Posts Tagged ‘ஆ. செந்தில் குமார்’

Page 1 of 212

வினைத்தொகையே வாழ்க்கைத்துணையாய்…!!!

-ஆ.செந்தில் குமார். படர்கொடி நீயாக.. பற்றும் கொழுகொம்பு நானாக… சுடரொளி நீயாக.. செல்லும் பரவெளி நானாக... அடர்வனம் நீயாக.. தரும் அடைமழை நானாக… தொடுதிரை நீயாக.. அதன் உணர்திறன் நானாக... எந்நாளும் நந்நாளாய்.. பூமலராய்.. நம்மிடையே… என்றென்றும் வளர்பிறையாய் இன்பம் வளர்க..!! நடுபயிர் நீயாக.. அதற்கு உழுநிலம் நானாக… தொடுவானம் நீயாக.. அதில் விடிவெள்ளி நானாக… நிறைகுடம் நீயாக.. தாங்கும் பிரிமனை நானாக… உறைபனி நீயாக.. உகந்த சூழ்நிலை நானாக… எந்நாளும் நந்நாளாய்.. பூமலராய்.. நம்மிடையே… என்றென்றும் தேய்பிறையாய் இன்னல் மறைக..!! தாழ்குழல் நீயாக.. சூடும் விரிமலர் நானாக… வீழ்புனல் நீயாக.. சேரும் அலைகடல் நானாக… இலங்குநூல் நீயாக.. அதில் விளங்குபொருள் நானாக… உலவுதென்றல் நீயாக.. உனைப் பாடுகவி நானாக… எந்நாளும் நந்நாளாய்.. ... Full story

புத்தாண்டே வருக! வருக…! புதுவாழ்வு தருக! தருக…!

-ஆ. செந்தில் குமார். நல்லதோர் அரசு அமைய… புத்தாண்டே வருக! வருக..! நல்லோர் நட்பு நிலைக்க… புத்தாண்டே வருக! வருக..! பொல்லாதோர் விலகி ஓட… புத்தாண்டே வருக! வருக..! இல்லாத நிலை மாற… புத்தாண்டே வருக! வருக..! தொட்ட தெல்லாம் துலங்க… புத்தாண்டே வருக! வருக..! நட்ட தெல்லாம் தழைக்க… புத்தாண்டே வருக! வருக..! பட்ட தெல்லாம் மறக்க… புத்தாண்டே வருக! வருக..! கெட்ட தெல்லாம் விலக… புத்தாண்டே வருக! வருக..! பருவமழை பொய்க்காது பொழிய… புத்தாண்டே வருக! வருக..! துருவப்பனி உருகாது இருக்க… புத்தாண்டே வருக! வருக..! இருப்பதைக் கொண்டு மகிழ… புத்தாண்டே வருக! வருக..! தரணியெங்கும் அமைதி நிலவ… புத்தாண்டே வருக! வருக..! முத்தான ... Full story

இச்சையின் பிடியிலிருந்து இளம் பிஞ்சுகளைக் காப்போம்…!

ஆ. செந்தில் குமார். அனைத்திலும் குழந்தைகள் முதன்மையாக இருப்பதற் கேங்கும் பெற்றோரால்... அகவை ஐந்தை எட்டுவதற்குள் ஆற்ற வியலா மனவுளைச்சல்… அளித்திடும் இந்த கல்விமுறை அடிப்படை மாபெரும் தவறல்லவா…? பகட்டு வாழ்வே மகிழ்வளிக்கும் என்று எண்ணும் மாணவனை... பணம்காய்க்கும் மரமாய் உருவாக்கத் தெரிந்த இந்த பள்ளிகட்கு… பண்பில் உயர்ந்த சமுதாயம் ஒன்றை உருவாக்கத் தெரியாதா…? வழித்தடம் பிறழும் மனிதனுக்கு வாய்ப்புகள் இங்கே ஏராளம்… வீதிக் கிரண்டு மதுக்கடைகள் விதிமுறை மீறித் திறந்திருக்கும்… இளைஞன் வாசத்தை மட்டும் முகர்ந்துவிட்டு வந்த வழியே செல்வானா? இதயம் கவரும் திரைத்துறையில் அரைகுறை ஆடைக் கலாச்சாரம்… இருக்கும் ஊடகத்தில் பெரும்பாலும் இச்சையைத் தூண்டும் விளம்பரங்கள்… இம்மி அளவேனும் இவற்றுக்கு சமுதாய அக்கறை வேண்டாமா…? வன்முறை ... Full story

கருவாகி உருவாகி கவினுலகைக் காணும் வரை…

கருவாகி உருவாகி கவினுலகைக் காணும் வரை…
-ஆ. செந்தில் குமார். தந்தையின் உயிரணு ஆற்றலைப் பெற்று… தாயின் கருமுட்டை சுவற்றைத் துளைத்து… உட்புகுந் ததனுள் ஒன்று கலந்து… உயிரின் கருவாய் மாற்றம் பெற்றது…! மாற்றம் பெற்ற அச்சிறு கருவும்… மெல்ல நகர்ந்து கருப்பையை அடைந்து… கருப்பை சுவற்றில் ஒட்டிக்கொண்டு… குழந்தை உருவாய் மாறத் துடித்தது…! செல்களின் பகுப்பு வேகமாய் ... Full story

நாட்டுப்புறப் பாடல்…

ஆ. செந்தில் குமார்   சிங்கப்பூரு சீமபோயி… மச்சான் சட்டுபுட்டுன்னு சம்பாரிச்சி… செட்டிகுளம் கூட்டுரோட்டுல… பெட்டிக்கட ஒன்னு போடலாமுங்க..   சிங்கப்பூரு சீமபோயி… புள்ள சிக்கித் தவிக்க வேணுமாடி... சிக்கனமாக வாழ்ந்தோமுன்னா… சொர்கம்தானே நம்ம ஊருமே…   மேலத்தெருவு மணிகண்டனும்… மச்சான் மச்சி வீடு கட்டுறாருங்க… மஸ்கட்டு போயி சம்பாரிச்சி... மணிமணியா வாழுறாருங்க…   மச்சிவீடெல்லாம் வேணாம் புள்ள… நம்ம மண்குடிசைக்கு கொறவு ஏதுடி… மாடுகன்னு வாங்கிக்கலான்டி… புள்ள மணிமணியா வாழலான்டி…  ... Full story

முதுமலையின் வனப்பு..!

முதுமலையின் வனப்பு..!
ஆ. செந்தில் குமார்.                     குயில்கள் பாட்டு இசைக்க மயில்கள் நடனம் புரியும்! கிளிகள் கொஞ்சி மகிழ கொக்கு ஒற்றைக்காலில் நிற்கும்! புலிகள் சீறிப்பாய சிறு முயல்கள் பதுங்கி மறையும்! காட்டெருமை கரடி இருக்க காட்டுப்பன்றிக் கூட்டம் மேயும்! ஓநாய் நரியின் ஊளை - இரவில் அச்சம் கொள்ள வைக்கும்! யானைப்பிளிரல் சத்தம் கேட்க வரையாடு ஒன்று கத்தும்! மான்கள் துள்ளி ஓட - அதை சிறுத்தை பாய்ந்து பிடிக்கும்! வானரங்கள் யாவும் மரக்கிளைகளில் தாவும்! வண்டு தேனை அருந்த மலர்கள் பூத்துக் குலுங்கும்! வானுயர்ந்த மரங்களனைத்தும் காற்றில் அசைந்து ஆடும்! இயற்கை எழில் கொஞ்சும் முதுமலையைக்காண மனம் கெஞ்சும்!   Full story

தாகம் ……

தாகம் …...
ஆ. செந்தில் குமார்.                   ஈராயிரம் ஆண்டுகட்கு முன்பேயே நீராதாரத்தைப் பாதுகாக்க அல்லும்பகலும் பாராதுழைத்து அழகியவோர் கல்லணையை பார்போற்ற கட்டினான் கரிகாலன்!   இத்தகு வரலாறு நமக்கிருந்தும் மெத்தனப்போக்காய் வாழ்ந்ததனால் திணை யத்தனையளவு நீருக்கும் நித்தம் எத்தனை எத்தனை ... Full story

விடியலை நோக்கிப் புறப்படு

விடியலை நோக்கிப் புறப்படு
ஆ. செந்தில் குமார்.                       இளைஞனே! உன்னில் உறங்கும் ஆற்றல் உலகளவு -அது உன்னுள் உறங்கிப் பயனென்ன? உன்னை நசுக்கும் வலியிங்கு ஏராளம் - அதை நறுக்கிக் களைந்து வெளியே வா! உன் நாடு நலிந்து மெலிந்து போவதனை வேடிக்கை பார்த்து நிற்காதே! உன் உள்ளத்தின் அச்சத்தை அறவே தவிர்! உலகாளும் வல்லமை உனக்குண்டு! நீ சோம்பித் தூங்கி கழித்தது போதும்! சொக்கும் கண்ணைத் திற! நீ விட்டில் பூச்சியாய் வீழ்ந்தது போதும்! வீரு கொண்டு எழு! இளைஞனே! விடியலை நோக்கிப் புறப்படு - உலகு வியக்கும் வண்ணம் செயல்படு!! Full story

ஈழத்தின் குரலாய்…!

  ஆ. செந்தில் குமார்   வஞ்சியவள் சீதையின் வாட்டத்தைப் போக்கி - காத்து நின்ற அஞ்சனையின் மைந்தனவன் அனுமனைப் போன்று எதிரிகளின் படைதம்மை வீழ்த்தியே நித்தம் எமைக் காத்து நின்றான் எமது அண்ணன்! எங்குமே காணாத அவன் வீரம் கண்டு சிங்கக் கொடியுமே வீழ்ந்தது அன்று! சங்கும் முழங்கியது அவன் வீரம் கொண்டு எங்கும் தமிழ் ஒலிக்க செய்திட்டான் அவனே! செங்காந்தள் மலர் போன்ற தன் மனதைக் கொண்டு செந்தமிழர் தம் மனதில் ... Full story

வஞ்சகர்…!!

-ஆ. செந்தில் குமார்   கருத்திருப்பர்! வெளுத்திருப்பர்! கனிவான பேச்சில் இனித்திருப்பர்! உள்ளத்தில் கடுத்திருப்பர்! - எனினும் உடல் மொழியதை உணர்த்தாது! உறவென்பர்! உயிரென்பர்! உயிரில் கலந்த உணர்வென்பர்! உள்ளத்தில் கடுத்திருப்பர்! - எனினும் உடல் மொழியதை உணர்த்தாது! மதமென்பர்! இனமென்பர்! இனத்தின் மொழியென்பர்! உள்ளத்தில் கடுத்திருப்பர்! - எனினும் உடல் மொழியதை உணர்த்தாது! கண்னென்பர்! மணியென்பர்! கனவில் பூத்த மலரென்பர்! உள்ளத்தில் கடுத்திருப்பர்! - எனினும்... Full story

உறவுகள் மேம்பட…!

- ஆ. செந்தில் குமார் உதிர்க்கின்ற கடுஞ்சொல்லால் உறவு நிலைக்குமா? காண்கின்ற குற்றத்தால் சுற்றம் நிலைக்குமா? கடுகடுத்த முகத்தைக் கண்டால் குடும்பம் மகிழுமா? சிடுசிடுக்கும் பேச்சாலே சிந்தை குளிருமா? முணுமுணுக்கும் வார்த்தைகளால் முகங்கள் மலருமா? பசப்பு மொழி பேசினாலே பாசம் கிடைக்குமா? தந்திரங்கள் கையாண்டால் தந்தை மகிழ்வாரா? தறிகெட்டுத் திரிந்தாலே தாய் மகிழ்வாரா? நயவஞ்சகம் கொண்டிருந்தால் நட்பு நிலைக்குமா? நீதி நேர்மை இல்லையென்றால் நண்பன் கிடைப்பானா? செருக்கு கொண்ட கணவனாலே வாழ்வு இனிக்குமா? அகந்தை கொண்ட மனைவியாலே அமைதி கிடைக்குமா? அன்பு என்ற ஆணி வேரை உறுதிப் படுத்துவோம்! உறவு என்ற ஆலமரத்தை தழைக்கச் செய்குவோம்!   Full story

உழவுக்காடு….

