180711 Yashoda and Putana -mixed media watercolour, pastel, and charcoal – Strathmore 160gsm tinted paper 9”x12”-lr

பூதனை தான்யசோதை பூமிக்குத் தாய்ப்பாலை
போதனை செய்யப் பிறந்தபிரான்: -தீதான
நஞ்சுண்ண பேய்ச்சி நகிலுண்ட கண்ணபிரான்
அஞ்சலென்று மோக்‌ஷம் அளிப்பு….!

பல்லில்லா பாலகன் என்றெண்ணி பூதனை
கொல்லவந்த கண்ணனைக் கண்டதும் -இல்லம்
புகுந்து முலைதிணித்துப் பார்த்திட வாய்க்குள்
முகுந்தனுக்கு முப்பத்தி மூணூ(நமக்கெல்லாம் 32)….!

முலைகனத் தாயை அலைக்கழிய விட்டு
கொலைகுண பூதனை கொங்கை -மலைசுவைத்தாய்
அந்நஞ்சைப் பாம்பின்மேல் ஆடி ஜெரித்தவன்பால்
நன்நெஞ்சே நிற்பாய் நினைந்து….கிரேசி மோகன்….!

’’தூங்க வருகவே’’….!
———————————————————-

பூதனை நச்சுப் பாலொடு அவளின்
வேதனை தீரக் குடித்துக் களைத்தவன்
சீதரன், கோமளன், ஸ்யாமளன், என்னுளத்
தீதினை விரட்டித் தூங்க வருகவே….!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *