குறளின் கதிர்களாய்…(178)

follow почему младенец трет глаза руками செண்பக http://www.ilgiardinodeisognidipetris.it/discus/skachat-audio-stihi-dlya-detey.html ஜெகதீசன்

click here பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும்
http://intpec.de/disqus/74-karta-strogino-s-ulitsami.html எண்ணிய தேயத்துச் சென்று. (திருக்குறள் -753: பொருள் செயல்வகை) click  

source url புதுக் கவிதையில்…

சேரும் செல்வமோர்
அணையா விளக்கு…
அது
சேர்ந்தவர்க்கு http://www.cannabisclinic.doctor/disqusion/rabochaya-instruktsiya-na-oborudovanie.html ,
எண்ணிய தேசமெலாம் சென்று
இருளெனும் பகையழிக்கும்…! here  

குறும்பாவில்…

செல்வமெனும் அணையா விளக்கு,
சேர்ந்தவர் விரும்பும் தேசமெலாம் சென்று
இருளாம் பகையை இல்லாமலாக்கும்…! 

மரபுக் கவிதையில்…

இருளை யகற்றி ஒளிகொடுக்கும்
     -என்றும் அணையா விளக்காகி,
பொருளது அதனைச் சேர்ப்பவர்க்குப்
    -பெரிதும் துணையாய் வந்திடுமே,
விரும்பும் தேசம் எங்கேயும்
-விரைந்தே உடனே சென்றாங்கே
பொருந்தா இருளாம் பகையழித்துப்
   -போகுமே பொருளாம் விளக்கதுவே…! 

லிமரைக்கூ…

அணையா விளக்காகும் பொருளே,
அதுவே விரும்பும் தேசமெலாம் சென்றாங்கே
போக்கிடும் பகையெனும் இருளே…! 

கிராமிய பாணியில்…

சேருசேரு செல்வஞ்சேரு
நல்லபடியா செல்வஞ்சேரு…
சேருஞ்செல்வம் ஒருவெளக்கு,
சூறக்காத்து அடிச்சாலும்
அதுவொரு அணையாவெளக்கு…
அந்த வெளக்குதான்
விரும்புற
அந்நிய தேசமெல்லாம் போயி
பகங்கிற இருட்டப்
பக்குவமா அழிச்சிடுமே…
அதுக்கு,
சேருசேரு செல்வஞ்சேரு
நல்லபடியா செல்வஞ்சேரு…!

 

 

 

 

செண்பக ஜெகதீசன்

செண்பக ஜெகதீசன்

இதுவரை: இரைதேடுவதுடன் இறையும் தேடிய அரசுப்பணி
(நிர்வாக அதிகாரி-நெல்லையப்பர் திருக்கோவில்).
இப்போது: மேலாளர், காசித்திருமடம், ஆச்சிராமம்(சுசீந்திரம்).
ஓய்வுநேரப் பணிகள்: ரசனை(இயற்கை, இலக்கியம்),
எழுத்துப் பணிகள் (பெரும்பாலும் கவிதைகள்)…
கவிதை நூல்கள்-6..
வலைதளங்கள்: வார்ப்பு, திண்ணை,
நந்தலாலா, வல்லமை, முத்துக்கமலம்…

Share

About the Author

செண்பக ஜெகதீசன்

has written 327 stories on this site.

இதுவரை: இரைதேடுவதுடன் இறையும் தேடிய அரசுப்பணி (நிர்வாக அதிகாரி-நெல்லையப்பர் திருக்கோவில்). இப்போது: மேலாளர், காசித்திருமடம், ஆச்சிராமம்(சுசீந்திரம்). ஓய்வுநேரப் பணிகள்: ரசனை(இயற்கை, இலக்கியம்), எழுத்துப் பணிகள் (பெரும்பாலும் கவிதைகள்)… கவிதை நூல்கள்-6.. வலைதளங்கள்: வார்ப்பு, திண்ணை, நந்தலாலா, வல்லமை, முத்துக்கமலம்...

Write a Comment [மறுமொழி இடவும்]


+ 6 = nine


Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.