உழவுக்காடு.... ***************** - ஆ. செந்தில் குமார் கண்ட கனவு பலிக்குதடி கண்ணம்மா! கருமேகம் திரண்டுடுச்சி கண்ணம்மா! கருமேகம் திரண்டுச்சின்னா கண்ணையா படும்பாடு தீருமா கண்ணையா? கருமேகம் திரண்டுச்சின்னா கண்ணம்மா காத்து மழை பெய்யுமடி கண்ணம்மா! காத்து மழை பெஞ்சிசின்னா கண்ணையா படும்பாடு தீருமா கண்ணையா? காத்து மழை பெஞ்சிச்சின்னா கண்ணம்மா காவிரிதான் கரை புரளும் கண்ணம்மா! காவிரிதான் கரை புரண்டா கண்ணையா படும்பாடு தீருமா கண்ணையா? காவிரிதான் கரை புரண்டா கண்ணமா ஏரி குளம் நெரம்புமடி கண்ணமா! ஏரி குளம் நெரம்புச்சின்னா கண்ணையா படும்பாடு தீருமா கண்ணையா? ஏரி குளம் நிரம்புச்சின்னா கண்ணம்மா காஞ்ச வயல் ஈரமாகும் கண்ணம்மா! காஞ்ச வயல் ஈரமானா கண்ணையா படும்பாடு தீருமா கண்ணையா? காஞ்ச வயல் ஈரமானா கண்ணம்மா ஏர் பிடிக்க ஏதுவாகும் கண்ணம்மா! ஏர் பிடிக்க ஏதுவானா கண்ணையா படும்பாடு ... Full story

பெண் ஒரு போராளி…!

பெண் ஒரு போராளி...!
-ஆ. செந்தில் குமார் கல்லடிகள் தாங்கி நிற்கும் பழுமரம் போல் - கணவனின் சொல்லடிகள் தாங்கி நிற்கும் பெண் ஒரு போராளி! கற்புநெறிக்கு இடையூறு எது வரினும் கலங்காமல் கனல் கக்கும் பார்வையினால் வாள் வீசும் பெண் ஒரு போராளி! சுட்டாலும் வெண்மை தரும் சங்கைப் போல் - எத்துன்பம் பட்டாலும் பிள்ளைக்காக இன்பமெனக் கொள்ளும் பெண் ஒரு போராளி! ஆணாதிக்கம் என்பது இங்கு இருந்தாலும் ஆடவர்க்கு நிகராக அனைத்திலுமே கோலோச்சி நிற்கும் பெண் ஒரு போராளி! அடக்குமுறைக்கு அடிபணியாமல் அழுத்தமான மனம் கொண்டு நினைத்த எண்ணம் நிறைவேற நிலைத்து நின்று போராடும் ஒவ்வொரு பெண்ணுமே ஓர் போராளி!!       Full story

தமிழ் பால் கொண்ட ஈர்ப்பால்…!

  ஆ. செந்தில் குமார்   இலக்கணத்தில் இருப்பது ஆண்பால் பெண்பால் பலர்பால் ஒன்றன்பால் பலவின்பால் எனும் ஐம்பால்... இவற்றுள் முதல் மூன்றும் உயர்திணைப்பால்... அடுத்த இரண்டும் அஃறிணைப்பால்... வள்ளுவன் தந்த அறத்துப்பால் பொருட்பால் இன்பத்துப்பால் எனும் முப்பால்... ஆண்பால் பெண்பால் என்ற இருபால் புலவரும் தமிழ்பால் கொண்ட ஈர்ப்பால்... வடித்த பாக்களின் படைப்பால்... மொழி வளர்ந்தது வனப்பால்! அன்னையின் அன்பால்... தந்தையின் அரவணைப்பால்...... Full story

முரண்பாடு….!

  ஆ. செந்தில் குமார்     அணுவின் உருவம் மிகச்சிறிது அதில் பொதிந்துள ஆற்றல் அளப்பரிது! அழகாய் தோன்றும் கடல்தனிலே ஆழிப் பேரலை மறைந்துளதே! அருவெறுப்பான சேற்றினிலே அழகாய்த் தாமரை மலர்கிறதே! அழகே உருவான பாம்பிடமோ ஆளைக் கொல்லும் நஞ்சுளதே! கரியென்றொதுக்கும் பொருள்தனிலே கட்டி வைரங்கள் விளைகிறதே! குயிலின் நிறமே கருப்பாரும் குரலின் வளமே அதன் சிறப்பாகும்! சில்லென்றிருக்கும் தென்றலுமே சீற்றம் கொண்டால் புயலாகும்! பொருமையின் உருவே பூமிப்பந்து - ... Full story
Page 1 of 212
Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.