பாரசீக மூலம் : உமர் கயாம் ரூபையாத்

ஆங்கில மூலம் : எட்வேர்டு ஃபிட்ஜெரால்டு

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா.

+++++++++++++++

unnamed

[55]

முதிய கயாம் திராட்சை ரசம் குடிக்கையில்

நதிக்கரை ஓரம் ரோஜா மலர் மிதக்க,

தேவதை யானவள் கருநிற ஒயினுடன்

உன்னைக் கவர வந்தால் பின் வாங்காதே.

[55].

While the Rose blows along the River Brink,
With old Khayyam and ruby vintage drink:
And when the Angel with his darker Draught
Draws up to Thee – take that, and do not shrink.

[56]

அஞ்சாதே! இன்றேல் உன் வசிப்புக் காலம்

முடிந்து போகும், அடையாளம் மறந்து போய்,

நிரந்தர ஊழ்சகி ஊற்றிய குவளையில் நம்போல்

குமிழிகள் கோடி; மேலும் படைக்க ஊற்றும்.

[56]

And fear not lest Existence closing your
Account, should lose, or know the type no more;
The Eternal Saki from the Bowl has pour’d
Millions of Bubbls like us, and will pour.

[57]

நீயும் நானும் திரை மறைவில் கடந்தோம்

நீண்ட நீண்ட தூரம் உலக விளிம்பு வரை,

நமது பிறப்பு, இறப்புக் கணக்கெடுத்தால்

கடலளவு அகண்ட கூழாங்கல் எண்ணிக்கை.

[57]
When You and I behind the Veil are past,
Oh but the long long while the World shall last,
Which of our Coming and Departure heeds
As much as Ocean of a pebble-cast.
++++++++++++++++++

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *