-இன்னம்பூரான்
மார்ச் 28, 2017

innam

பெரிய எழுத்து விக்ரமாதித்யன் கதை, கதைசொல்லி இலக்கியங்களில் முதன்மை வகிக்கிறது என்று அந்த காலத்துப் பெரிசுகள் சொல்லிக்கொள்வார்கள் அந்த விக்ரமாதித்யனின் அண்ணனாகக் கருதப்படும் ராஜரிஷி பர்த்ருஹரி உஜ்ஜெய்ன் சமஸ்தானத்தின் அரசர், அறிவாளிகளின் தலைவர், துறவு பூண்ட மாமனிதர். அவருடைய நீதிசதகம், வைராக்யசதகம், சிருங்கார சதகம் ஆகியவை புகழ் வாய்ந்தவை. ஒரு மாதிரி, இங்கே.

स्वल्पस्नायुवसावशेषमलिनं निर्मांसमप्यस्थिकम्
श्वा लब्ध्वा पारितोषमेति न तु तत्तस्य क्षुधः शान्तये ।
सिंहो जम्बुकमङ्कमागतमपि त्यक्त्वा निहन्ति द्विपम्
सर्वः कृच्छ्रगतोऽपि वाञ्छति जनः सत्त्वानुरूपं फलम् ॥     – नीतिशतकम्

தனக்கு கிடைத்த எலும்புத்துண்டில் கொஞ்சம் கூட மாமிசப்பசை இல்லாவிடினும், கிடைத்ததை உண்டு, பசி தணியாவிடினும், மனநிறைவு கொள்ளும், நாய். கண்ணில் பட்ட நரியைக் கண்டும் காணாமல், யானையை வேட்டையாடும் சிங்கம். தன்னால் முடிந்தவரை நன்றாகவே இயங்கிப் பலனை அடைய எல்லாரும் முயல்வார்கள்.

எட்டாதாயினும் கிட்டாது என்றோ/ சீ! சீ! இந்தப் பழம் புளிக்கும் என்றோ/ போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து என்றோ நாம் இருப்பதில்லை.

#

சித்திரத்துக்கு நன்றி:

https://s-media-cache-ak0.pinimg.com/736x/f3/2a/c8/f32ac84414a4944737b611976086fb9d.jpg

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *