Posts Tagged ‘அமெரிக்கா’

படித்த, நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள், அமெரிக்காவில் செய்யும் மோசடி

-நாகேஸ்வரி அண்ணாமலை மைக்கேல் கோகென் என்பவர் ஜனாதிபதி ட்ரம்பின் முன்னாள் வழக்கறிஞர். இவர் இவ்வளவு நாட்களாக ட்ரம்ப் செய்த சில தவறுகளை மூடிமறைத்து வந்தார். இப்போது வேறு வழியில்லாமல் தான் அமெரிக்கப் பாராளுமன்ற கமிட்டியின் முன்னால் பொய் கூறியதாக ஒப்புக்கொண்டார். இதற்கு அவருக்கு மூன்று ஆண்டு ஜெயில் தண்டனை விதித்திருக்கிறார்கள். இந்தியாவில் இம்மாதிரிக் குற்றங்கள் எல்லாம் – அதுவும் மேல் மட்டத்தில் நடந்தால் – கண்டுகொள்ளப்படாமலே போய்விடும். என்ன இருந்தாலும் கோகெனும் ட்ரம்பும் அமெரிக்காவில் இருப்பவர்கள் அல்லவா? அமெரிக்கா இன்னும் இந்தியா அளவுக்குத் தாழ்ந்து ... Full story

அமெரிக்காவில் துணை தேடும் முறை: அன்றும் இன்றும்

முனைவர் நாகேஸ்வரி அண்ணாமலை பருவ வயது வந்தவுடன் ஆண்களுக்கும் பெண்களுக்கும் பாலுணர்வு தோன்றுவது இயற்கை. அதற்கு வடிகால் அமைத்து அவற்றை ஒழுங்குபடுத்துவதற்கு ஒவ்வொரு சமூகமும் சில விதிகளை வகுத்திருக்கிறது. அமெரிக்கச் சமூகம் என்ன செய்திருக்கிறது என்று பார்ப்போம். அமெரிக்காவில் எனக்குத் தெரிந்தவரை என்றுமே பெற்றோர் மட்டுமே பார்த்து - திருமணம் செய்துகொண்டு வாழப் போகும் இருவர் ஒருவரையொருவர் பார்க்காமலேயே - திருமணம் செய்துகொண்டதாகத் தெரியவில்லை. இரு குடும்பத்துப் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் திருமணம் செய்துகொள்ளலாம் என்று ... Full story

பெரிய இடத்தில் சின்னப் புத்தி

முனைவர் நாகேஸ்வரி அண்ணாமலை 2011 மே மாத மத்தியில் சர்வதேச நிதி அமைப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் டொமினிக் ஸ்ட்ராஸ் கான் என்பவர், நியுயார்க் நகரில் ஒரு ஹோட்டலில் தங்கியிருந்த போது அவர் தங்கியிருந்த அறையைச் சுத்தம் செய்ய வந்த பெண்ணிடம் தகாத முறையில் நடந்துகொண்டதால் பாரிஸுக்குப் போகும் விமானத்திலிருந்து விமானம் கிளம்பப் பத்து நிமிஷங்களே இருந்தபோது, விமானம் நிறுத்தி வைக்கப்பட்டுக் கைது செய்யப்பட்டார். நேரே நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, நீதிபதி அவர் மேல் ஒரு வழக்குப் ... Full story

அமெரிக்காவில் வசந்த காலம்

முனைவர் நாகேஸ்வரி அண்ணாமலை சிறு பிள்ளையாகப் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த போது வசந்த காலம் பற்றிப் படித்திருக்கிறேன். ஆனால் நிஜ வாழ்க்கையில் வசந்த காலம் என்ற ஒன்றை அனுபவித்ததில்லை. தமிழ்நாட்டின் தென்பகுதியில் வளர்ந்து வந்தபோது அனுபவித்ததாக இப்போது நினைவிற்கு வருவதெல்லாம் கொளுத்தும் கோடை காலமும் மழைத் தண்ணீர் தேங்கி நிற்கும் தெருவில் நடப்பதற்கே பயந்த மழைக் காலமும்தான். வசந்த காலம் என்பதெல்லாம் புத்தகத்தில் படித்ததோடு சரி. வசந்த காலம் மட்டுமல்ல, மற்ற எந்தப் பருவ காலத்தையும் இந்தியாவில், அதுவும் ... Full story

