இந்த வார வல்லமையாளர்! (231)

செல்வன்

இவ்வார வல்லமையாளராக Inter University Centre for Astronomy & Astrophysics (IUCAA),&  Indian Institute of Science Education and Research (IISER) (புனே) ஆகிய அறிவியல் ஆய்வு மையங்களை சேர்ந்த இந்திய வானவியல் விஞ்ஞானிகள் டீமை தேர்ந்தெடுப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

அவர்கள் பெயர்:

ஜாய்தீப் பாக்சி
சிஷிர் சங்காயன்
பிரகாஷ் சர்க்கார்
சோமக் ராய்சவுத்ரி
ஜோ ஜேக்கப்
ப்ரதிக் தபாடே

(ஆங்கிலத்தில் Joydeep Bagchi, Shishir Sankhyayan, Prakash Sarkar, Somak Raychaudhury, Joe Jacob, Pratik Dabhade)

இந்த ஆறு விஞ்ஞானிகளும் புதிதாக ஒரு நட்சத்திரக் கூட்டத்தையே (கேலக்ஸி) கண்டுபிடித்துள்ளனர். இதற்கு சரஸ்வதி என பெயர் சூட்டியுள்ளனர். அதிலும் சரஸ்வதி கேல்க்ஸியானது சூப்பர்க்ளஸ்டர் எனப்படும் மிகப் பெரிய கேலக்சி வகையை சார்ந்தது.

1

சரஸ்வதி கேலக்ஸி பூமியில் இருந்து 400 கோடி ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளது. இதன் பரப்பளவு சுமார் 60 கோடி ஒளியாண்டுகள் ஆகும். இதில் உள்ள நடசத்திரங்களின் எண்ணிக்கை (மூச்சை பிடித்துக்கொள்ளவும்) 20 லட்சம் ஆயிரம் கோடி.

பிரபஞ்சம் தோன்றி 1000 கோடி ஆண்டுகள் கழித்து சரஸ்வதி தோன்றியிருக்கலாம் என அனுமானிக்கப்படுகிறது. பிரபஞ்சம் எப்படி தோன்றியது என்பது குறித்த நம் கணக்கீடுகளை சரஸ்வதியை ஆய்வதன் மூலம் மாற்றியமைக்கும் வாய்ப்புகள் இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இந்த மகத்தான சாதனையை செய்த இந்திய விஞ்ஞானிகளைப் பாராட்டி அவர்களை இவ்வார வல்லமையாளராக தேர்ந்தெடுப்பதில் வல்லமை மகிழ்ச்சி அடைகிறது.

இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், vallamaiselva@gmail.com, vallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179

செல்வன்

பொருளாதார வல்லுநர்

Share

About the Author

has written 61 stories on this site.

பொருளாதார வல்லுநர்

3 Comments on “இந்த வார வல்லமையாளர்! (231)”

 • இன்னம்பூரான்
  Innamburan wrote on 17 July, 2017, 4:34

  கேட்கணுமா! செல்வனின் தேர்வு அபாரம். அதுவும் பெயர்களை ஆங்கிலத்தில் கொடுத்தது பேருதவி. 

 • அண்ணாகண்ணன்
  அண்ணாகண்ணன் wrote on 17 July, 2017, 10:42

  மிகுந்த மகிழ்ச்சி அளிக்கும் தேர்வு. வல்லமையாளர்கள் அறுவருக்கும் வாழ்த்துகள். சரஸ்வதி கேலக்சி, வானவியலில் புதிய உண்மைகளை வெளிக்கொணரும் என எதிர்பார்ப்போம்.

 • க. பாலசுப்பிரமணியன்
  க. பாலசுப்ரமணியன் wrote on 18 July, 2017, 5:46

  பாராட்டுக்கள். அருமையான தேர்வு

Write a Comment [மறுமொழி இடவும்]


9 + six =


Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.