தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்

திருப்பூர் மாவட்டம்

* டிசம்பர் மாதக்கூட்டம் .3/12/17 7 ஞாயிறு மாலை.5 மணி.. பி.கே.ஆர் இல்லம்., பி.எஸ் சுந்தரம் ரோடு (மில் தொழிலாளர் சங்கம்.), திருப்பூரில் நடைபெற்றது

தலைமை : எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன்

” நாவல் அனுபவம் “ என்ற தலைப்பில் திரைப்பட இயக்குனர் ராகவன் தம்பி, கோவை இரா .முருகவேள் ஆகியோர் பேசினர் .

நாவலாசிரியரும், மொழிபெயர்ப்பாளரும், வழக்கறிஞருமான கோவை இரா.முருகவேள் உரையில்…

“வனங்களில் அணை கட்டியும், சுரங்கம் அமைத்தும் இயற்கை வளங்களைச் சுரண்டியது மத்திய, மாநில அரசுகள்தான். பழங்குடியினர் இருக்கும் இடங்களில்தான் வன விலங்குகள் பாதுகாப்பாக இருக்கின்றன. வன உரிமைச் சட்டம் வருவதற்கு முன்பு பழங்குடியினருக்குப் பல அநீதிகள் நடந்திருக்கின்றன. ‘ரிசர்வ் ஃபாரஸ்ட்’ என்ற பெயரில் அவர்கள் வசிக்கும் வீடுகளில் இருந்து துரத்தப்பட்டிருக்கின்றனர். காய்ந்த சுள்ளிகளை வனத்துக்குள் செல்லும் பழங்குடியினர்களை வனத்துறையினர் விரட்டி அடிக்கின்றனர். காடுகளைவிட்டுப் பழங்குடியினர் வெளியேற்றம் என்பது, கடந்த 20 ஆண்டுகளாத்தான் அதிகம் நடந்துவருகிறது. கோவை மாவட்டம் பவானி சாகர் அணைக்குப் போகும் வழியில் தெங்குமரஹட்டா என்ற கிராமம் இருக்கிறது. இந்த கிராமத்தைச் சுற்றி 20 கி.மீ சுற்றளவுக்கு காடுகள்தான் இருக்கும். 200 ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பகுதியில் சில கிராமங்கள் இருந்தன. ஆனால், ரிசர்வ் ஃபாரஸ்ட் என்ற காரணங்களுக்காக 1980-க்குப் பிறகு அங்கிருந்த பழங்குடியினர் கிராமங்கள் காலி செய்யப்பட்டன. ஒரு கிராமம்கூட அங்கு இல்லை. அதேபோல முதுமலை புலிகள் சரணாலயத்தின் பகுதியில் இருந்த பழங்குடியினர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். அவர்கள் இப்போது வறுமையில் வாடுகின்றனர். கண்ணகி கோயில் அருகே குமுளி வனப்பகுதியில் முதுவர் என்ற பழங்குடியினர் கிராமம் இருந்தது. அந்தக் கிராமம் இப்போது இல்லை. பழங்குடியினர்களை அவ்வப்போது துரத்திவிட்டு மறு குடியமர்வு செய்கின்றனர். ஏராளமான பழங்குடியினர் கடந்த சில ஆண்டுகளாக வாழ்வாதாரத்தை இழந்து பல இடங்களில் கொத்தடிமைகளாக வாழ்ந்து வருகின்றனர். வன உரிமைச் சட்டத்தில் பழங்குடியினருக்காக ஏராளமான உரிமைகள் உள்ளன. அவர்களுக்கு உரிய உரிமைகள் வழங்கப்பட வேண்டும்” என்றார்.

சுப்ரபாரதிமணியனின் தலைமை உரையில்….

