மலைப்பயணம் – தொலைக்காட்சி நிகழ்ச்சி

0

சின்னத்திரையில் இது வரை நீங்கள் கண்டிராத புதிய ‘மலைப் பயணம்’ இது.

தமிழகத்தின் அடர்ந்த காடுகளில் வசிக்கும் ஆதிவாசிகள் பழங்குடியினரை இனி ஒவ்வொரு வாரமும் நீங்கள் சந்திக்கலாம்.

அவர்களின் வாழ்க்கை கலாச்சாரம், நகரவாசிகளில் இருந்து முழுமையாக மாறுபட்டது.  நடுக்காட்டுக்குள் அவர்கள் நடத்தும் சடங்குகளும், சம்பிரதாயங்களும், ஆட்டம்-பாட்டம் அடங்கிய நடன நிகழ்வுகளும் உங்களை நிச்சயம் பிரம்மிக்க வைக்கும்.

யாரும் தொட்டுவிட முடியாத மலை உச்சியில் வசிக்கும் அவர்கள் நகரவாசிகளைக் கண்டால் ஓடி, மறையும் குணம் கொண்டவர்கள்.  பல இடர்பாடுகளுக்கு மத்தியில், மக்கள் தொலைக்காட்சியின் சிறப்புக் குழு நேரடியாகச் சென்று படமாக்கி உங்கள் கண் முன் நிறுத்துகிறது.

இரவும், பகலுமாக அடர்ந்த காட்டுக்குள் எடுக்கப்பட்ட பல அதிரடி நிகழ்வுகளை நீங்கள் இந்தத் தொடரில் காணப்போகிறீர்கள்.  சின்னத்திரை வரலாற்றில் முதன் முறையாக, முற்றிலும் புதிய அனுபவத்தை ஏற்படுத்தப்போகும் இந்த மலைப்பயணம் 15-10-2011 இன்று முதல் ஒளிபரப்பாகவுள்ளது.

மக்கள் தொலைக்காட்சியில் சனிக்கிழமை தோறும் இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகிறது ‘மலைப்பயணம்’.

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *