வல்லமை ஆசிரியர் குழுவில் இணைகிறார்கள்!

வல்லமை நிர்வாகக்குழு – 2018

ஒன்பதாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நம் வல்லமை இணைய இதழின் ஆசிரியர் குழுவில் இன்று புதிதாக பொறுப்பேற்கும், தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக, மொழிபெயர்ப்புத்துறை உதவிப் பேராசிரியர் முனைவர். விஜயராஜேஸ்வரி அவர்களை மகிழ்வுடன் வரவேற்கிறோம். தமிழ் மலையாள மின் அகராதி உருவாக்கம், கணினி மொழியியல், இயந்திர மொழிபெயர்ப்பு – இந்திய மொழிகளுக்கிடையேயான இயந்திர மொழிபெயர்ப்புத்திட்டம் (IL- ILMT Project, Govt.of India ) , மொழியியல் துறை, தமிழ்ப்பல்கலைக்கழகம், பேரா. முனைவர். ச.இராசேந்திரன். 2. கணினி மொழியியல், இயந்திர மொழிபெயர்ப்பு, கணினிக்கான இலக்கண வரைவு – இந்திய மொழிகளுக்கிடையேயான இயந்திர மொழிபெயர்ப்புத்திட்டம் (IL- ILMT Project , With Professor Uma Maheshwar Rao at Centre for Applied Linguistics and Translation Studies, Central University of Hyderabad and IIIT-Hyderabad ) உதவி ஆய்வாளர் ( Junior Research Fellow ), முதுமுனைவர். வ.அய்.சு நினைவு திராவிட மொழிகள் பள்ளி, (International School of Dravidian Linguistics, Thiruvananthapuram) திருவனந்தபுரம், போன்ற மிகச்சிறந்த பணி அனுபவங்கள் கொண்ட முனைவர் விஜய ராஜேஸ்வரி நம் வல்லமை இதழ் மென்மேலும் சிறப்புற தம் ஒத்துழைப்பை முழுமையாக நல்குவார் என்று உளமார வாழ்த்தி வரவேற்கிறோம்.

நம் வல்லமை இதழின் முதல் வல்லமையாளரான திருமதி ராமலட்சுமி அவர்கள் நம் ஆசிரியர் குழுவில் இன்று இணைகிறார் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம். திருமதி ராமலட்சுமி அவர்களின் சிறப்பான பங்களிப்புகளையும் வாழ்த்தி வரவேற்கிறோம்.

editor

நிர்வாக ஆசிரியர், வல்லமை மின்னிதழ்

Facebook Twitter Flickr 

Share

About the Author

editor

has written 1158 stories on this site.

நிர்வாக ஆசிரியர், வல்லமை மின்னிதழ்

4 Comments on “வல்லமை ஆசிரியர் குழுவில் இணைகிறார்கள்!”

 • அண்ணாகண்ணன்
  அண்ணாகண்ணன் wrote on 16 May, 2018, 12:43

  இருவரையும் வரவேற்கிறோம்.

 • பெருவை பார்த்தசாரதி
  பெருவை பார்த்தசாரதி wrote on 17 May, 2018, 10:16

  வல்லமை மின் இதழின் வளர்ச்சிக்கு உதவ முன்வந்திருக்கும், இருவருக்கும் என் அகமலர்ந்த வாழ்த்துக்கள்.

 • மேகலா இராமமூர்த்தி
  மேகலா இராமமூர்த்தி wrote on 18 May, 2018, 8:28

  வல்லமை ஆசிரியர் குழுவில் புதிதாய் இணைந்திருக்கும் ஆற்றல்மிகு பெண்மணிகள் இருவருக்கும் என் அன்பான வாழ்த்தும் வரவேற்பும்!

  அன்புடன்,
  மேகலா இராமமூர்த்தி

 • sathiyamani wrote on 19 May, 2018, 20:45

  பவள வல்லமை யெனும் கலைமகளோடு மலைமகளாம் ஈஸ்வரியும் அலைமகளாம் இலக்குமியும் ஆட்சிக்கு
  வந்தால் கண்ணனுக்கும் தமிழுக்கும் கொண்டாட்டம் தான்!! தமிழ் ஆளுக‌

Write a Comment [மறுமொழி இடவும்]


4 + = eight


Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.