Posts Tagged ‘எம்.ஜெயராமசர்மா’

Page 1 of 512345

காதல் எனும் கனியமுது !

மகாதேவஐயர் ஜெயராமசர்மா ..... மெல்பேண் .. அவுஸ்திரேலியா இளமையிலும் காதல் வரும் முதுமையிலும் காதல் வரும் எக்காதல் இனிமை என்று எல்லோரும் எண்ணி நிற்பர் இளமையிலே வரும் காதல் முதுமையிலும் தொடர்ந்துவரின் இனிமைநிறை காதலென எல்லோரும் மனதில் வைப்போம் காதலுக்குக் கண்ணும் இல்லை காதலுக்குப் பேதம் இல்லை காதல் என்னும் உணர்வுதனைக் கடவுள் தந்தார் பரிசெனவே! காதலிலே மோதல் வரும் காதலிலே பிரிவும் வரும் என்றாலும் காதல் எனில் எல்லோரும் விரும்பி நிற்பார்! காதல் என்று சொன்னவுடன் கவலை எல்லாம் ஓடிவிடும் கனவுபல தோன்றி வந்து கண்ணுக்குள் புகுந்து நிற்கும் கற்பனையில் உலா வந்து களிப்புடனே நாம் இருப்போம் காதல் என்னும் உணர்வில்லார் கல்லினுக்கே சமம் ஆவார் காவியத்தில் காதல் வரும் ஓவியத்தில் காதல் வரும் கல்வியிலும் காதல் வரும் காசினிலும் காதல் வரும் அக்காதல் கொள்ள மனம் ஆசை பட்டு ... Full story

நன்றாகப் பொங்கிடுவோம்

நன்றாகப் பொங்கிடுவோம்
எம் . ஜெயராமசர்மா .... மெல்பேண் ... அவுஸ்திரேலியா மனங்கவரும் மார்கழியில் மகத்தான நாட்கள்வரும் இந்துக்கள் கிறீத்தவர்கள் எல்லோரும் பங்குகொள்வர் வைஷ்ணவமும் சைவமும் வாழ்த்திநிற்கும் திருவெம்பா மார்கழியின் முக்கியமாய் மனமாசை அகற்றிநிற்கும் ! ஒளிவிழா எனும்பெயரால் உத்தமராம் யேசுபிரான் வழிநிற்போர் அனைவருமே வாழ்த்துக்கூறி நிற்பார்கள் பீடுடைய மாதமாய் மார்கழியும் அமைந்துதுநின்று பெருமகிழ்சி வருவதற்கு தைதனக்கு வழிகொடுக்கும் ! தைபிறந்தால் வழிபிறக்கும் என்கின்ற நம்பிக்கை தளர்வுநிலை அகன்றுவிட தானுரமாய் அமைந்திருக்கு பொங்கலென்னும் மங்கலத்தை பொறுப்புடனே தருகின்ற எங்கள்தையை எல்லோரும் இன்பமுடன் வரவேற்போம் ! புலம்பெயர்ந்த நாட்டினிலும் பொங்கலுக்குப் பஞ்சமில்லை நிலம்பெயர்ந்து வந்தாலும் நீங்கவில்லை பண்பாடு நலந்திகழ வேண்டுமென்று யாவருமே நினைத்தபடி உளம்மகிழப் பொங்கலிட்டு உவகையுடன் இருந்திடுவோம் ! வாசலிலே தோரணங்கள் வடிவாகக் கட்டிடுவோம் வண்ணப் பொடிகொண்டு கோலங்கள் போட்டிடுவோம் எண்ணமெலாம் இறைநினைவாய் எல்லோரும் இருந்திடுவோம் எங்கள்வாழ்வு விடிவுபெற இணைந்து நின்றுபொங்கிடுவோம் ! நிலமெங்கும் சமாதானம் நிலைக்கவென்று பொங்கிடுவோம் வளம்கொளிக்க வேண்டுமென்று வாழ்த்திநின்று பொங்கிடுவோம் இளம்மனசில் இறையெண்ணம் எழுகவென்று ... Full story

திருத்திடு கந்தப் பெருமானே !

