தீபாவளி நினைவுகள்

-விப்ரநாராயணன் 

தீப  வொளியை  வணங்கிடுவோம்
   தீயவை  அகல  வேண்டிடுவோம்
பாபம் தொலையப்  பாரதத்தில்
   பலரும்   சேர்ந்து   உழைத்திடுவோம்

அன்பும்  கருணையும்  சுரந்திடவே
   ஆதவன் அருளை நாடிடுவோம்
தன்னுள்   பகைமை  ஒழிந்திடவே
   தன்னிலை  யறிய  முனைந்திடுவோம்

புதிய ஆடைகள்  அணிந்திடுவோம்
    புதியக்  கவிதையாய்  வாழ்ந்திடுவோம்
விதியை நினைந்து  வருந்தாது
    வீரனாய்  வாழ நினைத்திடுவோம்

வெடிகள்  கொளுத்தி  மகிழ்ந்திடுவோம்
   வேதனைகள்  வராது  தடுத்திடுவோம்
படிகள்  தாண்டி  உயர்ந்திடவே
   பணிவாய் வாழக்  கற்றிடுவோம்

வாழ்வின்  பொருளை  அறிந்திடுவோம்
   வாய்மை கூறத்  துணிந்திடுவோம்
ஏழ்மை நீங்க  உறுதியுடன்
   எதையும் எதிர்க்க  இணைந்திடுவோம்

அறத்தின்  வழியில் நடந்திடுவோம்
   ஆணவ மின்றி  உதவிடுவோம்
புறத்தே தூய்மை  நிலைத்திடவே
   பசுமைப்  புரட்சி  செய்திடுவோம்

நாட்டில்  ஊழலை  ஒழித்திடுவோம்
   நேர்மையாய் வாழக் கற்பிப்போம்
வீட்டைச் சரியாய் அமைத்திடவே
    விளக்கமாய் உணர்ந்து செயல்படுவோம்

ஆடிப்  பாடக்  கூடிடுவோம்
   அனைவரும் இறைவனைத் தொழுதிடுவோம்
நாடும்  வீடும் நலம்பெறவே
   நாதன் திருவடி பணிந்திடுவோம்

Share

About the Author

விப்ரநாராயணன்

has written 4 stories on this site.

34 ஆண்டுகள் ஆசிரியாராக பணிசெய்து ஓய்வு பெற்றிருக்கிறார்..சென்னை திருவல்லிக்கேணி இந்து மேநிலைப்பள்ளியில் இரண்டு ஆண்டுகள் தலைமை ஆசிரியராக இருந்திருக்கிறார். இவர் தந்தையார் அமரர் திரு டி டி திருமலை அவர்கள் காந்தியவாதி. அதனால் காந்தியக் கருத்துக்களில் அதிகம் ஈடுபாடு உண்டு.

2 Comments on “தீபாவளி நினைவுகள்”

  • ரா. பார்த்த சாரதி
    Parthasarathy Ramaswamy wrote on 7 November, 2018, 20:58

    Migavum Arumaiyaana Kavithai

  • விப்ரநாராயணன்
    Vipranarayanan wrote on 8 November, 2018, 5:53

    மிக்க நன்றி

Write a Comment [மறுமொழி இடவும்]

Security Question: (* Solve this math to continue) *


Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.