கவியோகி வேதம்

 

 

amman

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

எவள்என்றன் முடிகோதி  “அஞ்சேல்நீ!” என்றாளோ

இவளே இவளேஎன் துர்க்கைஅம்மை!

எவள்என்றன் கவலையெல்லாம்  ‘தன்’கவலை என்றாளோ

இவளே இவளேஎன் துர்க்கைஅம்மை!…………1

.

எவளென்றன் பயமெல்லாம்  தீர்த்தென்னை அணைத்தாளோ

இவளே இவளேஎன்  அன்பு–அம்மை!

எவளென்றன் வாழ்வினிலே ஒளிகூட்டி நிற்பாளோ,

இவளே-   ஆம்என்றன்  கருணை-அம்மை!…….2

.\

நாடிக்குள் கசடெல்லாம்  நீக்கிப்பின் பலம்தந்து

‘நல்மூச்சால்’ உயிர்ப்பிக்கும்  பெரும்தேவி!

பாடிநின்றேன், அழுதுவிட்டேன், பரவசத்தில் மிதந்துவிட்டேன்!

பளீர்என்று  அருள்தந்தாள் சுடர்த்தேவி!! ………..3

 

அன்று-ஒரு ராட்சசனின்  ஆணவத்தைக் குதிபோட்டு

அடக்கினையோ என்றதற்குச் சிரிக்கின்றாள்!

இன்றெதற்குப் பழையகதை? என்னுடைய நாத்திகத்தை

இளஞ்சிரிப்பால் மாற்றியதைச் சொல்கின்றாள்!….4

 

எதற்கம்மா ஆயுதங்கள் இத்தனையும் வைத்து-என்னை

இன்னமும்நீ  பயமுறுத்தல் வேணும்?என்றேன்!

கதைஇல்லை என்குழந்தாய்!  எளியவனாய்  மாறுமுன்னைக்

கண்டவர்கள் துன்புறுத்தல் தடுக்கஎன்றாள்! ….5

..

.      எலுமிச்சம்  பழமாலை, தனி-உன்றன் விருப்பமதோ?

என்றேநான்  கேட்டதற்கும் பெரும்சிரிப்பு!

கொலுவிருக்கும் அழகினுக்கும், என்மேலுன் பித்தினையே

குறைப்பதற்கும் வைத்துள்ளேன் எனச்சொன்னாள்!…….6

.

எத்தனைதான்  கேள்வியுடன்  துர்க்கையம்மை இவளைநான்

இம்சித்தால்  கூடஇவள் புன்னகைப்பாள்!

முத்தனைய  செல்விஇவள்! மோகமதைத் தூண்டுபவள்!

முழுதுமென்னைத் தந்ததனால் நெஞ்சில்வைத்தாள்!….7

….

அடுத்தஒரு  பிறவியிலும் உரிமையுடைக் குழவியென

அழகாக  எனை-ஆக்கு துர்க்கையம்மா!!

எடுத்துவிடு மந்திரச்சொல், கொடுத்துவிடு உன்நேசம்!

எப்போதும் இடுப்பிலென்னைத் தூக்கம்மா!

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “ஓம்.சக்தி

  1. அதுதானே எம் அன்னையின் அருமை,பெருமை, பொறுமை, வளமை, கருணை,! கவி வேதத்தின் கவிதைஅருமை ஆழம், இனிமை.,

  2. அருமையான கவிதையிது ஐயா – துர்கையின்
    பெருமைகளை அழகாக பறைசாற்றும்
    அருமையான கவிதையிது ஐயா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *