உமர் கயாம் ஈரடிப் பாக்கள்

 

aj

பாரசீக மூலம் : உமர் கயாம் ரூபையாத்

ஆங்கில மூலம் : எட்வேர்டு ஃபிட்ஜெரால்டு

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா.

+++++++++++++++

 

[46] யார் துணிந்து மதுரசத் தெய்வ ஏற்பை

தெய்வ ஈனமாய்த் திரித்து சூழ்ச்சி செய்வது ?

வெகுமதி அது, பயன்படுத்துவோம் இல்லையா ?

சாபமெனின் பிறகெதற்கு, யார் தீர்மா னிப்பது ?

 

[46]
Why, be this Juice the growth of God, who dare
Blaspheme the twisted tendril as Snare?
A Blessing, we should use it, should we not?
And if a Curse – why, then, Who set it there?

 

[47] ஞானிகளை என்னோடு மோத விடுவாய்,

ஞாலத் தர்க்கமதை அப்படியே விட்டு விடுவாய்

எதோ ஓர் மூலையில் குழப்பம் ஒளிந்திருக்கும்; ;

உனதாய் எடுத்துக் கொள் விளையாட்டாய்.

 

[47]

But leave the Wise to wrangle, and with me

The Quarrel of the Universe let be:

And, in some corner of the Hubbub couch’d,
Make Game of that which makes as much of Thee.

 

[48] உள்ளும் புறமும், மேலும், கீழும் எல்லாம்

ஒரு மாஜிக் நிழற் காட்சி தவிர வேறில்லை;

சூரிய விளக்குப் பெட்டிக்குள் காட்டப் படுகிறது;

அதைச் சுற்றி போலி வடிவில் வந்து போவோம்

 

[48].
For in and out, above, about, below,
‘Tis nothing but a Magic Shadow-show,
Play’d in a Box whose Candle is the Sun,
Round which we Phantom Figures come and go.

+++++++++++++++++++

Share

About the Author

சி.ஜெயபாரதன்

has written 703 stories on this site.

அணுசக்தி ஆக்கப் பணியில் பொறியியல் துறைகளில் 45 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியா, கனடாவில் அனுபவம் பெற்று, இப்போது ஓய்வில் தமிழ் இலக்கிய படைப்புப் பணியில் முழு நேரமும் ஈடுபட்டிருக்கிறார். 1960ம் ஆண்டு முதல் இவரது விஞ்ஞானக் கட்டுரைகள், கதைகள், கட்டுரைகள் பல கலைமகள், மஞ்சரி, தினமணிக் கதிர், இதயம் பேசுகிறது, மயன், தாய், காலம் இதழ்களில் வெளி வந்துள்ளன. இவரது ஆக்க வினைகளுக்கு அணுசக்தி நூல் 1964 இல் சென்னை பல்கலைக் கழகத்தின் மாநில முதற்பரிசு பெற்றது. கணினித் தமிழ்வலைப் பதிவுகள் பின்னிப் பிணைக்கும் புதிய உலகிலே, கடந்த 15 ஆண்டுகளாக 800 மேற்பட்ட விஞ்ஞானக் கட்டுரைகள், கவிதைகள், கதைகள், நாடகங்கள் பற்பல அம்பலம், திண்ணை, பதிவுகள், அந்தி மழை, நதியலை, வல்லமை போன்ற வலைத் தளங்களில் பல்லாண்டுகள் வந்துள்ளன. இவரது நீண்ட தமிழ் நாடகங்கள் மும்பையிலும், சென்னை கல்பாக்கத்திலும் அரங்கேறியுள்ளன. இதுவரை 25 நூல்கள் வெளிவந்துள்ளன: ஆக்க வினைகளுக்கு அணுசக்தி, வானியல் விஞ்ஞானிகள், அணுசக்தி, தாகூரின் தமிழ்க் கீதாஞ்சலி, அணுவின் ஆற்றல், இந்திய விஞ்ஞான மேதைகள், சீதாயண நாடகம், சீதாயணம் படக்கதை, கீதாஞ்சலி, ஆபிரஹாம் லிங்கன், சாக்ரடிஸ், நெப்போலியன், ஜோன் ஆஃப் ஆர்க், முக்கோணக் கிளிகள் படக்கதை, கலீல் கிப்ரான் கவிதைகள், விண்வெளி வெற்றிகள், அணுமின்சக்தி பிரச்சனைகள், மெய்ப்பாடுகள், அணுசக்தியே இனி ஆதார சக்தி, நைல் நதி நாகரீகம், உலகிலே உன்னத பொறியியற் சாதனைகள், எழிலரசி கிளியோபாத்ரா, காதல் நாற்பது, உன்னத மனிதன், பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் (தொகுப்பு 1 & 2), Eco of Nature [English Translation of Environmental Poems].

Write a Comment [மறுமொழி இடவும்]


× three = 27


Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.