நீயே சிந்தித்துப்பார்

 

image (6)

 

 

 

 

 

 

 

 

மூலம் : பீட்டில்ஸ் பாடகர்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

 

ஓரிரு வார்த்தைகள் உள்ளன

உனக்கு நான்,

நேரே சொல்லிவிட,

நீ செய்யும் தகாத வினைகள் பற்றி !

நம் கண்களை மூடிச் செய்தால்

கிடைக்கும்,

நல்ல வெகுமதிகள் என்று நீ

சொல்லிக் கொண்டிருக்கும் பொய்களைப்

பற்றித்தான் !

விரும்புவதைச் செய் நீ !

போக நினைக்கும் இடத்துக்கு

ஏகு நீ ! ஆனால்

நீயே சிந்தித்துப் பார் முதலில் !

 

ஏனெனில்

நானிருக்கப் போவ தில்லை

உன்னோடு ! நீ

விரும்பும் ஊழல் வாழ்க்கையின்

பின்னே

உன்னை விட்டுவிட்டு

விலகி நான் வந்து விட்டேன் !

இப்போதும்

உன்னால் காண முடிய வில்லை

ஆயினும், மனதில் நீ

தீர்மானம் செய்து விட்டாய் !

 

பெருந்துயர் விளையப் போகிறது !

உன்மனம் கல்லானது !

ஆயினும்

மென்மேலும் சிந்தித்துப் பார்,

உனக்காக வேணும் !

உன் எதிர்காலம் சீராய்த்

தெரியுது ! நீ

புரிந்த துன்பச் செய்கை யாவும்,

திருத்திக் கொள்ள உனக்குத்

தருணம் உள்ளது,

ஒருகணம் சிந்தித்துப் பார் !

 

 

Share

About the Author

சி.ஜெயபாரதன்

has written 658 stories on this site.

அணுசக்தி ஆக்கப் பணியில் பொறியியல் துறைகளில் 45 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியா, கனடாவில் அனுபவம் பெற்று, இப்போது ஓய்வில் தமிழ் இலக்கிய படைப்புப் பணியில் முழு நேரமும் ஈடுபட்டிருக்கிறார். 1960ம் ஆண்டு முதல் இவரது விஞ்ஞானக் கட்டுரைகள், கதைகள், கட்டுரைகள் பல கலைமகள், மஞ்சரி, தினமணிக் கதிர், இதயம் பேசுகிறது, மயன், தாய், காலம் இதழ்களில் வெளி வந்துள்ளன. இவரது ஆக்க வினைகளுக்கு அணுசக்தி நூல் 1964 இல் சென்னை பல்கலைக் கழகத்தின் மாநில முதற்பரிசு பெற்றது. கணினித் தமிழ்வலைப் பதிவுகள் பின்னிப் பிணைக்கும் புதிய உலகிலே, கடந்த 15 ஆண்டுகளாக 800 மேற்பட்ட விஞ்ஞானக் கட்டுரைகள், கவிதைகள், கதைகள், நாடகங்கள் பற்பல அம்பலம், திண்ணை, பதிவுகள், அந்தி மழை, நதியலை, வல்லமை போன்ற வலைத் தளங்களில் பல்லாண்டுகள் வந்துள்ளன. இவரது நீண்ட தமிழ் நாடகங்கள் மும்பையிலும், சென்னை கல்பாக்கத்திலும் அரங்கேறியுள்ளன. இதுவரை 23 நூல்கள் வெளிவந்துள்ளன: ஆக்க வினைகளுக்கு அணுசக்தி, வானியல் விஞ்ஞானிகள், அணுசக்தி, தாகூரின் தமிழ்க் கீதாஞ்சலி, அணுவின் ஆற்றல், இந்திய விஞ்ஞான மேதைகள், சீதாயண நாடகம், சீதாயணம் படக்கதை, கீதாஞ்சலி, ஆபிரஹாம் லிங்கன், சாக்ரடிஸ், நெப்போலியன், ஜோன் ஆஃப் ஆர்க், முக்கோணக் கிளிகள் படக்கதை, கலீல் கிப்ரான் கவிதைகள், விண்வெளி வெற்றிகள், அணுமின்சக்தி பிரச்சனைகள், மெய்ப்பாடுகள், அணுசக்தியே இனி ஆதார சக்தி, நைல் நதி நாகரீகம், உலகிலே உன்னத பொறியியற் சாதனைகள், எழிலரசி கிளியோபாத்ரா, காதல் நாற்பது, உன்னத மனிதன்.

Write a Comment [மறுமொழி இடவும்]


2 × seven =


Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.