பி வி சிந்துவுக்கு நல்வாழ்த்துகள்

1

செல்வன்

இவ்வார வல்லமையாளராக பி வி சிந்து அவர்களை அறிவிக்கிறோம்

ரியோ ஒலிம்பிக்ஸ் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றவர் பிவி சிந்து. அவர் புல்லால கோபிசந்தின் மாணவி. உலககோப்பை போட்டியில் அவரிடம் தோற்று வெண்கலப் பதக்கம் பெற்றவர் ஜப்பானிய வீராங்கனை நொசோமி ஒசுகாரா. ஆனால் இதற்குமுன் லண்டன் ஓபனில் வெற்றி பெற்றிருந்தார். இருவருக்குமிடையே சச்சிந் ஷேன் வார்ன் இடையே இருந்தது போல ஆரோக்கியமான போட்டி இருந்து வந்தது.

இந்த சூழலில்  கொரியா ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி சியோல் நகரில் நடைபெற்றது. பெண்கள் ஒற்றையர் பிரிவில் காலிறுதியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 21௧9, 16௨1, 21௰ என்ற செட் கணக்கில் ஜப்பானின் மினட்சு மிதானியை தோற்கடித்து அரை இறுதியில் நுழைந்தார்.

அரை இறுதியில் சீனாவின் ஹி பிங்ஜியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார். இறுதிப் போட்டியில் ஜப்பானின் ஓகுகாராவை எதிர்கொண்டார் சிந்து. உலகக் கோப்பை போட்டியில் ஓகுகாராவிடம் சிந்து தோற்றிருந்தார். இந்த தோல்விக்கு பழிதீர்க்கும் வகையில் சிந்துவின் ஆட்டத்தின் அனல் பறந்தது. ஓகுகாராவை 22௨0,11௨1,21௧8 என்ற செட் கணக்கில் வீழ்த்தி கொரிய ஓபன் பேட்மிண்டன் சாம்பியன் பட்டத்தை வென்றார் சிந்து. இப்பட்டத்தை வெல்லும் முதலாவது இந்திய வீராங்கணை பி.வி. சிந்து என்பது குறிப்பிடத்தக்கது.

1

இதன்மூலம் இப்பட்டத்தை வெல்லும் முதலாவது இந்திய வீராங்கனை பி.வி.சிந்து என்ற சரித்திரம் படைத்துள்ளார். பிவி சிந்துவுக்கு சச்சின் டெண்டுல்கர், வீரேந்தர் ஷேவக், ஆந்திர முதல்வர் சந்திரசேகர ராவ் மற்றும் பாரதப்பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

கிரிக்கெட் மட்டுமே விளையாட்டு என நம்பிக்கொன்டிருந்த பலரையும் பாட்மிண்டன் பக்கம் திருப்பியதாலும், பெண்களுக்கு நம்பிக்கையூட்டும் நட்சத்திரமாகத் திகழ்வதாலும் சிந்துவின் வெற்றியை இந்தியப் பெண்கள் அனைவரின் வெற்றியாகவும் கருதி வல்லமை அவரை வாழ்த்துவதில் பெருமை அடைகிறது.

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “பி வி சிந்துவுக்கு நல்வாழ்த்துகள்

  1. வல்லமையாளர் சிந்து அவர்களுக்கு வாழ்த்துகள்.

    கடந்த ஆண்டு நான் எழுதியது, இப்போதும் பொருந்துகிறது:

    பந்து விளையாடு அதில் முந்தி விளையாடு, புயல் பிந்த விளையாடு மகளே
    வந்து விளையாடு வா எழுந்து விளையாடு நீ புகுந்து விளையாடு புயலே
    உந்தி விளையாடு நகை சிந்தி விளையாடு புகழ் தந்து விளையாடு எழிலே
    சிந்து விளையாடு புதுச் சிந்து இசைபாடி, மணிச் சிந்து விளையாடு மயிலே!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *