திருமால் திருப்புகழ்

கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

சூரி நாகம்மாள் ஸ்ரீரமணாஸ்ரம லேகலுவில் வாசித்தது….’’எம் பையன் ராமன் பித்து பிடிச்சா மாதிரி இருக்கான்’’ என்று தசரதன் விஸ்வாமித்திரரிடம் கூற ‘’அட என்ன ஓய்! அந்த பித்து பிடிக்காமத்தானே நாமெல்லாம் கஷ்டப் படறோம்….சந்தோஷமான சமாச்சாரம் இது….ஏன் வருத்தப் படறீர்….ஓய் வசிஷ்டரே….எனக்கும், உமக்கும் பிரும்மா போதிச்ச யோகத்தை ஸ்ரீ ராமருக்கு போதியும்காணும்’’ என்று கேட்க….வசிஷ்டர் ராமருக்கு உபதேசித்த யோகம்தான் ‘’வாசிஷ்ட யோகம்’’….!’’வெண்பாவாக்கம்’’ செய்து கொண்டிருக்கிறேன்….!

வாசிஷ்ட யோகம்
——————–

kesav

வந்ததில் பற்றும் வருவதில் ஆர்வமும்
அந்தநாள் ஞாபக ஆசையும் -தொந்தரவாம்
ஆகவே மாயைக்(கு) அடங்காது ஆட்டத்தை
ராகவா ஆடு ரசித்து….(1)….!

ஆர்பரித்து ராகவா மேற்புரத்தில் ஆடுநீ
பார்ப்பவர் கண்ணுக்குப் பற்றுதல்போல் -நீர்பரப்பாய்
அஞ்சின் அலைகளற்ற நெஞ்சிருக்க, வைக்கலாம்
பஞ்சுக்(கு) அருகில் பிழம்பு….(2)….

இல்லாத ஒன்றை இருப்பதாய்க் காட்டிடும்
பொல்லாத நெஞ்சமொரு போக்கிரி -வில்லாளி
ராகவா, ஆகவே மோகவாய் போகாது
யோகமாம் வாசிஷ்டம் எய்து….(3)….கிரேசி மோகன்….!

Comment here