உயர் நோட்டு மதிப்பிழப்பின் ஓராண்டில் மக்களின் நிலை!

1

பவள சங்கரி

தலையங்கம்

உயர் மதிப்பு நோட்டு செல்லாது என்று அறிவித்தலும், விற்பனை மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) போன்றவற்றை மக்கள் பெருவாரியாக எதிர்ப்பதாக எதிர் கட்சிகள் பிரச்சாரம் செய்தாலும் மக்கள் பிரதமர் மோடியின் நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவு தெரிவித்துள்ளதாக எக்கனாமிக் டைம்ஸ் எடுத்த கருத்துக்கணிப்பு வெளியிட்டுள்ளது. 38% பேர் முழு ஆதரவும், 30% பேர் நன்மைகளும் தீமைகளும் இருப்பதாகவும், 32% பேர் மட்டுமே எதிர்ப்பதாகவும் இதனால் வேலையிழப்பு ஏற்பட்டதாகக் கூறுவது தற்காலிகமானதே என்றும் பெருவாரியாகத் தெரிவித்துள்ளனர். குறைந்த சதவிகிதத்தினரே இந்த வேலையின்மை பிரச்சனை நிரந்தரமானது என்றும் தெரிவித்துள்ளனர். 2000 ரூபாய் நோட்டை முடக்குவதற்கும் மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். தேர்தலில் இதனால் மக்களின் அதிருப்தி என்பது மாயத்தோற்றமாகத் தெரிவதாகப் புலப்படுகிறது.

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “உயர் நோட்டு மதிப்பிழப்பின் ஓராண்டில் மக்களின் நிலை!

  1. மக்களின் அதிருப்தி என்பது, எதிர்க் கட்சிகளால் ஊதிப் பெரிதாக்கப்பட்ட தோற்றம். உண்மையில் இது ஒரு தற்காலிக அசவுகரியமே. தொலைநோக்கில் இவற்றால் நன்மையே விளையும். இந்தத் திட்டங்களை உளத் தூய்மையோடு, தேச நலனுக்காக நடைமுறைப்படுத்திய உறுதியைப் பாராட்டுகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *