இசைக்கவி ரமணன்
விடையற்ற கேள்விகளின் வெளிச்சப் புள்ளி`
--கவிஞர் ஹரிகிருஷ்ணன்
கால மயக்கம்
எது வேத காலம் என்னும் ஏகோபித்த முடிவு இன்னும் ஏற்படவில்லை. பண்டிதர்கள் ஒருவர்க்கொருவர் மாறுபடுவது ஒருபுறம் இருக்கட்டும். ஆராய்ச்சியாளர்கள், தங்கள் ஆராய்ச்சியை அரசியலும், மதங்களும் ஆளும்படி விட்டுவிட்டார்கள். அதனால் அவர்களில் ஒருவர் கூறுவதை இன்னொருவர் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். தொடர்ந்து நிலவும் இந்தப் பெருங்கூச்சலின் நடுவே, நமக்குச் சற்றேனும் தெளிவாகத் தெரியும் தகவல்கள் ...
Full story
இசைக்கவி ரமணன்
சிவனே குருவெனச் செப்பிய ஆசான்
அவனே சிவனென் றறிந்தேன் - தவமே
அறியா எனையும் அருளால் அணைத்தான்
வறியன் அடைந்ததே வாழ்வு
குருவே வெயிலாய்க் கொளுத்தி உறிஞ்சி
குருவே மழையாய்ப் பொழிவார் - குருவே
கரத்தைக் கொடுத்துக் கலத்தில் இருத்திக்
கரையில் இறக்குவார் காண்!
குருவின் திருவடியைக் கூடுவதும், அன்னார்
அருளே கதியென் றடங்கி - ...
Full story
கே.ரவி
நிறுவனர்
வானவில் பண்பாட்டு மையம்
Invitation (அழைப்பிதழை முழுமையாகக் காண)
அவன் ஒரு அதிசயம்
அவன் ஒரு அதிசயம்
அவன் ஒரு அவசியம்
அவன் ஒரு அவதாரம்...
Full story
அமிழ்தத்வனி மதுரத்வனி அமரத்வனி அருள்க
அழகுத் தமிழ் நதியில்முழு நிலவாய் நீ எழுக
தமிழ்போ லெதும் இலையென்பதைத் தரையெங்கணும் மொழிக! ஒரு
தமிழ்ச் சொல்லினில் தட மேவிடும் தடையாவையும் கழிக!
இதயத்தினில் நீயே சதம் இன்பத் தமிழ் வாணி
இருவேளையும் இடையின்றி நீ எனையாள்கிற ராணி
கதையெத்தனை நிதம்மாறிடும் ககனத் துலைநடுவே
கனலெற்றிடும் புனலாயெழும் கவிதையெனும் கேணி
...
Full story
உன்
வீணையே என் நெஞ்சமே, மின்
விரல்கள் பலவிதம் கொஞ்சுமே!
உன்
ஆணையே ஸ்வர மாகுமே, அவை
அண்டம் தாண்டியும் விஞ்சுமே!
முகில்
ஏணையில் வெண் ணிலவுபோல், உயிர்
எங்கும் களியே மிஞ்சுமே!
என்
ராணியே! உயிர் வாணியே! நீ
ரகசி யங்களின் கேணியே!
பத்து விரல்களின் பதை பதைப்பினைப்
பார்த்தவன் கதி என்னவோ!...
Full story
இசைக்கவி ரமணன்
வெற்றி வெற்றி வெற்றி என்று கூவு! இந்த’
விண்ணும் போத வில்லையென்று தாவு!
பற்றுகளைத் தந்துவிடு காவு – அங்கு
பராசக்தி வந்துநிற்பாள் பாரு!
முற்றும்யாவும் தீர்ந்துவிட்ட போது – நெஞ்சில்
முத்துத்தமிழ்க் கவிதையாய் முளைப்பாள்! அந்த
ஒற்றைமினுக்கிக் காலில்நெஞ்சைப் போடு! வந்த
ஊக்கத்திலே புல்நுனியில் ஆடு!
என்மனத்தைச் சந்தமய மாக்கி, அதில்
ஏகாந்தத் தேன்குளத்தைத் தேக்கி, கொல்லும்...
Full story
இசைக்கவி ரமணன்
சொல்லுக்கும் சொல்லுக்கும் நடுவிலே, சற்றும்
நில்லா திமைக்கின்ற சுந்தரீ!
முல்லையின் மொட்டுக்குள் மர்மமாய், நின்றே
மெளனத்தை சுவாசிக்கும் அந்தரீ!
எல்லைகள் இல்லா நிரந்தரீ! நெஞ்சுள்
எங்கோ த்வனிக்கின்ற மந்த்ரிணீ!
தொல்லைகள் நீக்கியெனைத் தொய்வின்றித் தூக்கவே
தோட்டத்தில் பாடிடும் பைங்கிளீ!
வற்றாத ஊற்றையே வார்க்கிறாய்! தக்க
வார்த்தையே தருணத்தில் சேர்க்கிறாய்!
முற்றாத புத்தியின் முன்னிலும், கட்டி...
Full story
இசைக்கவி ரமணன்
நகராத நாட்கள் நகர்கின்றன, எல்லாம்
நாயகி சொன்னபடி நடக்கின்றன, அவள்
பகராமல் எதையும்நான் செய்ததில்லை,
பகிராமல் எதையும்நான் மறைத்ததில்லை
சுகமென்றும் துயரென்றும் வருவதெல்லாம், சென்று
சொல்லாமல் ஒருநாளும் சென்றதில்லை
நகர்ந்துவிட்டாள் ஏனோ தெரியவில்லை! தவறு
நான்புதிதாய் என்செய்தேன் புரியவில்லை!