    மகாதேவஐயர் ஜெயராமசர்மா மெல்பேண் ... அவுஸ்திரேலியா   மனம் உருகும் அடியார்கள் தினமும் உனைக் காண மரகத மயிலேறும் பெருமானே அரு உருவமாய் இருந்து திரு உருவமாய் வந்த அழகு வடிவேலப் பெருமானே கருவிலே வளரும் பிள்ளை உனது நினைவிலே வளர கருணையே தருவாய் கந்தபெருமானே தெரு எலாம் திரியும் சிறு மதி படைத்தோரை திருத்திடு கந்தப் பெருமானே ! Full story

இன்னருளைச் சொரிந்துவிடு

  மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா மெல்பேண் .. அவுஸ்திரேலியா பழனி மலை மீதமர்ந்தாய் பாவம் தனைப் போக்கிவிடு உளம் இரங்கி கேட்கின்றோம் உன் முகத்தைக் காட்டிவிடு தனம் எமக்குத் தந்தாலும் தயாளம் அதில் சேர்த்துவிடு உதவி விடும் உயர்குணத்தை உளம் இருக்க அருள்புரிவாய் கெட்ட எண்ணம் வாராமல் சஷ்டி தனைப் பிடிக்கின்றோம் குட்டி எங்கள் தலைமீது குமரா அருள் சொரிந்துவிடு நிட்டூரம் செய்து நிற்கும் ... Full story

எல்லோரும் பணிந்து நிற்போம் !

  மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா மெல்பேண்.... அவுஸ்திரேலியா கருணைகூர் முகங்கள் கொண்ட கந்தனை நினைக்கும் இந்த பெருமையாம் விரதம் தன்னை உரிமையாய் எண்ணி நிற்கும் அடியவர் ஒன்று கூடி அன்னத்தை ஒறுத்து நிற்பர் அவருளம் புகுந்து கந்தன் அருளொளி காட்டி நிற்பான் ! கந்தனை நினைக்கும் இந்த சஷ்டியாம் விரதம் தன்னை சிந்தையில் இருத்தி வைத்து சீலமாய் இருக்கும் மாந்தர் வந்திடும் வினைகள் எல்லாம்... Full story

இனிய வாழ்த்துகள்!

இனிய வாழ்த்துகள்!
அன்புடன் ஜெயராமசர்மா தம்பதியர் Full story

காதலுடன் கைதொழுவோம்!

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா ... மெல்பேண் ... அவுஸ்திரேலியா அன்னையும் தந்தையும் ஆற்றிய பெருந்தவத்தால் அகிலத்தில் நம்பிறப்பு அற்புதமாய் ஆகியது அரவணைத்துப் பாலூட்டி அன்புதனை காட்டியவர் அறிவுடனே வாழ்வதற்கு ஆசானைக் காட்டினரே ஆசானின் அரவணைப்பால் அசடெம்மை விட்டகன்று ஆண்டவனின் நினைப்புடனே அருங்கல்வி அமைந்ததுவே ஆண்டவனை நினைக்கும்படி அக்கல்வி அளித்துநின்ற ஆசானை வாழ்நாளில் அகமதிலே இருத்திவைப்போம் எல்லோர்க்கும் ஆசானே ஏணியாய் இருந்திடுவார் வல்லவராய் நல்லவராய் வளர்ப்பதும் ஆசானே பொல்லாத குணமதனை போக்குவதும் ஆசானே நல்லபல சேதிகளை நல்குவதும் ஆசானே நல்லாசன் வாய்த்துவிடல் நாம்செய்யும் பாக்கியமே நம்வாழ்வின் பெருங்கொடையே நல்லாசன் கிடைப்பதுவே ஆதலினால் ஆசானை அடிபரவி நின்றிடுவோம் அவராசி கிடைப்பதுவே அனைவருக்கும் பெருங்கொடையே அர்த்தமுடன் வாழ்வதற்கு ஆசானின் ... Full story

பொலிவாக அமையும் அன்றோ !

  எம். ஜெயராமசர்மா .... மெல்பேண் .... அவுஸ்திரேலியா  மகிழ் வோடு வாழுதற்கு வழிகள் பல இருக்கிறது அவை மனதில் எடுக்காமல் அல்லல் பட்டு நிற்கின்றோம் கோபம் எனும் குணமதனை குறைத்து நாம் வாழ்ந்தாலே குவலயத்தில் எம் வாழ்வு குதுகலமாய் அமையும் அன்றோ ! கோபமது வந்து விடின் குறை சொல்லத் தொடங்கிடுவோம் கோபமது மேல் எழுந்தால் கொலை கூடச் செய்திடுவோம் ... Full story

காத்துநிற்போம் !

  மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா ... மெல்பேண் ... அவுஸ்திரேலியா வெள்ளம் ஒருபக்கம் விபத்துகள் ஒருபக்கம் தெள்ளுதமிழ் நல்லறிஞர் பிரிவுத்துயர் ஒருபக்கம் நல்லநட்பு என்றுசொல்லி நம்பவைத்த நாடுகளும் நரிகளாய் மாறிநின்று நாசம்செய்யும் ஒருபக்கம் உள்ளூரில் அரசியலார் ஊழல்கொள்ளை ஒருபக்கம் உயர்கல்வி உடையாரின் உன்மத்தம் ஒருபக்கம் நல்லபல இருக்கின்ற நற்பாரத நாட்டினிலே தொல்லை எலாம் தொலைந்து நிற்க சுதந்திர நாள் வேண்டி நிற்போம் ! பாரதத்தாய் மடிமீது பலதலைவர் இருந்தார்கள் பாரதத்தாய் துயர்துடைக்க ... Full story

