Posts Tagged ‘உமாஸ்ரீ’

எதற்காக எழுதுகிறேன்?

எதற்காக எழுதுகிறேன்?
-உமாஸ்ரீ எழுத்தாளர் திருமதி ஜெயா சீனிவாசன் எழுதும் கதைகள் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும். நகைச்சுவையாய் இருக்கும். கதையை வசனங்கள் நகர்த்திப் போகும். மிகவும் புதுமையாய், நவீனமாய், பாரதியின் புதுமைப் பெண் போல் சிந்திப்பவர். பல கட்டுரைகளை எழுதியிருக்கிறார். சைனா, மானசரோவர், நாகலாந்து பயணக் கட்டுரைகள் மற்றும் கோவில் கும்பாபிஷேகம் பற்றியும் எழுதியிருக்கிறார். கலைமகளில் அவருடைய கதைகள், கட்டுரைகள் பிரசுரம் ஆகியிருக்கின்றன. பொழுதுபோக்குக் கதைகளில் “ ரா... சா... ர... தா...”  என்பது ஒரு நல்ல ... Full story

தீபம்

கார்த்திகைத் தீபம் வரபோகிறது. கவிஞர் கவிஞர் எஸ்.ஆர்.ஜி சுந்தரம் எம்.ஏ எட்டு சுடர் விடும் தீபங்களை ஏற்றியிருக்கிறார். படித்து ரசியுங்கள். உமாஸ்ரீ   அன்றைய பாரத விடுதலைக்கே அனைத்தியு மிழந்த அமரர்க்கு அஞ்சலியா யேற்றுவோம் ஒருதீபம் !   பாரத எல்லைப் பாதகரைப் பதராய் விரட்டும் படைகட்குப் பணிவா யேற்றுவோம் ஒருதீபம் !   பாரதம் போற்றிய பண்பாட்டில் பாதை யமைத்து வாழ்வோர்க்குப் பக்தியா யேற்றுவோம் ஒருதீபம் !   இலஞ்ச பொன்னும் இழுக்கினுக்கே இலக்கா காநல் தூயோர்க்கு இனிதா யேற்றுவோம் ஒருதீபம் !   முதியோர் பணியில் முகஞ்சுளியா முதிர்ந்த ஞான முற்றோர்க்கு முத்தா யேற்றுவோம் ஒருதீபம் !   ஊன முற்ற உயிர்களெலாம் உயர்ந்து வாழ உழைப்போர்க்கு உவந்தே யேற்றுவோம் ஒருதீபம் !   மானுட வாழ்வு மாண்புறவே முத்தமிழ் இலக்கியம் முனைவோர்க்கு மறவா தேற்றுவோம் ஒருதீபம் ... Full story

எதற்காக எழுதுகிறேன்?

எதற்காக எழுதுகிறேன்?
-உமாஸ்ரீ எழுத்தாளர் ரேவதி பாலுவிடம் நேர்காணல் எல்லோரும் சிறுகதை எழுதலாம். ஆனால் ஒரு நல்ல  சிறுகதை எழுதுவது சுலபமல்ல.  எப்படி ஒரு ஜாங்கிரியைச் சிலரால்தான் நன்றாக உருவாக்க முடியுமோ அதுபோல் சிலரால்தான் நல்ல சிறுகதையை எழுத முடியும். எழுத்தாளர் ரேவதி பாலு ஒரு நல்ல சிறுகதை எழுத்தாளர். சிறந்த சிறுகதைகளை எழுதிக் கொண்டிருப்பவர். அவர் கதைகள் பல பத்திரிகைகளில் வந்து கொண்டிருக்கின்றன. இனிமேலும் வந்து கொண்டிருக்கும். திருமதி ரேவதி பாலு பிரபல ... Full story

எதற்காக  எழுதுகிறேன்?

எதற்காக  எழுதுகிறேன்?
-உமாஸ்ரீ 'ராகிலா' பெயர் விசித்திரமாக இருக்கிறதில்லையா? ராகிலா என்ற பெயரை எப்படி வைத்தார்கள் என்று அவரே கீழே கூறுகிறார்.  ராகிலா  ஒரு  கவிதாயினி; மற்றும் சிறந்த சிறுகதை எழுத்தாளர். அவர் எழுதிய இரண்டு சிறுகதைத் தொகுப்புகளைப் படித்தேன். (”விடியலை நோக்கி...,”  “தெய்வத் தாய்”   இரண்டும்  மிக அற்புதமாக உள்ளன. அவருடன் ஒரு நேர்காணல். 1. தங்களைப் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்களேன்... ... Full story

எதற்காக எழுதுகிறேன்?