விவசாயம் புறக்கணிக்கப்பட்டு திருப்பூர் போன்ற நகரங்கள் விரிவாகிக் கொண்டே இருக்கின்றன.வெற்று சம்மதங்கள் அபாயகரமானவை.தொழிலுக்கு குந்தகம் வந்து விடக்கூடாது என்ற கூட்டு எண்ணம் வியாபார நியதிகளுக்கும் கூட ஒத்து வராது என்று குற்றம் பேசும் விமர்சனப் பார்வை தொடர்கிறது.

தொழிலாளி, முதலாளி, தொழிற்சங்கம் மொதற்கொண்டு எல்லாருமே அன்னிய செலவாணியை குறிக்கோளா வைத்துச் சமரசமாக இயங்கும் ஊரின் அசலானத் தன்மை தெரிகிறது.. .. ..உலகச் சந்தையை முன் வைத்து பின்னலாடை உற்பத்தி அதன் தொழிலாளிகளிடமிருந்து அந்நியப்பட்டு நிற்பதைக் காட்டுகிறது. சேரிகள் வளர்ந்து கொண்டே இருக்கிறது . பின்னலாடையிலே சுமங்கலித்திட்டக் கொடுமை வந்து விட்டது..இடம் பெயர்ந்து வந்த வேற்று மாநிலத் தொழிலாளர்கள்… பாரீசின் சொகுசுத்தனம், ஆப்ரிக்காவின் வறுமை இரண்டும் இங்கு சேர்ந்திருக்கிறது. வட மாநில பெண்களின் உழைப்புச் சுரண்டல், வார இறுதிகளில் அவர்கள் விபச்சாரத்துக்கு பயன்படுகிற நிலை போன்றவை தொடர்கின்றன “ என்றார்.

படைப்பு அனுபவம் என்ற தலைப்பில் ஊத்துக்குளி நடேசன் அவர் எழுதிய “ இந்தியா எங்கே செல்கிறது “ என்ற நூல் எழுதியது பற்றி அவரும், காட்டாறு இதழ் பற்றி இராவணன் அவர்களும் உரையாற்றினர்.

* நூல் அறிமுகம்..: .நூல் – அறிமுகம் பிஆர் நடராஜன் எழுதிய “ சுதந்திரப்ப்போரில் திருப்பூர் தியாகிகள் “ பற்றி ஜி.. இரவி ( திருப்பூர் மாவட்ட இளைஞர் பெருமன்றம் ) செய்து விரிவான உரை நிகழ்த்தினார் *

பெண் படைப்பு குறித்து கோவை பேரா. செல்வி. பேரா. கலைவாணி ஆகியோர் உரைகள் நிகழ்த்தினர் *: மாற்றுக்கலாச்சாரம் எது உரை நிகழ்த்தினார் துருவன் பாலா., ( அவர் மாற்றுகல்வி, , மாற்று உணவு பற்றி விரிவாய் பேசினார் ) தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் திருப்பூர் மாவட்டம் தலைவர் சண்முகம், பொருளாளர் பழனிசாமி. தமிழ் பண்பாட்டு மையம் யோகி செந்தில், பாண்டியன் நகர் தாய்த்தமிழ்ப்பள்ளி மருத்துவர் முத்துசாமி, , சசிகலா., விபி பழனிச்சாமி முன்னிலை வகித்தனர்.

மற்றும் கவிஞர் ஜோதி, துருவன் பாலா, ஆ, அருணாசலம் பாடல்கள், கவிதைகள் வாசிப்பும் நடந்தது. பங்கேற்பாளர்கள் கருத்துரைகள் வழங்கினர். தொழிற்சங்கத்தலைவர்கள், இலக்கிய வாசகர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.

பிஆர்நடராஜன்நன்றி கூறினார்…

Share

About the Author

சுப்ரபாரதி மணியன்

has written 9 stories on this site.

சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல் , கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார்.திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கரை கொண்டவர் ,தொலை பேசித்துறையில் துணைக்கோட்டப் பொறியாளராய் பணியாற்றுபவர்

Write a Comment [மறுமொழி இடவும்]

Security Question: (* Solve this math to continue) *


Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.