அவுஸ்திரேலியாவில் தமிழரது வாழ்க்கை முறை

ம. ஜெயராமசர்மா .... மெல்பேண் ... அவுஸ்திரேலியா முன்னாள் தமிழ் கல்வி இயக்குநர் M.Phil , Dip.in Ed , Dip.in.Soc , SLEAS அவுஸ்திரேலியா பல்லின கலாசாரம் கொண்ட நாடாக விளங்குகிறது .இங்கு வந்த தமிழர்கள் தமக்குரிய வாழ்க்கை முறையினத் தேர்ந்தெடுத்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இங்கே இந்தியாவில் இருந்து வந்த தமிழர்களும், இலங்கைத் தமிழர்களும், சிங்கப்பூர், மலேசியத் தமிழர்களும் வாழ்கிறார்கள்.இவர்களுக்குள் பெரும்பாலும் மொழியும், சமயமும், பாலமாக இருப்பதனையே முக்கியமான தொடர்பென்று கருதலாம். இலங்கையில் இருந்து வந்த தமிழர்களிலே பல பிரிவுகளும் காணப்படுகிறது.ஆதாவது உயர் கல்வித்தகைமைகளுடன் ... Full story

அன்னைத் தமிழ் அகமகிழும்!

நன்றி   எனும்   வார்த்தையினை நாம்  சொல்லத்  தயங்குகிறோம் " தாங்ஸ் " அங்கே வந்துநின்று தான்  நிமிர்ந்து  நிற்கிறது மன்னிக்க  என்று  சொல்ல மனம்  எமக்கு  வருகுதில்லை " வெரிசாறி " என்று  சொல்லி வேற்று  மொழி  உதிர்க்கின்றோம்  ! வந்து    நிற்கும்   விருந்தினரை " விசிட்டர் " என அழைத்திடுவோம் காலை  நேர  உணவதனை " பிரேக்பாஸ்டாய் " ஆக்கி  நிற்போம் மாலை  நேரம் உண்ணுவதை " டிபன் " என்று மாற்றிவிட்டு மனமகிழ்வை " ஹப்பி "  என்று வாயாரச் சொல்லி  நிற்போம்    ! அம்மாவின்  தங்கை  வீட்டில் " அன்ரியாய் "  ஆகி  நிற்பார் அப்பாவின்  தம்பி  அங்கே " அங்கிளாய் "  பெயர் பெறுவார் பெரியப்பா  பெரிய  அம்மா எனும் அருமை வார்த்தையெலாம் " அங்கிளெனும் " பெயர்  பெற்று அன்னைத் தமிழ் ஒழிந்துகொள்ளும்   ! பிறந்த     நாள்    விழாதன்னில் பெருங்  குரலால்  யாவருமே " ஹப்பிபர்த்டே "  எனப்   பாடி கைதட்டி  மகிழ்ந்து  நிற்போம் தமிழ்  மொழியில்  வாழ்த்திருக்க அதைத் தவிர்த்து விட்டுவிட்டு அன்னியத்தை பாடி நிற்றல் அருவருக்கும் செயல் அன்றோ   ! தொலைக் காட்சி  நிகழ்ச்சிகளில் தொகுத்து நிற்க வருபவர்கள் " ஸோவென்பார் "  " சொரி "   என்பார் சுவையதனை " சுவீற் "  என்பார் மூச்சுக்கு ஒரு  தடவை பேசி நிற்பார்  ஆங்கிலத்தை முன் வந்து  நிற்பதோ முக்கியமாய்  தமிழ் ... Full story

இருப்பது பேரின்பமன்றோ!

இருப்பது    பேரின்பமன்றோ!
எம்.ஜெயராமசர்மா ..... மெல்பேண் ... அவுஸ்திரேலியா பொட்டுவைத்த பூமுகத்தைத் தேடுகிறேன் புன்சிரிப்பை மறுபடியும் எண்ணுகிறேன் கட்டழகு உடலமைப்பை காணவில்லை கையெல்லாம் நடுங்குவதைக் காணுகின்றேன் சிரித்துநின்ற செவ்வாயைத் தேடுகிறேன் சிவப்புநிறம் கறுப்பாகி நிற்குதங்கே என்றாலும் அவளேயென் இணையேயாவாள் இருக்கும்வரை அவளைத்தான் சொர்க்கமென்பேன்! கருங்கூந்தல் அவளிடத்தில் காணவில்லை கண்கூட  ஒளிமங்கி  வெகுநாளாச்சு முத்துபோன்ற பல்வரிசை எங்கேபோச்சோ மூச்சுவிட  அவளிப்போ முனுகுகின்றாள் சுவையாக உணவளித்த அவளின்கைகள் சுவைப்பதற்கே முடியாமல் ஆகிப்போச்சு அவள்வாயில் ஊட்டிவிடும் ஆசைகொண்டேன் அதுவேயென் வாழ்வில் பேரின்பமாச்சு! ஓடியாடித்  திருந்தஅவள் ஓய்ந்தேவிட்டாள் உதவிக்கு வருவார்கள் யாருமில்லை தேடித்தேடி  நான்கண்ட  தேவியிப்போ செய்திகேட்கும் செவிப்புலனை இழந்தேவிட்டாள் வாடிவிட்ட  நிலையினிலும்  வடிவாயுள்ளாள் வயிறார உண்பதற்கு இயலாதுள்ளாள் என்றாலும் உணவதனை ஊட்டும்போது என்வாழ்வு இனிக்குதென்று எண்ணுகின்றேன்! பிள்ளைகளோ  எம்மைவிட்டுப்  பிரிந்தேவிட்டார் தொல்லைகளே  என்றுவெண்ணி  தூரவுள்ளார் நல்லபிள்ளை என்றேநாம் ... Full story

நெஞ்சுக்குள் நிறைத்தாளே !

   எம். ஜெயராமசர்மா ..... மெல்பேண் .... அவுஸ்திரேலியா    வெள்ளைநிறம் வாய்த்ததனால் விட்டெறிந்து பேசிவந்தாள் கொள்ளை யழகென்று கொட்டமிட்டு அவளிருந்தாள் நல்லநல்ல மாப்பிளைகள் பெண்பார்க்க வந்தார்கள் எல்லோரும் கறுப்பென்று இறுமாந்து மறுத்துவிட்டாள் ! அவளப்பா கறுப்புநிறம் அவளண்ணா அப்படியே அக்காவும் தங்கையும் அவள்போல நிறமில்லை அம்மாவின் நிறமாக அவள்நிறமும் ஆனதிலே அம்மாவின் மேல்பிரியம் அவளுக்கு இருந்ததுவே ! தான்சேரும் தோழியரும் தன்நிறத்தில் இருப்பதையே தன்னுடைய எண்ணமாய் தானவளும் கொண்டிருந்தாள் கறுப்புநிறம் கொண்டவர்கள் கூடவந்து ... Full story

போராட்டம்!

எம். ஜெயராமசர்மா, மெல்பேண், அவுஸ்திரேலியா நீதிக்கும் போராட்டம் நியாயத்துக்கும் போராட்டம் சாதிக்கும் போராட்டம் சமயத்துக்கும் போராட்டம் போதிக்கும் குருமார்க்கும் போராட்டம் போராட்டம் போராட்டம் இப்போது போராடி நிற்கிறதே! கோவில்சிலை போகுதென்று போராட்டம் ஒருபக்கம் கோவிலையே தகர்ப்போமென்று போராட்டம் மறுபக்கம் சாமியில்லை சாமியில்லை என்றுசொல்லிப் போராட்டம் சன்மார்க்கம் காத்திடுவார் தம்பாட்டில் போராட்டம்! மருத்துவர்கள் வசதிக்காய் வகைவகையாய் போராட்டம் மருந்திலே கலப்படத்தை தடுத்துவிடப் போராட்டம் நோயாளி சுகம்பெற்று வருவதற்கும் போராட்டம் போராட்டம் மருத்துவத்தைப் பொறிவைத்தே நிற்கிறது! கற்றறிந்தார் காசுக்காய் போராட்டம் நடத்துகிறார் கல்விகற்கும் மாணவரும் போராட்டம் நடத்துகிறார் அற்பத்தனம் கொண்டுநிற்கும் அனைத்துக் கல்விமுதலைகளும் ஆதாயம் தேடுதற்கும் போராட்டம் நடத்துகிறார்! ஊழலென்னும் பேயதனை ஒழித்துவிடப் போராட்டம் உணர்வதனை இழக்கவைக்கும் ... Full story

ஆக்கிடுவோம் வாருங்கள் !

ஆக்கிடுவோம் வாருங்கள் !
  எம் . ஜெயராமசர்மா ... மெல்பேண் ... அவுஸ்திரேலியா  நீரின்றி வாடுகின்றார் நீண்டநேரம் நிற்கின்றார் பார்மீது உழைப்பவர்கள் பஞ்சமதில் உழலுகிறார் அவரைவைத்து சொத்துச்சேர்ப்பார் அடுக்குமனை கட்டுகிறார் அடுத்தவேளை உணவுக்கு அலைந்திடுவார் உழைப்பவர்கள் ! நிலமீது காணுகின்ற நிட்டூரம் ... Full story
Page 1 of 512345
Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.