படக்கவிதைப் போட்டி (115)

план модернизации украины பவள சங்கரி

அன்பிற்கினிய நண்பர்களே!

வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

DSC_0884
69940943@N05_r http://www.lesfeignasses.com/tech/audi-100-istoriya.html audi 100 история பவள சங்கரி எடுத்த жена эдди мерфи இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் оптика depo каталог திருமதி. சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (10.06.2017) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும், தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

போட்டியின் நடுவரான планы на июль 2 мл гр திருமதி. மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும், பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையுமபெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்.

editor

நிர்வாக ஆசிரியர், வல்லமை மின்னிதழ்

Facebook Twitter Flickr 

Share

About the Author

editor

has written 1077 stories on this site.

நிர்வாக ஆசிரியர், வல்லமை மின்னிதழ்

5 Comments on “படக்கவிதைப் போட்டி (115)”

 • ரா. பார்த்த சாரதி
  R.Parthasarathy wrote on 10 June, 2017, 13:10

  பூம், பூம் மாட்டுக்காரன் வாசலில் வந்து நின்றான்

  வீடுதோறும் நல்ல சேதி சொல்லி அழைத்தான்

  வளர்க்கும் காளை மாட்டிற்கு அலங்காரம் செய்தான்

  அதனை வீட்டில் உள்ளவர்க்கு வணக்கம் செய்ய சொன்னான் !

  நிலம் காய்ந்து போனதால், பிழைப்பு தேடி மாட்டுடன் செல்கின்றான்

  கால் வயிற்று கஞ்சி குடிப்பதற்கு அதனை காட்டி பிழைக்கின்றான்

  ஈட்டிய பொருளில் தானும் உண்டு, அம்மாட்டினையும் காக்கின்றான்

  நல்லெண்ணம் கொண்டு அவன் கூறுவதை சற்றே நம்புகின்றான் !

  அவன் கேட்பதோ பழம் துணியும், சிறிது அரிசியும், பணமும்

  அவன் வந்ததை கண்டு நாய் விரட்டுவது போல் அதிகாரமும்,

  கடன்காரனை பார்த்தது போல் அவனை விரட்டி அடிப்பதும் ,

  ஏனோ முன் ஜென்மத்தில் பயனாய், நம்மிடம் கையேந்தி நிற்பதும் !

  அவனும் மனிதன்தான் என்ற எண்ணம் வேண்டும்

  மனிதநேயம் கொண்டு அவன் குறை தீர்க்கவேண்டும்

  அவன் நிலை கண்டு உதவ முன் வர வேண்டும் ,

  அந்த ஏழையின் சிரிப்பில் இறைவனை காணவேண்டும் !

  முடிந்த வரையில் பிறர்க்கு கொடுத்து உதவ வேண்டும்

  உனது தர்மம் சிறுது எனினும் பின், உன் தலைமுறையை காக்கும்

  ஒல்லும் வகையான் அறத்தை செய் என்கிறார் வள்ளுவர்

  ஒரு மனிதனும்,வாயில்லா ஜீவன் வாழ்கிறது என நினைக்கவேண்டும்!

  ரா. பார்த்தசாரதி

 • செண்பக ஜெகதீசன்
  Shenbaga jagatheesan wrote on 10 June, 2017, 19:14

  எல்லாமே…

  மன்னர் வேடம் போட்டால்தான்
  மறுநாள் உண்ண வழிபிறக்கும்
  தன்மை எங்கும் பொதுவேதான்
  தாங்காப் பசியை ஆற்றிடத்தான்,
  தின்ன உணவு தேடியேதான்
  தெருவி லெங்கும் அலைவதுவும்,
  சின்னப் பிள்ளைகள் மனமகிழ்ந்து
  சிரித்திட பூம்பூம் மாட்டுடனே…!

  -செண்பக ஜெகதீசன்…

 • பெருவை பார்த்தசாரதி
  பெருவை பார்த்தசாரதி wrote on 10 June, 2017, 23:29

  மங்களேஸ்வரி மங்களமா அருள்வா..பூம் பூம் மாட்டுக்காரன்
  =======================================================

  கற்பனைவளத்தோடு கல்லிலே கலைவண்ணம் காட்டி
  —கல்லையும் பேசசிரிக்க வைத்தான் தம்கைத்திறத்தால்!
  வாழும்கலையறிந்து கலாச்சார வழியறிந்து வகையாய்
  —வாயில்லா ஜீவனையும் பேசவைத்தான் தன்சைகையால்!

  அரிய பழந்தமிழ்க் கலையாய் பூம்பூம் மாடுண்டு!
  —அருகிவரும் கலையாக ஆனதுவு மெங்கள்கலையே!
  அலங்கார ஆடையுடன் ஆரூடம் சொல்லும்ஜீவன்!
  —அருங்கலை வளர்க்கும் மாட்டை வாங்கவிற்கமுடியாது!

  மக்களப்பெத்த மவராசி!..புள்ளயப்பெத்த புண்ணியவதி!
  —மங்களேஸ்வரி வந்துருக்கா! மங்களமாவுன வாழ்த்துவா!
  பாட்டுடன் இதுபோல வீடுவீடாய்ச்சென்று நற்குறிநல்கும்
  —மாடுடன்பேசும் மனித நேயமுடையது ஆதியனெனுமினம்!

  குலத்தொழிலாய் குறிசொல்லி குடும்பம்பல காப்பதற்கு..
  —கொடுப்பதையே தானமாய்பெற கொம்புடன் பழக்கினான்!
  வீடுவீடாய்ச் சென்றுதலையாட்டி வித்தைபல காட்டி..
  —விருப்பமுடன் மனமுவந்து மனிதருடன் பேசவைத்தான்!

  நல்லகாலம் வருமென நல்வார்த்தை சொல்வோம்யாம்!
  —வாழ்க்கை விளிம்பிலேயே வாழ்நாள் முழுதும்நின்று..
  வீட்டுவாசலில் நல்வரவை எதிர்நோக்கும் மனிதர்களுக்கு..
  —வாழ்வியல் நலம்சொல்லும் நல்லமனிதர்கள் நாங்கள்!

  சிற்றன்னைக் கொடுமைபோல் பலகாலம் நாங்களும்
  —இயற்கையன்னை பரிவின்றி எம்ஜீவனுக்கு வழியில்லை!
  அடிமாடாய் ஆகாமல் அரசுதானதைக் காக்குமா.?
  —ஆண்டியாய்த் திரியுமெங்கள் வேதனையாருக்கும் புரியுமா?

  குடும்பமுண்டு ஆனால் குடும்பஅட்டை இல்லை?
  —வாக்குரிமையுண்டு வாக்காளர் அட்டை இல்லை?
  மரபுசார்ந்த யெம்வாழ்வின் மேலரசுமனம் வைக்குமா?
  —தனிக்கவனம் செலுத்த தலைசாய்க்குமா அரசு..?

  ஐந்தறிவில் பூம்பூம் மாடுனக்கு கலையில் பங்குண்டு!
  —ஆறறிவில் பூம்பூம்மாடென பட்டம் பெற்றவருமுண்டு!
  அனைத்துக்கும் ஆம் இல்லை தெரியுமானால்..
  —அருங்கவிதைக் கேள்விக்கும் பதில்சொல் மங்களேஸ்வரி!

 • பழ.செல்வமாணிக்கம் wrote on 11 June, 2017, 0:12

  நல்ல சேதி : கல்யாண சேதி சொல்ல காளை வந்தது!
  கழுத்தில் தாலி ஏறும் வேளை வந்தது! மாப்பிள்ளை
  காசு கேட்டதால் கல்யாணம் நின்றது!
  கல்யாணச் சந்தையில் மாப்பிள்ளை பாருங்கள்!
  பிள்ளையை விற்கும் பெற்றோரைப் பாருங்கள்!
  தன் மானம் விற்று, சன்மானம் கேட்கின்ற விபரீதம் பாருங்கள்!
  பிள்ளையின் படிப்பும், வேலையும் சந்தைப் பொருளான
  சங்கடம் பாருங்கள்!
  கரும்பு தின்ன கூலி கேட்கும் கேவலம் பாருங்கள்! வரதட்சணை உங்களை,
  மனைவி பேச்சுக்கு தலையாட்டும்
  பூம் பூம் மாடாய் மாற்றிய அவலம் பாருங்கள்!
  வரும் காலத்தில்,வரதட்சணை எனும் வார்த்தைக்கு
  தடை விதியுங்கள் !
  பெண்ணின் இதயத்தை தட்சணையாய்
  கேட்டிடுங்கள் !
  உங்கள் அன்பை பெண்ணுக்கு கை மாறாய்
  கொடுத்திடுங்கள்
  இனி வரும் நாட்களில் பூம் பூம் மாடுகள்
  கல்யாண சேதி சொல்லும்!
  வரதட்சணை வேண்டாம் , வாழ்க்கை துணை
  போதும், என்று சொல்லும் இளைஞர்களின்
  புகழ் சொல்லும் !

  நல்ல சேதி : கல்யாண சேதி சொல்ல காளை வந்தது!
  கழுத்தில் தாலி ஏறும் வேளை வந்தது! மாப்பிள்ளை
  காசு கேட்டதால் கல்யாணம் நின்றது!
  கல்யாணச் சந்தையில் மாப்பிள்ளை பாருங்கள்!
  பிள்ளையை விற்கும் பெற்றோரைப் பாருங்கள்!
  தன் மானம் விற்று, சன்மானம் கேட்கின்ற விபரீதம் பாருங்கள்!
  பிள்ளையின் படிப்பும், வேலையும் சந்தைப் பொருளான
  சங்கடம் பாருங்கள்!
  கரும்பு தின்ன கூலி கேட்கும் கேவலம் பாருங்கள்! வரதட்சணை உங்களை,
  மனைவி பேச்சுக்கு தலையாட்டும்
  பூம் பூம் மாடாய் மாற்றிய

  நல்ல சேதி : கல்யாண சேதி சொல்ல காளை வந்தது!
  கழுத்தில் தாலி ஏறும் வேளை வந்தது! மாப்பிள்ளை
  காசு கேட்டதால் கல்யாணம் நின்றது!
  கல்யாணச் சந்தையில் மாப்பிள்ளை பாருங்கள்!
  பிள்ளையை விற்கும் பெற்றோரைப் பாருங்கள்!
  தன் மானம் விற்று, சன்மானம் கேட்கின்ற விபரீதம் பாருங்கள்!
  பிள்ளையின் படிப்பும், வேலையும் சந்தைப் பொருளான
  சங்கடம் பாருங்கள்!
  கரும்பு தின்ன கூலி கேட்கும் கேவலம் பாருங்கள்! வரதட்சணை உங்களை,
  மனைவி பேச்சுக்கு தலையாட்டும்
  பூம் பூம் மாடாய் மாற்றிய அவலம் பாருங்கள்!
  வரும் காலத்தில்,வரதட்சணை எனும் வார்த்தைக்கு
  தடை விதியுங்கள் !
  பெண்ணின் இதயத்தை தட்சணையாய்
  கேட்டிடுங்கள் !
  உங்கள் அன்பை பெண்ணுக்கு கை மாறாய்
  கொடுத்திடுங்கள்
  இனி வரும் நாட்களில் பூம் பூம் மாடுகள்
  கல்யாண சேதி சொல்லும்!
  வரதட்சணை வேண்டாம் , வாழ்க்கை துணை
  போதும், என்று சொல்லும் இளைஞர்களின்
  புகழ் சொல்லும் !

 • பழ.செல்வமாணிக்கம் wrote on 11 June, 2017, 0:18

  மூன்று முறை கவிதை தவறுதலாக உள்ளிட்டு விட் டேன். ஒன்றை மட்டும் எடுத்துக் கொள்ளவும்

Write a Comment [மறுமொழி இடவும்]


× four = 12


Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.