியை நீங்கள் எமக்கு அறிமுகப் படுத்த வில்லையே!

ஜூலியஸ் சீஸர்: [சற்று கனிவுடன்] டாலமி, இவர்தான் பிரிட்டானஸ், என் செயலாளர்! அரசாங்கச் செயலாளர்! நீங்கள் சொன்னது போல், ஐயமின்றி அவர்ஓரு சட்ட ஞானிதான்! அதோ அவர் ரூபியோ, எனது படைத் தளபதி.

[கோபமாக] அது சரி. இப்போது எனக்குத் தேவை 1600
டாலென்ட் நாணயம் [Talent].அதுவும் உடனே தேவை! …. டாலமி!

எம்முடன் விளையாடாதீர்! உமது பொறுப்பற்ற முறை
எமக்குப் பிடிக்காது! பணத்தை வாங்காமல் யாமின்று
வெளியேறப் போவதில்லை! …. நீவீர் தரவில்லையானால் எமது படையாட்கள் உமது பொன் ஆபரணங்களைப்
பறிக்கும்படி நேரிடும்!

போதினஸ்: [மனக் கணக்கிட்டு, பெருமூச்சுடன் கலங்கி]
1600 டாலென்ட் நாணயம் என்றால் 40 மில்லியன்
ஸெஸ்டர்ஸ் [Sesterces]. ஜெனரல், அத்தனைப்பெரிய
தொகை எமது பொக்கிசத்தில் இல்லை, நிச்சயம்!

ஜூலியஸ் சீஸர்: [சற்று தணிவுடன்] கொஞ்சத்
தொகைதான்! 1600 டாலென்ட் நாணயம் மட்டுமே! அதை ஏன் ஸெஸ்டர்ஸ் நாணயத்தில் மாற்றிப் பெரிதுபடுத்த
வேண்டும்? டாலமிக்கு அதிர்ச்சி கொடுக்கவா?ஸெஸ்டர்ஸ் நாணயம் ஒன்றில் வெறுமனே ஒற்றைத்
துண்டு ரொட்டி வாங்கலாம்!

போதினஸ்: யார் சொன்னது? அது தப்பு! ஒரு
ஸெஸ்டர்ஸ் நாணயத்தில் குதிரை ஒன்றை
வாங்கலாமே. உங்கள் மதிப்பீடு மிகவும் கீழானது!
தப்பானது!

கிளியோபாத்ரா செய்த கலகத்தில் ஓராண்டு வரிகளை
வாங்க முடியாமல் தவற விட்டது எங்கள் தப்புதான்.
எகிப்த் செல்வந்த நாடு! உங்கள் கப்பத்தைச்செலுத்தி
விடுவோம், கவலைப் படாதீர்! சற்றுப் பொறுங்கள்.

ரூஃபியோ: [சற்று கோபமுடன்] போதினஸ்! போதும் உமது சாக்குப்போக்குகள்! எப்படி நாட்டை ஆள
வேண்டும், வரி திரட்ட வேண்டும் என்று ஆலோசனைகூறுவது எமது வேலையில்லை! ஏன் கால தாமதப் படுத்துகிறீர்? சீஸர் கோபத்தைத் தூண்டாதீர்!

போதினஸ்: [கசப்புடன்] உலகைக் கைப்பற்றிய போர்த்தளபதி சீஸருக்குக் கப்பத் தொகை திரட்டும் சிறிய பணியும் உள்ளதா? கைச் செலவுக்குக் கூடப் பணமில்லாமல், இப்படி திடீரென கையேந்தி வரலாமா?

ஜூலியஸ் சீஸர்: நண்பனே! உலகைக் கைப்பற்றிய
தளபதிக்குக் கப்பத் தொகையைக் கறப்பதைத் தவிர
முக்கியப் பணி வேறில்லை! நாமின்று பணம்வாங்காது
இங்கிருந்து நகரப் போவதில்லை!

போதினஸ்: [கவலையுடன்] என்ன செய்வது? கப்பத்தைக் கறக்க ஒற்றைக் காலில் நிற்கிறீர்! நாங்கள் ஆலயத் தங்கத்தைத்தான் உருக்கி நாணயமாக்கித் தரவேண்டும். குறைந்தது இரண்டு அல்லது மூன்று நாட்கள் ஆகும். அதுவரைப் பொறுப்பீர்களா?

ஜூலியஸ் சீஸர்: அப்படியானால் மூன்று நாட்கள்
உங்கள் விருந்தினராய் நாங்களிங்கு தங்க வேண்டும்.
அத்தனை பேருக்கும் உணவும், மதுவும்,படுக்கையும்
அளிப்பீர்களா?

டாலமி: [எழுந்து நின்று] நிச்சயம், நீங்கள் எங்கள் விருந்தாளி! மூன்று நாட்கள் என்ன? முப்பது நாட்கள் கூட எமது அரண்மனையில் அனைவரும் தங்கலாம்.உண்டு,
உறங்கி, மதுவருந்தி, ஆடிப்பாடி, இன்புற்று எமது
அரண்மனை விருந்தினர் அறையில் தங்கலாம்!இப்போதே நாணய அச்சடிப்புக்குஆணையிடுகிறேன்.

[போதினஸ் காதில் ஏதோ சொல்ல அவர் விரைந்து செல்கிறார்]

ஜூலியஸ் சீஸர்: எமக்குப் பணம் கிடைத்தால் போதும்!
உமது அரசியல் பிரச்சனையையும் தீர்த்து வைக்கிறேன்.
அதற்கு கிளியோபாத்ராவும் வருவதுநல்லது! டாலமியும்,
கிளியோபாத்ராவும் சேர்ந்து எகிப்தை ஆள்வதையே யாம்
விரும்புகிறோம். உமக்குள்ளிருக்கும் பகைமை யாம்
அகற்றுவோம்!

போதினஸ்: கிளியோபாத்ரா அலெக்ஸாண்டிரியாவில்
இல்லை. சிரியாவுக்கு ஓடிவிட்டதாகக்கேள்விப்பட்டோம். உயிருக்கு அஞ்சாது அவள் எகிப்தில் கால்வைக்க மாட்டாள்! வைத்தால் அவள் தலையைக் கொய்ய எங்கள் படையாட்கள் வாளோடு தயாராக உள்ளார்! அவளில்லாமல்தான் நீங்கள் அரசியல்பிரச்சனையைத் தீர்க்க வேண்டும். கிளியும், பூனையும் ஒன்றாக வாழுமா என்பது சந்தேகம்தான்!

[அப்போது காவலன் ஒருவன் ஒரு ரத்தினக் கம்பள
வணிகனை அழைத்து வருகிறான். வணிகனைத்
தொடர்ந்து, மூச்சுத் திணறி அவனது கையாள்
கனமானகம்பளத்தைத் தோளில் தூக்கிக் கொண்டு
வருகிறான். கம்பளத்தை மெதுவாக இறக்கித் தரையில்
விரிக்கிறான், கையாள். கம்பளத்திலிருந்து தாமரை மலர்
போல ஒரு வனப்பு மங்கை, புன்னகையுடன் எழுகிறாள்.]

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *