புத்தாண்டே வருக! வருக…! புதுவாழ்வு தருக! தருக…!

-ஆ. செந்தில் குமார்.

நல்லதோர் அரசு அமைய… புத்தாண்டே வருக! வருக..!
நல்லோர் நட்பு நிலைக்க… புத்தாண்டே வருக! வருக..!
பொல்லாதோர் விலகி ஓட… புத்தாண்டே வருக! வருக..!
இல்லாத நிலை மாற… புத்தாண்டே வருக! வருக..!

தொட்ட தெல்லாம் துலங்க… புத்தாண்டே வருக! வருக..!
நட்ட தெல்லாம் தழைக்க… புத்தாண்டே வருக! வருக..!
பட்ட தெல்லாம் மறக்க… புத்தாண்டே வருக! வருக..!
கெட்ட தெல்லாம் விலக… புத்தாண்டே வருக! வருக..!

பருவமழை பொய்க்காது பொழிய… புத்தாண்டே வருக! வருக..!
துருவப்பனி உருகாது இருக்க… புத்தாண்டே வருக! வருக..!
இருப்பதைக் கொண்டு மகிழ… புத்தாண்டே வருக! வருக..!
தரணியெங்கும் அமைதி நிலவ… புத்தாண்டே வருக! வருக..!

முத்தான வாழ்வு கிடைக்க… புத்தாண்டே வருக! வருக..!
எத்திசையும் தமிழ் ஒலிக்க… புத்தாண்டே வருக! வருக..!
புத்துணர்ச்சி பெற்று விழிக்க… புத்தாண்டே வருக! வருக..!
புத்தாண்டே வருக! வருக…! புதுவாழ்வு தருக! தருக…!

About the Author

has written 4 stories on this site.

கல்வித் தகுதி :: மின்னியல் மற்றும் மின்னணுவியலில் பட்டயம். கல்லூரி :: சென்ட்ரல் பாலிடெக்னிக் கல்லூரி, தரமணி, சென்னை. பதவி / அலுவலகம் :: இளநிலை தொலைத்தொடர்பு அலுவலர் (J T O) / பி எஸ் என் எல் ,சென்னைத் தொலைப்பேசி, சென்னை. குடியிருப்பது :: மதனந்தபுரம், முகலிவாக்கம், சென்னை.