Posts Tagged ‘இரமேஷ் அர்ஜுன்’

இரமேஷ் அர்ஜூன் கவிதைகள்

1 என் வார்த்தைகளில் இருக்கும் வன்மங்களுக்கு ஆயுள் தண்டனை கொடுக்கிறேன். ஆனால் அவை சுதந்திர தினம் தியாகிகள் தினம் அந்த தினம் இந்த தினம் என்று சிறப்பு விடுதலைப் பிரிவில் விடுதலை ஆகும் கைதிகளைப் போல் மீண்டு வந்துவிடுகின்றன திருந்திவிட்டேன் என்னும் போர்வையில்... 2 சாயங்கள் அற்ற மாய வாழ்வொன்றை நோக்கி நகர முற்படுகிறது ஆன்மா, சாயம் வெளுத்துப் போகாமல் காத்துக் கொள்ள போராடுகின்றது மனம், இவற்றில் வெற்றி தோல்வி யாருக்கு? யாருக்காயினும் பெறுவது என்னவோ நாம் தான். 3 வறண்ட பாலையின் நீட்சி நீளும் கானல் நீர்க்காடு கண்கள் காணாத ஒளி மெய் தீண்டாத தனிமை நிலவின் தகிப்பு இவற்றைக் கடக்க முயன்ற இறக்கைகள் அற்ற கதிர் ஒன்று என் இரவுகளைத் தீண்டாத பனித்துளிக்குள் மெல்ல தன்னைக் கரைத்துக்கொள்ள காத்துக் கிடக்கிறது 4 உச்சிப் பொழுதின் உக்கிரத்தை எளிதில் கடந்துபோன மனம் மனவெளியில் தேகம் குடித்து சிலிர்ப்பைக் கடக்க முடியா உக்கிரம் நெருப்பைக் கடந்து உறைபனியில் உயிர் வேகும் சுகம் தேடி தோற்றுப் போகிறது சவம். 5 பனி மழையின் திரை கடந்து நிலவின் ஒளி கொள்ளும் இரவு இருண்மையின் வெறுமை கண்டு காரிருள் ... Full story

கவிஞர் இரமேஷ் அர்ஜுன் கவிதைகள்

-இரமேஷ் அர்ஜுன் 1 விடியல்அறியா இரவொன்றில் தொடங்குகிறது வாழ்க்கை உறக்கத்தின் ஊடே இடைப்பிறவரல் என்பதாய் கனவொன்றில் ஆழ்மனத் தேடலின் அசைவுகள் காட்சித் தெளிவில்லாது கரைந்து போகும் கனவில் காமத்தின் நிறைவேறா புணர்தலின் அவஸ்தைகளாக கடந்து போகிறது வாழ்க்கை விடிவதற்குள்ளாகவே. 2 ஏழுநாட்கள் என்றார்கள் இறந்துபோனது இரண்டுநாட்கள். பிறகு ஐந்துநாட்கள் என்றார்கள் அதுவும்அந்நியப்பட்டுப் போக மூன்று என்கிறார்கள். மூன்றும் இல்லாது முதல் நாளுக்கே எட்டிப்பார்க்காது வற்றிப் போகிறது அவளுக்கான ஜீவநதி. 3 கரைபுரண்டுஓடும்நீரில் நிலம்தேடும்கால்கள் நிலையைஉணரத் துடிக்கும் கைகள் ஏனோ கண்கள் மட்டும் விண்ணைநோக்கி நிலையறியா பொழுதொன்றில் 4 யோனிக்குள் உமிழப்படும் எச்சிலின் ஒற்றைப்புள்ளியில் உருக்கொள்ளும் உலகம் உணர்வதே இல்லை ஊற்றுக்காலில் வழிந்தோடும் புனித தீர்த்தத்தில் தள்ளிவிடப்பட்ட தாழம்பூ அணியாத்தலைவன் வந்தேறிகளின் வாசல் திறவுகோல் என்று... 5 என் எழுத்துக்களில் சிதறிக் கிடக்கும் கவித்துவத்தை அழகு படுத்தும் ஆன்மாவின் நாதமென இசைத்துக் கொண்டிருக்கிறது எனக்கான உள்வெளியின் நிழல் முற்றத்தில் அவளின் நினைவுகள்.   Full story
Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.