கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

 

‘’கூடாரவல்லி திருவாதிரையன்று….அரி, அரன், அம்பாள் மூவரும் ஒன்று….!

180111 - Tiruppavai 27 -Koodarai vellum, seer (rectifier) Govinda. lr. #watercolour #24x32cms Saayujyam.

180111 – Tiruppavai 27 -Koodarai vellum, seer (rectifier) Govinda. lr. #watercolour #24x32cms
Saayujyam.

 

’’கூடாரை வெல்வார், கடைசிவரை கூடுபவர்
வாடாது காத்திடும் வைணவம்: -மூடநெய்
ஆதிரை ஈசனவர், அக்காரக் கண்ணனவர்,
பாதியிறைப் பங்கருளம் பாள்’’….!

பாதி இறை பங்கு அருளம்பாள்….!

’’ஆண்டாள் -27”….
————————————–

”கூடாரை வெல்லும்சீர் கோவிந்தன் முப்பதைப்
பாடாத வாயெல்லாம் பாழ்வாயே, -ஆடா(து)
அசங்கா(து) அவனே அவள்பாடல் கேட்க,
விஷம்காதுக்(கு) அன்றோஊர் வம்பு”….

”கூடாரம் போல்குவிந்து, மூடாத பாத்திரத்தில்,
சூடாறும் பொங்கலை சேவித்து -கூடார
வல்லியில் உண்பவர்க்கு, இல்லை டயாபடீஸ்,
வில்லியூர் செல்வியின் வாக்கு”….

“மெட்டி அணிவித்து, மெய்யில் தாலியிட்டு
கட்டி அணைக்கின்றான் கோவிந்தன்: -சுட்டியவள்,(சிறுமி ஆண்டாள்)
நம்பாமல் பார்க்கின்றாள் நந்தகோபன் மைந்தனினி
நம்பாள் கணவரா! நேக்கு” ….!கிரேசி மோகன்….!

 

கேசவ் முன்பு வரைந்த ‘’கோவர்த்தனகிரி தாரிக்கு’’ முன்பு எழுதியது….மறுபகிர்வு….!
”சோ’’வர்த்த மானச் சிரிப்புடன் ஸ்ரீதரன்
கோவர்த் தனக்குன்றால் காக்கின்றான் -’’ஆ’’வர்த்த
மானத்தை: கர்வ மடங்கிட ஆனையுடன்(இந்திரன்)
வானத்தை விட்டு வரவு’’….

 
கரதூ ஷணர்கள் பரலோகம் செல்ல
நரவேஷம் இட்டாய்கண் ணர்க்குமுன் -வரவர்ஷம்(வர மழை)
அண்டர்கோன்(இந்திரன்) கர்வமாய், ஆவினம் காத்திட
சுண்டுவிரல் கொண்டாய்கல்(கல் -கோவர்த்தன கிரி) KEY….!

 
“மறையவரைப் பார்க்கின்றாள் மாதவள் கோதை,
கரைந்துருகி கானக்கண் கொண்டு; -உறைந்தபனி
நெஞ்சிலே பக்தி நெருப்பைக் கொளுத்திவிட,
மஞ்செழில் வண்ணன் மெழுகு”….கிரேசி மோகன்….!

Share

About the Author

கிரேசி மோகன்

has written 1958 stories on this site.

எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.

Write a Comment [மறுமொழி இடவும்]

Security Question: (* Solve this math to continue) *


Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.