உடையுதிர் காலம்

முனைவர் நாகேஸ்வரி அண்ணாமலை அமெரிக்காவில் கால நிலையில் நான்கு பருவங்கள் உண்டு. ஒவ்வொரு பருவத்திலும் இயற்கையில் சில மாறுதல்கள் ஏற்படும். அதற்கேற்றவாறு அமெரிக்கர்கள் உடை அணிவார்கள். செப்டம்பர் 21ஆம் தேதி இலையுதிர் காலம் ஆரம்பிக்கும். அப்போது மரங்கள் எல்லாம் இலைகளை உதிர்க்க ஆரம்பிக்கும். அப்படி உதிர்க்க ஆரம்பிக்கும் முன், இலைகள் பழுத்துத் தங்கள் வண்ணங்களைப் பல விதமாக மாற்றிக்கொள்ளும். பல வண்ணங்களில் பல மரங்களின் இலைகள் மிகவும் அழகாகக் காட்சியளிக்கும். இம்மாதிரி இலைகள் வண்ணங்ளை மாற்றிக்கொள்ளுவது மற்றப் ... Full story

எளியவர்களைக் காப்பதே வலிமை

முனைவர் நாகேஸ்வரி அண்ணாமலை உலகிலேயே பணக்கார நாடு; மனித உரிமைகளுக்காகப் பாடுபடும் நாடு என்றெல்லாம் தன்னைப் பற்றியே பீற்றிக்கொள்ளும் நாடு, அமெரிக்கா.  சிகாகோ இந்த நாட்டின் ஜனத் தொகையைப் பொறுத்தவரை மூன்றாவது இடத்தில் இருக்கிறது. பெரிய தொழில் நகரம் என்ற பெருமையும் இதற்கு உண்டு. அதிகக் குளிரும் பனியும் உண்டு என்பதோடு பயங்கரக் காற்றும் இங்கு வீசும் என்பது போன்ற வேண்டாத குணங்களும் சிகாகோவிற்கு உண்டு. பல ஆண்டுகளுக்கு முன் இந்த ஊரில் நாங்கள் வாழ்ந்த போதும் ... Full story

எது ஜனநாயகம்?

முனைவர் நாகேஸ்வரி அண்ணாமலை ஜனநாயகம் பற்றி சர்ச்சில் கூறியதாகக் கூறப்படும் ஒரு வசனம் இது: “ஜனநாயகம் என்பது மனிதன் கண்டுபிடித்தவற்றுள் மிகவும் மோசமான அரசியல் அமைப்பு முறை. ஆனால் இப்போதைக்கு இதைவிடச் சிறந்தது வேறு இல்லை”. ஜனநாயகம் என்பது மக்களால், மக்களுக்காக மக்கள் நடத்தும் ஆட்சி என்பது ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் வகுத்த வரையறை. இப்படிப்பட்ட ஜனநாயக ஆட்சியில் வலியவர்களுக்குச் சமமாக எளியவர்களின் உரிமைகளும் பாதுக்காக்கப்படுகின்றனவா என்றால் இல்லை என்றுதான் சொல்லவேண்டியிருக்கிறது. ஜனநாயகம் வெற்றிகரமாக நடைபெறுவதாக வெளியில் தோற்றமளிக்கும் ... Full story

மதத் துவேஷத்தை இத்தனை தூரம் வளர விடலாமா?

முனைவர் நாகேஸ்வரி அண்ணாமலை தங்கள் மதங்களைப் பற்றித் தீவிரமாக இருந்தவர்கள் தங்கள் மதங்களின் மேலிருந்த பற்றுதலைக் காட்டியதுமல்லாமல் மற்ற மதங்களையும் எப்படித் தூஷித்தார்கள் என்று எழுதிய மை உலரும் முன்பு, மதத்தின் பேரால் சில கொலைகள் நடந்திருப்பதும் இன்னும் சில கலவரங்கள் வெடிக்கக் கூடிய அபாயம் ஏற்பட்டிருப்பதையும் இன்றையப் பத்திரிகைச் செய்தி மூலம் அறிய முடிந்தது. அந்தக் காலத்தில் - பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் - என் மதம் பெரிது, உன் மதத்தில் எந்தச் சாரமும் ... Full story

சிறுபிள்ளைத்தனமான மதப் பிரச்சாரம்

முனைவர் நாகேஸ்வரி அண்ணாமலை சமீபத்தில் சிகாகோ பல்கலைக்கழகத்தின் நூலகத்தில் தமிழ் நூல்கள் பலவற்றை ஆராய்ந்து, அவற்றிற்கு எண் கொடுத்து, வகைப்படுத்தும் வேலை கிடைத்தது. இது சுவாரஸ்யம் நிறைந்த வேலையாக இருப்பதோடு சவால் விடும் வேலையாகவும் இருக்கிறது. நிறையப் பழைய புத்தகங்களைப் புரட்டிப் பார்க்கும் வாய்ப்புக் கிடைக்கிறது. இந்தப் புத்தகங்கள் எல்லாம் அமெரிக்காவைச் சேர்ந்த இறையியல் பேராசிரியர் ஒருவர் தமிழ்நாட்டிற்கு வந்து ஆராய்ச்சி செய்த போது சேகரித்த புத்தகங்கள். அவர் மறைவிற்குப் பிறகு அவர் மனைவி அவற்றைப் பல்கலைக்கழக நூலகத்திற்குக் கொடுத்துவிட்டார். ... Full story

இப்படியும் தாய்மார்களா?

முனைவர் நாகேஸ்வரி அண்ணாமலை தாயாக இருக்க விரும்பாத பெண்களைப் பற்றிப் போன வாரம் சொன்னேன்.  இப்போது தான் பெற்ற குழந்தைகளையே கொன்ற தாயைப் பற்றிய செய்தி, அமெரிக்காவில் வெளியாகியிருக்கிறது. ராணுவத்தில் உளவு வேலை பார்க்கும் ஒரு பெரிய அதிகாரியின் மனைவி, தன் இரண்டு குழந்தைகளைக் கொன்றிருக்கிறார். இந்தச் சம்பவம் நடந்த வரை இந்தத் தாயைப் பற்றியோ, இந்தக் குடும்பத்தைப் பற்றியோ யாரும் சந்தேகிக்கும்படி எதுவும் நிகழவில்லை என்று தெரிகிறது. இந்தத் தாய் ஒரு நல்ல தாயாக, தன் மகனைக் கால்பந்து விளையாட்டுப் பயிற்சிக்கு ... Full story

அமெரிக்கச் சமூகத்தில் தாய்மை

முனைவர் நாகேஸ்வரி அண்ணாமலை மார்ச் மாதம், உலக மகளிர் மாதம். மார்ச் எட்டாம் தேதி, உலக மகளிர் தினம். இன்று இந்த மகளிர் மதத்தை ஒட்டியோ, என்னவோ அமெரிக்கப் பெண் ஒருவர் செய்த அசாதாரணச் செயல் எல்லோர் கவனத்தையும் கவர்ந்திருக்கிறது. தான் எப்போதுமே ஒரு தாயாக இருக்க விரும்பியதில்லை என்று கூறியிருக்கும் இந்தப் பெண், தன் வாழ்க்கையை ‘Hiroshima in the morning’ என்னும் புத்தகமாக வெளியிட்டிருக்கிறார்.  அதில் தனக்கு எப்போதிலிருந்து தாயாக இருக்க விருப்பம் இல்லாமல் போனது என்று விளக்கியிருக்கிறார். இரண்டு பையன்களுக்குத் ... Full story

அமெரிக்காவில் பனிப் புயல்

முனைவர் நாகேஸ்வரி அண்ணாமலை ஜனாதிபதி கிளிண்டனுக்கு உதவி ஜனாதிபதியாக இருந்த ஆல் கோர், உலகம் இப்போது வெப்பமாகிக்கொண்டிருக்கிறது என்பதை வலியுறுத்த ஒரு ஆவணப் படம் எடுத்து, நோபல் பரிசைப் பெற்றார். ஆனால் எல்லோரும் அந்தக் கருத்தை ஒப்புக்கொள்ளவில்லை. பூமி என்னும் கோள் அவ்வப்போது வெப்பமடையும், அவ்வப்போது குளிர்ச்சி அடையும் என்று சில விஞ்ஞானிகளே கூற, பூமி இப்போது வெப்பமடைய ஆரம்பித்திருக்கிறது என்பதைப் பலர் ஒப்புக்கொள்ளவில்லை. ஆனால் இப்போது உலகின் பல பாகங்களிலும் இயற்கை அன்னை செய்துவரும் செயல்களைப் பார்த்தால் பூமியில் சில விபரீத மாற்றங்கள் நடந்து வருவதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.... Full story

குலைந்து வரும் அமெரிக்கக் குடும்பம்

முனைவர் நாகேஸ்வரி அண்ணாமலை ஜனவரி மாதம் 8ஆம் தேதி அரிஸோனா (Arizona)  மாநிலத்திலுள்ள டுக்ஸான் (Tucson) என்னும் ஊரில் அந்தத் தொகுதியின் அமெரிக்கக் காங்கிரஸின் கீழவை அங்கத்தினர் கேப்ரியல் கிஃப்பர்ட் (Gabrielle Giffords) தன் தொகுதி மக்களோடு கலந்துரையாடுவதற்காக அங்குள்ள மாலுக்கு முன்னால் நின்றுகொண்டிருந்தார். அப்போது ஜேரட் லாஃப்னர் (Jared Laughner) என்னும் 22 வயதானவன் - பல சமயங்களில் முறையில்லாமல்  நடந்துகொண்டதற்காகக் கல்லூரியிலிருந்து விலக்கப்பட்டவன் - அவரை மிக அருகில் நின்று சுட்டதோடு அவருக்கு அருகில் நின்றுகொண்டிருந்த அவர் உதவியாளர் உட்பட ... Full story

அமெரிக்காவில் பற்றாக்குறை!

முனைவர் நாகேஸ்வரி அண்ணாமலை அமெரிக்கா உலகிலேயே பணக்கார நாடு. இந்த நாட்டில் பற்றாக்குறை என்றால் நம்ப முடிகிறதா? ஆனால் அதுதான் உண்மை. பெரும் பணக்காரர்கள், தாங்கள் வாங்கும் கடனைத் தங்களால் அடைத்துவிட முடியும் என்று நம்பி மேலும் மேலும் கடனை வாங்கிப் பின் அதை அடைக்க முடியாமல் போய், திணறித் தங்கள் சொத்துகளை எல்லாம் விற்கும் நிலைக்கு ஆளாவதைப் பார்த்திருக்கிறோம், இல்லையா? அந்த நிலைமைக்குத்தான் அமெரிக்கா போய்க்கொண்டிருப்பதாக அமெரிக்காவின் எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்படும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். அமெரிக்கா என்ற நாடு உருவாக்கப்பட, பிரிட்டனிடமிருந்து சுதந்திரம் பெறப் ... Full story

அமெரிக்காவில் தேர்தல்கள்

நாகேஸ்வரி அண்ணாமலை அமெரிக்கா இரண்டு நாடுகளில் யுத்தம் புரிந்துகொண்டிருந்தது. இப்போது ஈராக்கில் 50,000 துருப்புகளை மட்டும் விட்டுவிட்டு மீதித் துருப்புகளைத் தாய்நாட்டிற்கு அழைத்துக்கொண்டிருக்கிறது. ஆஃப்கானிஸ்தானில் அமெரிக்க ராணுவத்தை எதிர்த்துப் போரிட்டு வரும் தாலிபானோடு இன்னும் மும்முரமாகச் சண்டை போட்டுக்கொண்டிருக்கிறது. இதையும் சீக்கிரமே முடித்து அமெரிக்கத் துருப்புகளை தாய்நாட்டிற்கு அழைத்துக்கொண்டு வந்துவிடுவோம் என்று ஒபாமா வாக்குறுதி அளித்தாலும் இரண்டு யுத்தங்களினால் ஏற்பட்ட பொருள் நஷ்டத்தாலும் மனித இழப்பாலும் அமெரிக்க மக்கள் மிகவும் துவண்டு போயிருக்கிறார்கள். இதற்கு மேல் உள்நாட்டில் பொருளாதாரத் தேக்கம் ... Full story
Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.