unnamed (5)

பிறப்பென்பதே பிரமன் வகுத்த விதியாகும்
பிறப்புஇறப் பென்பதை முழுது மறியுமுன்னே

மறுஜென்மறிய மானிடர்கள் கண்டவழி எதுவோ?
இறுக இறைவனைப்பணின் மறுஜென்ம மிராதப்பா.!

நாலூர் மயானத்து நம்பான்ற னடிநினைந்து..
மாலூருஞ் சிந்தையர்பால் வந்தூரா மறுபிறப்பென

திருஞானசம்பந்தரின் தேவார ஞானஒளி பெற்று
பெரும்ஞானமுடன் ஏற்றாலினி மறுஜென்ம மிராது.!

ஜென்மலக்னத்தின் ஈறாரில் ராகுகேதிருந்தால் மறு
ஜென்மமினி இல்லை யென்பதும் ஜோதிடமாம்.!

மீண்டும் மீண்டும் பிறப்பதேமறு ஜென்மமாயின்
மீண்டும் நாமெப்படிப் பிறப்போ மெனும்கேள்வி?

மனதில்எழா? மனிதர்களிலை.! மறு ஜென்மமதை
மறுக்கமுடியா?கண்டுதெளி தறியா? நிலையுமுண்டு.!

எப்பிறவி எடுப்போமெனும்? எண்ணமினி வேண்டா
இப்பிறவி நற்பிறவியாவது ஐயமிலா உண்மையப்பா.!

இறந்தபின் யாரும்நமை மறக்க வேணாவெனும்
சிறக்க வாழும் சிந்தனையைச் சிரமேற்கொள்ள

அலைபாயும் மனதுக் கோரணை வேண்டுமப்பா.!
அதுதான்மறு ஜென்மமெனும் தீர்வான மார்க்கமாகும்.!

மனம்செலும் வழிதான் மனிதனின் வாழ்க்கையாம்
மனத்தின் மாண்பே மனிதன்வாழும் வழியதை..

விட்டுக் கொடுத்துப் கெட்டுப் போகாமலுனைக்
கட்டுப்படுத்த வெழுந்ததே மறுஜென்மத் தத்துவம்.!

சிரிக்கத் தெரிந்த சிறந்தபிறவி யிதைவிடுத்து..
மரித்துமறுபடி சிரிக்கத் தெரியா விலங்கெனும்..

மறுபிறவி வேண்டா மனிதவாழ்வு நிலைபெற..
சிறுபிள்ளை போல் வெள்ளைமனம் வேண்டும்.!

அரிதரிது மானிடராய் பிறத்தல் அரிதெனும்..
அருபெருந்தகைப் பிராட்டியின் அறிவுரை அறிந்து

மறுஜென்மத்தில் மீண்டும் நாம் மானிடராய்ப்
பிறப்பதற்கே மாதவம் செய்திடுவோம் நாளும்.!

புனிதமாய் புவியிலது புண்ணியப் பிறவியாமதுவே
மனிதப் பிறவியெனும் பெருமகத்தான பிறவியப்பா.!

அமைதி நிம்மதி ஒழுக்கமிக அவசியமெனும்..
நியதியை நிலைநாட்ட நினைவில்வை மறுஜென்மம்.!

இப்பிறப்பில் தோன்றி பிறந்தபயன் அறியுமுன்னே
மறுபிறப்பை அறியும் வினாவுக்கு விடைகொடுமுன்..

இப்பிறப்பில் பாட்டால் பெறும் பயனையெல்லாம்
மறுபிறப்பிலும் பெறுவதே மறுஜென்ம அவாவென..

ஊறுமூற்றாக எழும்சொல்லை உலகுபயனுற எழுதினால்
மறுஜென்மத்தில் கவிஞனாகநீ கண்டிப்பாய் பிறப்பாய்..!
******************************************************************
நன்றி தினமணி கவிதைமணி வெளியீடு.. 26-06-17

நன்றி படஉதவி..கூகிள் இமேஜ்

அன்புடன்
பெருவை பார்த்தசாரதி

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *