செய்திகள்

கஜல் பாடகர் ஜகஜீத் சிங் காலமானார் – செய்திகள்

10-அக்டோபர்-2011, மும்பை.
புகழ் பெற்ற கஜல் பாடகர் ஜகஜீத் சிங் 10-அக்டோபர்-2011 அன்று காலை மும்பை லீலாவதி மருத்துவமனையில் காலமானார்.  செப்டம்பர் 23 அன்று மூளையில் இரத்தக்கசிவின் காரணமாக நினைவிழந்த நிலையில் லீலாவதி மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார்.

ஜகஜீத் சிங்

காதுகளில் நுழைந்து உள்ளத்தின் உள்ளே இறங்கி வித்தைகள் காட்டும் குரலுக்குச் சொந்தக்காரர் கஜல் பாடகர் ஜகஜீத் சிங்.  பத்மபூஷன் விருது பெற்ற இவர் இராஜஸ்தான் மாநிலத்தின் ஸ்ரீ கங்காநகர் என்னும் ஊரில் 1941ல் பிறந்தவர்.

கல்லூரிப் படிப்பிற்குப் பின் மும்பை வந்த ஜகஜீத் சிங், இசைத்துறையில் நுழைந்து பதினைந்து ஆண்டுகளில் நாடு முழுவதும் புகழ் பெற்ற பாடகர் மற்றும் இசையமைப்பாளர் ஆனார்.  ஹிந்தி, பஞ்சாபி, பெங்காலி, குஜராத்தி மற்றும் நேப்பாள மொழிகளில் இவர் பல பாடல்கள் பாடியுள்ளார்.

Share

Comments (1)

  1. விசனம் தரும் செய்தி. அடிக்கடி இவரது கஜல் இசை கேட்டு அதில் ஆழ்ந்து விடுவது உண்டு. அவருடைய ஆத்மா சாந்தியடைக.

Comment here