’’வெண்பூ வெண்பாக்கள்’’….!

 

’’வரலஷ்மி விரதம் ஆச்சு…அடுத்து வரவீணா நமஸ்துப்யம்’’….!
———————————————————————————————————————
நாணல் இடையாளாம் ,நாவன்மை உடையாளாம்
பூணல் அயன்மணந்த புண்ணியளாம்-வீணில்
அலையாதெ நெஞ்சே அறுபத்தி நான்கு
கலையாளை சேரக் கவி….(1)

நாக்கில் நரம்பின்றி நாளும் வசைபாடி
தீக்குள் குளிர்காயா தேநெஞ்சே -வாக்கில்
கலைவாணி வந்து குடியேறும் வண்ணம்
அலைபாய்ந் திடா(து) அடங்கு….(2)

ரவியுடன் சுற்றி ரகசியங்கள் கற்ற
கவிஅனுமன் கானம் குளிரப் -புவிமிசை
பாயப் பொழிவாள் படிக நிறத்தாள்
ஆய கலையாள் அருள்….(3)

வந்தனம் செய்ய வரமளிக்கும் வாணியால்
மந்தனும் ஆவானே மாகவி -சிந்தையும்
வாக்கும் செயலுமவள் போக்கே துதித்திட
தேக்கும் வடிக்குமே தேன்….(4)

பலகலைக்கு ஞானி பயில்வோர்க்கு தோணி
தளைதப்பா தீந்தமிழின் தேனி -நிலைகுலைந்து
நான்நீ எனப்பேசும் நாநீ நுழையாயே
வாணி வரமருள வா’’….(5)

தேஜ சொரூபிணீ தேவி சரஸ்வதி
ராஜ ஷியாமளா ரக்ஷிநீ -பூஜை
புனஸ்காரம் எந்தன் நமஸ்காரம் தாயே
மனக்கிலேச யாழினை மீட்டு….(6)….கிரேசி மோகன்…!

Share

About the Author

கிரேசி மோகன்

has written 1784 stories on this site.

எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.

2 Comments on “’’வெண்பூ வெண்பாக்கள்’’….!”

 • A. Rajagopalan wrote on 11 August, 2017, 15:58

  பாடல் 2ன் ஈற்றடி
  அலைபாய்ந் திடா(து) அடங்கு என்பது, அலைபாய்ந் திடா தடங்கு என்றாகும்போது வெண்டளை பிறழ்ந்துவிடும்.
  அலைபாய்ந் திடாதே அடங்கு என்றிருந்தால் சரியாக இருக்கும்.

  அ.இராஜகோபாலன்

 • கிரேசி மோகன்
  crazy mohan wrote on 11 August, 2017, 23:00

  சுட்டிக் காட்டியமைக்கு நன்றி சார்….விஜயதசமிக்குள் ‘’மூவரைப்’’ பற்றி எழுதிவிடவேண்டு என்ற ஆர்வக் கோளாறால் தளை தட்டிவிட்டது….புத்தகமாகப் போடும் முன் வெண்பா ஞானம் மிக்கவரிடம், தளை,சீர்,க்,ச் போன்ற அச்சுப்பிழை பிச்சப்பாகளை அடியேன் திருத்திக் கொள்வது மரபு….அன்பன் கிரேசி மோகன்….

Write a Comment [மறுமொழி இடவும்]


7 × = seven


Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.