கணந்தோறும் எந்நலம் கேட்கின்றவள், நித்தம்
கண்ணார நேசத்தைப் பெய்கின்றவள், என்னைப்
பிணமாகப் பார்க்கின்ற பொருளென்னவோ? ...
Full story
இசைக்கவி ரமணன்
நீ கானம் நீ மோனம் நீயே மெளனம்
நீ தென்றல் நீ சூறை நீயே
அமைதி
தேவை தருவதும் நீ
அதைத்
தீர்த்து வைப்பதும் நீ
ஆசை தருவதும் நீ
மிக மிக
அலைய வைப்பதும் நீ
தேவை யாவும் தீர்ந்த பின்னும்
தேட வைப்பது நீ
யாவும் ...
Full story
நானிருக்கின்றேன்! ஓஹோ!
நானிருக்கின்றேன்! இந்த
வானும் வெளியும் அதையும் தாண்டி
வளருகின்ற மர்மங்களும்
தேனும் மலரும் தெப்பக் குளமும்
தேனடையும் தெருவின் முனையும்
ஊனும் உயிரும் அதிர அதிர
உரக்க உரக்கக் கூவுகிறேன்
நானிருக்கின்றேன்! ஓஹோ!
நானிருக்கின்றேன்!
அமைதி என்பதா? ஆ
னந்த மென்பதா? இந்த
அதிச யங்களின் அதிபதியாய்
ஆசையற்ற அரசனாய்...
Full story
இசைக்கவி ரமணன்
வாலைக் குமரியென வந்துநிற்கும் பேரழகை
சாலையிற் கண்டதுண்டு சந்நிதியில் பார்த்ததுண்டு
முலைப் பிறையில் முணுமுணுக்கும் தீபத்துக்
கோலச் சுடர்முனையில் கூடிச் சிலிர்த்ததுண்டு
வேலைநடு வேவுயிரை வெட்டிப் பறிக்குமின்னின்
நீல விளிம்பில் நிலைகுலைந்து போனதுண்டு
சாலையிலே தூலம் கரைந்து மிதக்கையிலே
பாலை நிகர்த்தநகை வாசம் நுகர்ந்ததுண்டு
கோலத் தமிழ்நமக்குக் கூடி இருந்தாலும்
ஏலுமோ இந்த எழிலாள் புதிர்விளக்க?...
Full story
இசைக்கவி ரமணன்
உச்ச மானத்துலே வச்ச நேரத்துலே
ஊருக்கெல்லாம் வெளக்கா உசுருக்கு உசுரா, அங்க
ஒய்யாரி ஆடுற ஓரத் தலப்பா
ஓடை நெளிகையிலே, துள்ளி
வெள்ளி மினுக்குற கெண்டை இடுப்புல
வெட்டும் மின்னல் அழகா?
நீ அம்பலத்து அழகா? இல்ல
அந்தரங்க நெசமா?
கள்ளிச் செடிப்பழமே! அடி காசிப் படித்துறையே!
முள்ளில் எழும் முனையே! அந்த முனையெழும் சுனையே! ஒரு...
Full story
இசைக்கவி ரமணன்
பாதையாய்த் தோன்றிப் பயணமாய் நீள்கிறாள்
பக்கத் துணையாய்ப் பரிந்து வருகிறாள்
ஆதரவில் அன்னையாய், கண்டிப்பில் தந்தையாய்
அக்குவே றாணிவேறாய் அத்தனையும் ஆய்கிறாள்
காதலே தேகமாய்க் கட்டழகாய், நெஞ்சின்
கவனத்தை ஈர்த்துக் கரத்தில் முகர்கிறாள்
சோதனை செய்து புடம்போட்டுக் காய்ச்சுவாள்
சுவடு துளியுமின்றிச் சுத்தமாய் நீக்கிடுவாள்
நெற்றித் திரையிலோ நெஞ்சிலோ நேர்வருவாள்...
Full story
இசைக்கவி ரமணன்
வாக்கிலொளி மின்னவைத்து
வாழ்விலிருள் பின்னவைத்து
வக்கணையாய் நீ அடிக்கும் கூத்து, இதை
வாழ்த்திடுவர் தூற்றிடுவர் பார்த்து, அம்மா
போக்கிடமே தெரியாமல்
போகும்நதி போலே என்னைப்
புரட்டிப் புரட்டி எடுக்கின்றாய், பொருள்
புரியவில்லை சிரிக்கின்றாய்
பார்க்குமிடம் அத்தனையும்
நீக்கமற நீயிருந்தும்
ஏக்கமெனும் பேய்க்கெனை நேர்ந்தாயே! உயிரில்
எறும்பென எங்கோ ஊர்ந்தாயே! அம்மா
சீக்கிரமே ...
Full story
இசைக்கவி ரமணன்
உலையுள்ளே உனைக்கண்டேன்
உற்ற பிறப்பும் உறுதுயரும் இன்பமும்
பெற்றவளே உன்றன் பிரசாதம்! மற்று
வினையே தெனக்கு? விதியே தெனக்கு?
உனையேநான் என்றேன் உணர்.
உணர்வின் முனையின் துளியாய்க் கனலும்
குணமற்ற விந்தைக் குழந்தாய்! ரணமான
நெஞ்சைத் தடவி நினைவைக் குலவியதைப்
பஞ்சாக்கித் தீயாய்ப் பருகு.
பருகப் பெருகும் பரதாகம்! நெஞ்சம்
உருக ...
Full story