எதற்காக எழுதுகிறேன்?
-உமாஸ்ரீ   திரு. எஸ்.ஆர்.ஜி. சுந்தரம் குழந்தைகளுக்கு ஏராளமான புத்தகங்களையும் கலை நிகழ்ச்சிகளையும் படைத்திருக்கிறார். இன்னும் எழுதிக்கொண்டே இருக்கிறார். அவர் அலைபேசி எண்: 99529 13872. சென்னை மூவரசன் பேட்டையில் வசிக்கும் அவருடன் ஒரு நேர்காணல். 1. தங்களுக்குக் கதை எழுத வேண்டும் - குறிப்பாக சிறுவர்களுக்கு நூல்கள் எழுத வேண்டும் என்னும் ஆர்வம் எப்படி வந்தது? நான் 21.8.1940 அன்று பிறந்தேன். . சென்னைத் துறைமுகத்தில் 37 ஆண்டுகள் பணிபுரிந்து ஓய்வுபெற்றேன். மாணவர் பருவம்தொட்டே ... Full story

நான் ரசித்த புத்தகம்

நான் ரசித்த புத்தகம்
-உமாஸ்ரீ “மோகனா ஓ மோகனா” – என்னும் கவிதைத் தொகுப்பைப் படித்த கண்ணும் மனசும் களிக்கின்றன. திரு. கே. சிவா ரெட்டியின் தேர்ந்தெடுத்த 35 தெலுங்குக் கவிதைகளின் தமிழ் மொழிபெயர்ப்புதான் “மோகனா ஓ மோகனா”. தமிழில் மொழி பெயர்த்தவர் ஹைதராபாத்தில் வசிக்கும் பிரபல எழுத்தாளர் திருமதி சாந்தா தத். 112 பக்கங்கள் கொண்ட இந்தக் கவிதை தொகுப்பு ஒரு சாகித்திய அகாதமி வெளியிடு. பிரஞ்சு இலக்கியத்தின் தலைசிறந்த கவிஞரான விக்தர் ஹீயூகோ எழுதிய ... Full story

“கரையைத் தேடும் அலைகள்” – நூல் மதிப்புரை

“கரையைத் தேடும் அலைகள்”   - நூல் மதிப்புரை
உமாஸ்ரீ  நான் ரசித்த புத்தகம் – லக்ஷ்மி ரமணனின் “கரையைத் தேடும் அலைகள்” சிறுகதை எழுதுவது ஒரு கலை. சிறப்பாகச் சிறுகதை எழுதுவது ஒரு தனித்திறமை. எழுத்தாளர் லக்ஷ்மி ரமணனிடம் அது மிகுதியாக இருக்கிறது. லக்ஷ்மி ரமணன் ஒரு அருமையான எழுத்தாளர். குடத்திலிருக்கும் விளக்குப் போல் அடக்கம் மிகுந்தவர். வாசகர்களின் அன்புக்கும் மதிப்புக்கும் உரியவர். அவர் எழுதிய ”கரையைத் தேடும் அலைகள்” என்னும் புத்தகத்தைப் படிக்கும் பாக்கியம் கிடைத்தது. ஒரு நாவலும், ஒரு ... Full story

புற்று நோயை ஜெயித்த பெண்மணி

புற்று நோயை ஜெயித்த பெண்மணி
ஸ்ரீதரன் காப்பாற்ற முடியாத நோய் புற்று நோய்.. திருமதி வேதவல்லி பார்த்தசாரதி புற்று நோயிலிருந்து ( 3வது ஸ்டேஜ்)  மீண்டு வந்து 15 ஆண்டுகள் ஆகி விட்ட்து.. 32 கீமோதெரபி செய்து தலை மயிர் எல்லாம் போய் மொட்டை அடித்தது போன்ற தலையுடன் இருந்தவர் அவருடைய  பாஸிடிவ் அப்ரோச் மூலம் .  புற்று நோய் பாதிக்கப்  பட்டவர்களுக்கு யோகா மூலம் மனவலிமை கிடைக்க உதவி செய்கிறார்.. ... Full story

படித்தேன், ரசித்தேன் …

படித்தேன், ரசித்தேன் ...
--உமாஸ்ரீ. சமீபத்தில் எழுத்தாளர் திருமதி. ஸ்ரீஜா வெங்கடேஷ் எழுதி வெளிவந்த ”பாண்டியன் நெடுங்காவியம்“ என்ற சரித்திர நாவலைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. படித்தவுடன் உண்டான மகிழ்ச்சியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். கேன்மின் ! கேன்மின் ! ஸ்ரீஜா வல்லமையில் எழுதிக் கொண்டிருப்பவர்; வல்லமைக்குப் பரிச்சியமான எழுத்தாளர் மட்டுமல்ல ; மிகச் சிறந்த எழுத்தாளரும் கூட . இந்த நாவலின் மூலம் தமிழில் வரலாற்றுப் புதினம் ... Full story

