இந்த வார வல்லமையாளர் (283)

2

இந்த வார வல்லமையாளராக சுவடி ஆய்வுப் பெரும்புலவர் ப. வெ. நாகராஜனை அறிவிப்பதில் வல்லமை மகிழ்ச்சி அடைகிறது.  எளிமையும், பெரும்புலமையும் வாய்ந்த வித்துவான் ப. வெ. நாகராசனார் (1937 – 2018) கோவையில் பிறந்து வாழ்ந்தவர். சிரவணம்பட்டி ஆதீனப் புலவராகத் திகழ்ந்து, வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளின் பல நூல்களை சுவடிகளில் இருந்து அச்சில் பதிப்பித்தவர். சிரவை கௌமார மடாலயத்தின் தலைவராக வீற்றிருந்த கந்தசாமி அடிகளின் பல பிரபந்தங்களை அச்சில் கொணர்ந்தவர்.

.(இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், naa.ganesan@gmail.com, vallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் – https://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் https://www.vallamai.com/?p=43179 )

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “இந்த வார வல்லமையாளர் (283)

  1. தமிழின் பழமை வெளிக்கொணர்ந்த பணிகளில் முதன்மையானது சுவடிகள். இன்றைய பழந்தமிழ் இலக்கியங்கள் அனைத்தும் தனக்கான பெரும் வரலாற்றைக் கொண்டுள்ளன. இதில் பலரின் கடின உழைப்பும் தியாகமும் அடங்கியுள்ளது. அந்த வகையில் இச்சான்றோருக்கு இவ்விருது சிறந்ததாகும். வல்லமைக்கு வாழ்த்துகள்.

  2. அய்யா அவர்களை அறிவேன். கோவை சென்றிருந்த பொழுது அவர்களைச சந்தித்து உரையாடும் வாய்ப்பமைந்தது.அப்பொழுது அணிகள் பற்றிய நூல் உருவாக்கி வருவதாகத் தெரிவித்தார்கள். பல்வேறு நூல்களைப் பதிப்பித்துள்ளார்கள். பன்னாட்டுத் திராவிட மொழியியற் கழகம் பதிப்பித்த தொல்காப்பியம் மூலம் பாடவேறுபாடு – ஆழ்நோக்காய்வு பதிப்பில் இணைந்து செயல்பட்டிருப்பார்கள். அவர்களைப் பற்றிய முழு விவரங்களும் கொடுத்தால் நலம். இப்புலமையாளருக்கு வல்லமை விருது அளித்திருப்பது சிறப்பு. வாழ்த்துகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *