தந்தையர் நாள் கவிதை

 

தந்தை
18.06.17

unnamed (2)

அன்னைக்கும் தனயன்
ஆண்மையில் பேரழகன்
இல்லத்தின் ஆணிவேர்
ஈசனாய்க் காப்பவன்
உன்னத சுமைதாங்கி
ஊர்மெச்சும் குணவான்
எளிமையைத் தனதாக்கி
ஏற்றத்திற்கு வழிவகுப்பவன்
ஐயமறுக்கும் ஆசான்
ஒப்பற்ற நண்பன்
ஓய்விலும் ஜீவநதி
ஔடதமாய் ஆறுதலில்
ஃதே தந்தையாம் தாயுமானவன்.

– கவிஞர் சித்ரப்ரியங்கா ராஜா,
திருவண்ணாமலை.

Share

About the Author

has written 784 stories on this site.

One Comment on “தந்தையர் நாள் கவிதை”

  • பழ.செல்வமாணிக்கம் wrote on 18 June, 2017, 16:40

    அருமை. தந்தையின் அன்பை , உயிரெழுத்துக்கள் வரிசையில் அழகு கவிதை படைத்து, தந்தை உயிருக்கு நிகர் என்பதை எழுதிய கவிஞருக்கு பாராட்டுக்கள்.

Write a Comment [மறுமொழி இடவும்]


8 × four =


Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.