சொந்தங்கள்: நான் ரசித்த புத்தகம்

சொந்தங்கள்: நான் ரசித்த புத்தகம்
-- உமாஸ்ரீ. நான் சமீபத்தில் ஹேமா கிருஷ்ணமூர்த்தி எழுதிய "சொந்தங்கள்" என்ற நாவலைப் படித்தேன். நூற்று நாற்பத்து நான்கு பக்கங்கள் கொண்ட அழகான நடையுடன் கூடிய தித்திக்கும் புதினம். கதை ஆந்திர மாநிலத்தில் உள்ள செகந்தாராபாத் நகருக்கு அருகிலுள்ள ஒரு ரயில்வே காலனியில் ஆரம்பிக்கிறது. ரயில்வே காலனியில் உள்ள அனைவரையும் பற்றி சிறப்பான அறிமுகம் கொடுக்கிறார் ஆசிரியர். இதில் நகைச்சுவை பொங்கி வழிகிறது. ரயில்வேயில் வேலை ... Full story

அன்பெனும் பிடியுள் …

அன்பெனும் பிடியுள் ...
-- உமாஸ்ரீ. கீழ்த்திசையில் மெல்லென எழும் உதயசூரியன் தன் தங்கக்கதிர்களை அழகாகப் பரப்பினான். “மதுரம் அப்பார்ட்மெண்ட்ஸ்” பெயருக்கேற்ற மாதிரி அழகான இருபது வீடுகள் கொண்ட கம்பீரமான அடுக்கு மாடி குடியிருப்பு. ஏ பிளாக், பி பிளாக் என்று இரண்டு பிரிவுகள் உண்டு. சென்னைக்கு அருகிலிருக்கும் கோவூரிலுள்ள அந்தக் குடியிருப்பு சமீபத்தில்தான் கட்டி முடிக்கப்பட்டது. ”வாட்ச்மேன், வாட்ச்மேன்“ பத்மா உரத்த குரலில் அழைத்தாள். ரத்தன் கீழேயிருந்து அண்ணாந்து பார்த்து “இதோ வந்துட்டேம்மா“ என்று குரல் கொடுத்து விட்டு மேலேறிச் சென்றான்.... Full story

நான் படித்த புத்தகம்- “ யாதுமாகி நின்றாய் “

நான் படித்த புத்தகம்- “ யாதுமாகி நின்றாய் “
உமாஸ்ரீ சமீபத்தில் எழுத்தாளர் பவள சங்கரி எழுதிய “யாதுமாகி நின்றாய் ” என்ற புத்தகத்தைப் படிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. நான் படித்து சுவைத்ததை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகிறேன். ”யாதுமாகி நின்றாய்”  பதினெட்டு அழகான சிறுகதைகள் அடங்கிய திரட்டு. எழுத்தாளர் சிவசங்கரி வாழ்த்துரை வழங்கியிருக்கிறார். முதல் கதை “மோட்டூர்க்காரி “ கடைசி கதை “காக்காய் பொன்”. புத்தகத்தில் உள்ள சித்திரங்கள் கண்ணைக் கவருகின்றன. ... Full story

எதிர் வீடு

எதிர் வீடு
உமாஸ்ரீ அதிகாலை நேரம். இருள் நீங்கி வெளிச்சம் கொஞ்சம் கொஞ்சமாக படர்ந்து கொண்டிருந்தது. அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் கொஞ்ச நேரம் தூங்கலாம் என்று பார்த்தால் வேத கோஷங்களின் இனிமையான இசை என்னை எழுப்பி விட்டது. என் கணவர் பக்கத்தில் நன்றாக குறட்டை விட்டு உறங்கிக் கொண்டிருந்தார். இடியே விழுந்தாலும் அவர் தூக்கம் கலையாது. அப்படி ஒரு வரம் வாங்கிக்கொண்டு பிறந்திருக்கிறார். நான் அதற்கு நேர் எதிர். சிறு ஓசை கேட்டாலும் எழுந்து விடுவேன்.    வாசல் கதவைத் திறந்து பார்த்தேன். எதிர் வீட்டில் நான்கு சாஸ்திரிகள் ... Full story
Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.