கடவுள் பற்றி அறிவியலாளரின் சொற்பொழிவு – செய்திகள்

கோலாலம்பூர்: 28 செப்டம்பர் 2011, (புதன்) அன்று மாலை 7:30 மணி முதல் 10:30 மணி வரை ப்ரிக் ஃபீல்ட்ஸ், எண் 12, ஜாலன் டுன்சம்பந்தன் 3 -ல் உள்ள பி.சி கோம்ஸ் அரங்கத்தில் ”வள்ளுவர், வள்ளலார், வேதாத்திரி மஹரிஷி கூறும் வாழ்கைக்கான மேல்நிலை தத்துவங்கள்” என்னும் தலைப்பில் அறிவியலாளர் முனைவர். அழகர் இராமாநுஜம் அவர்கள் உரை நிகழ்த்தவுள்ளார்.

மனித குலம் மேன்மையுற்று வாழும் வகையில்தான் இவ்வுலகத்தையும் அதனை இயக்கும் பிரபஞ்ச விதிகளையும் இறையாற்றல் படைத்துள்ளது.  பிரபஞ்ச விதிகளுக்கு முரணான செயல்பாடுகளினால் தான் தனி மனிதனும், மனித குலமும் அவதிக்குள்ளாகி வருகின்றது.  வெற்றி பெறுவதற்கென்று சில பிரபஞ்ச விதிகள் உள்ளன. இவற்றைப் புரிந்து கொண்டு அதன்வழி செயல்பட்டால் துன்பங்கள் விலகும், மகிழ்ச்சி பெருகும், வாழ்வில் வளம் உண்டாகும்.  இதனை மேலும் தெளிவுபடுத்தும் வகையில் அமையப்போகும் இந்த சொற்பொழிவிற்கு அனைவரையும் வரவேற்கிறோம்.

முனைவர். அழகர் இராமாநுஜம்

சொற்பொழிவாளர் முனைவர். அழகர் இராமாநுஜம் அவர்கள் பற்றிய சில விவரங்கள் :

முனைவர் அழகர் இராமாநுஜம் அவர்கள் பொள்ளாச்சி என்.ஜி.எம். கல்லூரியின் முந்நாள் முதல்வர் ஆவார்.  இவர் ஒரு பிரபஞ்சவியல் ஆராய்ச்சியாளர் ஆவார்.  வேதாத்திரி அகில உலக நிறுவனத்தின் நிர்வாக உறுப்பினர், சென்னை உலக சமுதாய சேவா சங்க அறிஞர் குழு உறுப்பினர்,  ”சரணாலயம்” – விஞ்ஞானம், தத்துவம் மற்றும் சேவை மையத்தின் தலைவர் முதலிய பல பொறுப்புக்களையும் வகிக்கின்றார்.

சார்பியல் தத்துவம் (Theory of Relativity), துகள் இயக்கவியல் (Quantum Mechanics) மற்றும் பிரபஞ்சவியல் (Cosmology) தொடர்பான பல ஆய்வுக் கட்டுரைகள் எழுதியுள்ளார்.  அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் மெக்ஸிகோ முதலிய நாடுகளில் நடைபெற்ற பல்வேறு ஆய்வரங்குகளிலும் உரையாற்றியுள்ளார்.  மேலும் வேதாத்திரி மகரிஷியின் தத்துவங்கள், காயகல்ப வழிமுறை, தியானம் முதலானவைகளுக்கு பயிற்சியளிக்கின்றார்.  இருபது ஆண்டுகளுக்கு மேலாக இயற்பியல் சார்பியல் தத்துவம் மற்றும் துகள் இயக்கவியல் ஆராய்ச்சியாளராகவும துணைப் பேராசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.

மேலும் விவரங்களுக்கும், பதிவிற்கும் கீழ் கண்ட எண்களில் அழைக்கவும்:

03-4296 3853

013-3411 323

012-3160 065

 

கேப்டன் கணேஷ்

எழுத்தாளர்

Share

About the Author

கேப்டன் கணேஷ்

has written 110 stories on this site.

எழுத்தாளர்

Write a Comment [மறுமொழி இடவும்]

Security Question: (* Solve this math to continue) *


Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.