ராஜாஜி பாடல்….!
——————————————

கருத்து மூதறிஞர் ராஜாஜி….
—————————————————-

”உள்ளே உறங்குபவர் வெள்ளே வரமாட்டார்,
வெள்ளே விழித்திருப்போர் வேலிதாண்டிச் -செல்லார்
சுடுதடியால் வெட்டியான் செத்தோரை சாத்தும்,
சுடுகாட்டிற்(கு) ஏனோ சுவர்’’….கிரேசி மோகன்….!

படமும் பாடலும்….!
—————————————–
”அடியேன் இரண்டு ஓவியங்கள் கிண்டியில் பொறியியல் படிக்கும் காலத்தில் வரைந்தேன்….இருவருமே மூதறிஞர்கள்….ஒருவர் ‘’ராஜாஜி’’….மற்றவர் ‘’சோ ராமாசாமி’’ அவர்கள்….திரு. சோ சார் ஓவியத்தில் கையெழுத்து வாங்கி தருவதாக ஓவியத்தை வாங்கிச் சென்ற எங்கள் குடும்ப வைத்தியர்(டாக்டர் ஜெகதீஸன் ‘’சோ சாருக்கு’’ நெருங்கியவர்) இப்போது சொர்கத்தில் உள்ளார்(’’டாக்டர் சோ வந்துருக்கார் சொர்கத்திற்கு கையெழுத்து வாங்கி வையுங்கள் அடியேன் வருகையில் கலெக்ட் செய்து கொள்கிறேன்’’)…..’’ராஜாஜி’’ ஓவியத்தில் வாங்கித் தருவதாகச் சொன்ன என் தாத்தாவும் சொர்கம் சென்று விட்டார்….!

எனது ‘’சாக்லேட்-கிருஷ்ணா’’ ‘’சோ சாரின்’’ ‘’சம்பவாமி யுகே யுகே’’, வாலி சாரின் ‘’கலியுகக் கண்ணன்’’ தழுவல் என்றால் மிகையாகாது…

‘’சோ சார்’’ சொர்கம் சென்றுள்ளார் ‘’ஜெ-அம்மாவுக்கு’’ ஆலோசனை வழங்க….வாழ்க ‘’சோ சார்’’ வளர்க அவரது புகழ்….

என்னால் முடிந்த இரங்கற்பா சோ சாருக்கு….!

பாடல்
————–

‘’சே’’என்(று) எவருமே சொல்லமாட் டார்துக்ளக்
‘’சோ’’என்ற ராமசாமி சொல்வதை; -’’நா’’வென்ற
நாடகத் தந்தை நயத்தகு வாக்கது
ஆடகச் செம்பொன் அழகு’’….கிரேசி மோகன்….!

விவேகா ஃபைன் -ஆர்ட்ஸ் பூஜைப் பாடலில் ‘’ஆடகச் செம்பொன் மேனி முருகனே ‘’ என்ற வரி வரும்….முருகரும் அழகு ,சோ சாரின் எழுத்தும் அழகு’’…..!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *