091108 - Ananya -lores

“தூங்கும்முன் ஜாக்ரத்தாய், தூங்கியபின் சொப்பனமாய் ,-
தூங்காமல் தூங்கும் துரீயம்:-தாங்கும் –
கடத்தில் நானாய் , கடமுடைய வானாய் –
படத்தில் இருக்கின்றான் பார்”….!துரீயம்- நான்கவஸ்த்தை தாண்டிய “நான்”….!கடகாசமும் கண்ணன் , கடமுடைய ஆகாசமும் கண்ணன்….!
”என் காலைக் கடன் கேசவ்வால்
வெண்பாவில் தொழும் (திரு)’’மாலைக் கடன்’’….!
’’ஒன்றே சதமென்று ஒருஓரம் உட்கார்ந்து
மென்று முழுங்கிட மாம்பழம்(கண்ணனின் கன்னம்-மாம்பழ வாயன்….) -கன்றெபோல்-,
நித்தம் இதுபழக, நம்பீச மைத்துனனால்
சித்தம்மாப் பிள்ளை சிவம்’’….
தென்னிந்தியாவில் கண்ணன்….
வட இந்தியாவில் கன்னையன்….
எனக்கு கனன்யன்….!

”அனன்ய அனவரதன் ஆவிற்காய், ஆயர்
மனன்யன் மனிதா பிமான -குணன்யன்
தினம்என் கணினியில் தோன்றிடும், கேசவ்
கனன்யன்(கன்னையன்)என் காலைக் கடன்’’….!

”அனன்யபக்தி ஆவுக்(கு) அளிக்கும் பிருந்தா
வனன்யகண்ணா காலை வணக்கம், -தினம்யென்
கணினியில் பிறந்திடுவோய், கேசவ் வரைந்திடுவோய்,
ManyMany HappyReturns மால்’’….கிரேசி மோகன்….!

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *