செய்திகள்

அணு உலைகளைக் கண்டு நாம் ஏன் அச்சப்படவேண்டும்? – விளக்கக்கூட்டம் – செய்திகள்

கூடங்குளம், கல்பாக்கம் அணு உலைகளைக் கண்டு நாம் ஏன் அச்சப்படவேண்டும்?

சென்னை, 22 அக்டோபர் 2011 அன்று, லயோலா கல்லூரி அருகில் உள்ள அய்க்கஃப் வளாகத்தில்  காலை 10 மணிக்கு பத்திரிக்கையாளர் சந்திப்பு மற்றும் அணு உலைகளின் அச்சங்கள் பற்றிய அறிவியல் பூர்வமான விளக்கக் கூட்டம் நடைபெறவுள்ளது.

’பூவுலகு’ சுற்றுச்சூழல் இதழ் இந்த கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து ஒருங்கிணைத்துள்ளது.

பாதுகாப்பான சுற்றுச்சூழலுக்கான மருத்துவர்கள் அமைப்பிலிருந்து மருத்துவர்கள் ரமேஷ் மற்றும் புகழேந்தி விளக்கமளிக்கிறார்கள்.

இந்தியாவிலிருந்து அணு உலைகளை முற்றிலும் மூடக்கோருவதற்கான வாய்ப்பும், தலைமையும் இயல்பாகவே தமிழகத்திற்கு வந்துள்ளது!

இந்தத் தலைமையை முன்னெடுத்து மக்களைப் பாதுகாக்கவேண்டியது ஒவ்வொரு தமிழனின் கடமை!

பத்திரிகையாளர் சந்திப்பு முடிந்த பிறகு அனைத்து சுற்றுச்சூழல் இயக்கங்கள், அரசியல் இயக்கங்கள், சமூக நீதி இயக்கங்கள் பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள், மக்களைக் காக்கும் அறிவியலாளர்கள், படைப்பாளிகள், அறிவுஜீவிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரை இணைத்து’அணுசக்திக்கு எதிரான மக்கள் சக்தி’ என்ற பெயரில் கூட்டமைப்பு ஒன்று உருவாக்குவதற்காக உங்களுடைய செயல்திட்டங்களுடன் வாருங்கள்!

Share

Comment here