’’சங்கர சாம்பசிவம்,சங்கெழில் மோகினியை
பம்பையில் முங்கிப் பிணைந்திட -பங்குனி
உத்திரத்தில் தோன்றிய உற்சவ அய்யனை
நித்திரைக்கு முன்பு நினை ‘’….கிரேசி மோகன்….!

பங்குனி உத்திரத்தன்று எழுதியது….!
———————————————-

’’பங்குனி உத்திரா! பந்தளப் புத்திரா!
செங்கட் திருமால் சுமந்தவா! -இங்குநீ
தோன்றிய இந்நாளில் தோத்திரம் செய்வோர்க்கு
ஊன்றிடும் கோலுன் உறவு’’….!

’’பிணிகொண்டு கூற்றின் படிவாசல் நிற்போர்
மணிகண்டன் நாமம் முழங்க -இனிகண்டம்
இல்லையென்(று) ஆகிடும் ஈரொன் பதாம்படிமுன்
தொல்லையாம் தேங்காய் தெறித்து’’….!

’’மீனாள் திருமணத்தில் மாலோன் அழகுகண்டு
மான்மழு வாளன் மயங்கினான் -கானில்
அபரிமித மோஹினியை ஆலிங் கனித்திட
சபரிகிரி வாசன் ஜனிப்பு’’….!

”சங்குதிரி சூலத்தை சேரப் பிறந்தவன்,
பங்குனி உத்திரன்முன், பம்பையில் -முங்கி
சரணம் விளிப்போர்க்கு சாதகங்கள் இன்றி
மரண ஜனனம் முடிவு’’….கிரேசி மோகன்….!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *