Posts Tagged ‘எம். ஜெயராம சர்மா’

Page 1 of 1612345...10...Last »

உயர்ந்து நின்றார் காமராசர் !

( எம். ஜெயராமசர்மா...... மெல்பேண் .... அவுஸ்திரேலியா ) இலக்கியங்கள்  இலக் கணங்கள் எதும் அவர் படிக்கவில்லை இங்கீலீசு பள்ளிக் கூடம் எட்டி அவர் பார்த்ததில்லை தலைக் கனத்தை வாழ்நாளில் தன தாக்கிக் கொண்டதில்லை தமிழ் நாட்டின் தலைமகனாய் தாம்  உயர்ந்தார்  காமராசர்  ! ஏழையென பிறந்த  அவர் கோழை என வாழவில்லை தோழமையை மனம் இருத்தி தோள்  கொடுத்தார் மக்களுக்கு ஆழ நிறை அன்புடனே அவர் நோக்கு அமைந்ததனால் அரசு கட்டில் அமர்ந்தாலும் அனைவருக்கும் உதவி நின்றார்  ! மாடிமனை  வீடு  எலாம் வாங்கி அவர் குவித்ததில்லை மற்றவர்கள் மனம்  வருந்த சொத்தும் அவர் சேர்த்ததில்லை கோடிகளில் செல்வம் அதை கொள்ளை அவர் கொண்டதில்லை கொள்கையுடன் வாழ்ந்து நின்று குன்றமென  உயர்ந்து  நின்றார்   ... Full story

ஆண்டவர்க்கே புரியவில்லை

( எம் . ஜெயராமசர்மா ..... மெல்பேண் .... அவுஸ்திரேலியா ) நிலவினிலே காலை வைத்தான் நீள்கடலை சுற்றி வந்தான் வளம் கொழிக்க வைப்பதற்கு வகுத்து நின்றான் பலவழியை அளவில்லா ஆசை கொண்டு ஆற்றி நின்றான் ஆராய்ச்சி ஆனாலும் அவன் மனமோ அமைதி நிலை அடையவில்லை ! ஆண்டவனைப் பழித்து நின்றான் அவதூறாய்ப் பேசி நின்றான் அறம்பற்றி நியாயம் பற்றி அதிகமாய் கிண்டல் செய்தான் இறப்போடு பிறப்பு எல்லாம் ஏன் இங்கே வருகுதென இன்றுவரை குழப்பி நின்று இவன் தெரியா உலைகின்றான் ! வாதம் பல செய்கின்றான் வழக்கு பல காணுகிறான் ஆதாயம் தேடித் தேடி அறம் தொலைத்து நிற்கின்றான் அன்னை தந்தை பாசம்கூட அவன் மனதில் காணவில்லை அவன் மனமோ என்னாளும் அல்லலில் ... Full story

உதவிநிற்கும் என உணர்வோம் !

(எம் . ஜெயராமசர்மா ..... மெல்பேண் .... அவுஸ்திரேலியா) இந்துமதம்  பெளத்தமதம்  இஸ்லாமொடு  கிறீஸ்தவமும் வந்திங்கு  பலவற்றை வழங்கியே இருக்கிறது சொந்தமெனக் கொண்டும் பலர்சுகம் காணாநிலையினிலே வெந்துவெந்து உழலுகிறார் வேதனையால் வாழ்வினிலே எந்தமதம் பெரியமதம் எந்தமதம் சிறந்தமதம் என்றெண்ணிப் பலபோர்கள் எங்குமே நடக்கிறது  வந்தமைந்த மதமுரைத்த மனுநீதி யாவுமிங்கே மதம்பிடித்தோர் கைகாலே  மடிந்துகொண்டே போகிறது ! களவெடுக்கப் பொய்யுரைக்க எம்மதமும் சொன்னதில்லை கற்பழிக்கக் கொலைசெய்ய எம்மதமும் விரும்பவில்லை போட்டிபோட்டுப் பொருள்பறிக்க எம்மதமும் காட்டவில்லை பொறாமைகொண்டு பொசுக்குவென்று எம்மதம் இயம்பவில்லை வீட்டுநலன் நாட்டுநலன் விலத்திநிற்க வேண்டுமென்று நாட்டிலுள்ள மதமேதும் சொன்னதுண்டா எண்ணிடுவீர் காட்டுத்தனம் மிகுந்துநிற்கும் கயமைக்குணம் உடையோரால் கண்ணியமாம் மதமனைத்தும் காணாமல் போகிறதே ... Full story

மரணவாசல் போகின்றார் !

எம். ஜெயராமசர்மா .... மெல்பேண் .... அவுஸ்திரேலியா பணத்தினால் போதை வரும் பதவியினால் போதை வரும் பட்டம் பல பெற்றாலும் போதை தலைக் கேறிவிடும் இதனாலே வரும் போதை எல்லோர்க்கும் இடைஞ்சல் தரா போதை ஊட்டும் பொருளன்றோ பொல்லாத விளைவைத் தரும் ! போதையூட்டும் பல பொருட்கள்    புதுப் புதிதாய் வருகிறது காதலுடன் பலர் வாங்கிக்    காணுகிறார் இன்ப நிலை இன்பமென எண்ணி எண்ணி    ஏற்றுநிற்கும் பல பொருட்கள் துன்பமாய் அமையும் என்று    துளிகூட அவர் நினையார் ! போதை தரும் பலவற்றை ... Full story

அழவிட்டுப் போனதேனோ !

அழவிட்டுப் போனதேனோ !
எம் . ஜெயராமசர்மா .... மெல்பேண் ... அவுஸ்திரேலியா பாடியகுயில்   பறந்தோடிவிட்டது பாட்டுக்கேட்ட  யாவருமே பரிதவித்தே நிற்கின்றார் பலமொழிகள் குயில்காணாப் பார்த்தேங்கி அழுகிறது பாரதத்தாய் இசைமகளைப் பறிகொடுத்து ஏங்குகிறாள்  ! இசைஞானி வசமாகி இசைத்தபாடல் எத்தனையே எம்ரகுமான் இசைக்கோப்பில் இனித்தபாடல் இதயமெலாம் இசைமகளை இனங்கண்ட இசையாளர் பலருமிப்போ இசைமகளின் முகங்காணா ஏக்கமுற்று இரங்குகின்றார் ! சிங்கார  வேலனைத் தந்துவிட்ட இசைக்குயிலைச் சிந்தித்து சிந்தித்து இசையுலகு அழுகிறது திரையுலகை இக்குரலே திகைப்பூட்ட வைத்ததனால் திரையுலகு  இப்போது தேம்பிநின்று அழுகிறது ! பத்தாயிரம்   பாடல்கள் பன்மொழியில் பாடியதால் பலருமே   இசைக்குயிலை பார்த்துமே வியந்தார்கள் பரிசுபல  குவிந்தன பாராட்டும் பெருகியது பாடிநின்ற   பூங்குயிலோ பாரைவிட்டுப் பறந்ததுவே ! யாருமே மறக்கார்கள் ஜானகி அம்மாவைக் கானக்   குயிலாக கலக்கினார் இசையுலகை அவர்குரலில் இனியுலகில் ஆரிசைக்க வருவார்கள் அக்குரலை கேட்காமால் அழவிட்டுப் ... Full story

எனக்கு அவர் வரமாகும் !

(எம்.ஜெயராமசர்மா ..மெல்பேண்..அவுஸ்திரேலியா ) பெற்றெடுத்தாள் அன்னை பேணிநின்றார் தந்தை கற்பதற்கு கைபிடித்து கல்வியிலே ஏணியானார் முற்றுமே துறந்தவராய் முனிவராய் அவரிருப்பார் சற்றுநான் சறுக்கிவிட்டால் தான்தாங்க வந்துநிற்பார் ! எப்பவுமே எனைப்பற்றி எண்ணியே இருந்திடுவார் தப்பிதங்கள் செய்யாமல் தடுப்பதிலே முன்னிற்பார் அற்பத் தனங்களை அறவே வெறுத்திடுவார் அறவழியில் நான்வளர அவரேயென் குருவானார் ! அப்பாவின் வார்த்தைகள் அத்தனையும் மந்திரமே அவர்செய்யும் அத்தனையும் அரணாக அமைகிறதே எப்பவுமே இப்பிறப்பில் என்தந்தை இறையெனவே எண்ணியே தொழுகின்றேன் எனக்குஅவர் வரமாகும் ! Full story

எல்லாப் புகழும் இறைவனுக்கே !

எல்லாப் புகழும் இறைவனுக்கே !
எம். ஜெயராமசர்மா .... மெல்பேண் .... அவுஸ்திரேலியா எல்லாப் புகழும் இறைவனுக்கே இயன்றவரை உதவிடுவோம் யாவர்க்குமே நல்லவற்றை நினைத்திடுவோம் நாளெல்லாம் அல்லவற்றை அகற்றிடுவோம் அனைவருமே சொல்லுவதை சுவையாகச் சொல்லிடுவோம் சோர்வின்றி நாளெல்லாம் உழைத்திடுவோம் கொல்லுகின்ற கொலைவெறியை மறந்திடுவோம் குணமதனைச் சொத்தாக்கி உயர்ந்திடுவோம் ! எல்லையில்லா ஆனந்தம் ஈந்தளிக்கும் எல்லையில்லா இறையினைநாம் ஏற்றுநிற்போம் வல்லமையின் வடிவான ... Full story

நாம்படிப்போம் வள்ளுவத்தை !

  எம். ஜெயராமசர்மா .... மெல்பேண் .... அவுஸ்திரேலியா படைக்கின்ற இலக்கியங்கள் பயனளிக்கும் பாங்கினிலே கிடைக்கின்ற போதுதான் படைப்பினுக்கு உயர்வாகும் படைக்கின்றார் மனப்பாங்கும் படைப்பூடே வந்துநிற்கும் படைப்பவர்கள் சமூகத்தை மனத்திருத்தல் அவசியமே ! நெறிபிறளும் வகையினிலே படைக்கின்ற இலக்கியங்கள் நீண்டகாலம் கொண்டதாய் நின்றுவிடல் அரிதாகும் குறிக்கோளை மனமிருத்தி வருகின்ற இலக்கியங்கள் குவலயத்தால் என்னாளும் கொண்டாடி போற்றப்படும் ! தனிப்பட்ட கருத்துக்களை தானுரமாய் கொண்டபடி தரமற்ற படைப்புகளும் தரணிக்கு வருகிறது ... Full story

அவலக்குரல் கேட்கலையா !

    ( எம் . ஜெயராமசர்மா .... மெல்பேண் .... அவுஸ்திரேலியா ) பொருள்தேடும் நோக்கத்தில் புதைகுழிகள் தோண்டுகிறார் வருவாயை மனமிருத்தி மாயம்பல செய்கின்றார் இரைதேடும் விலங்குகள்போல் இரக்கமதை அழிக்கின்றார் அளவின்றி ஆசைப்பட்டு அனைத்தையுமே அள்ளுகிறார் ! ஆட்சியிலே அமர்ந்திருப்பார் அறந்தொலைத்து நிற்கின்றார் அதிகாரம் இருப்பதனால் அலட்சியமாய் நடக்கின்றார் காவல்செய்யும் துறையினரும் கடமையினை மறக்கின்றார் காலந்தோறும் மக்களெலாம் கவலையிலே உழலுகின்றார் ! பொதுநோக்கம் எனும்நோக்கை பொசுக்கியே விடுகின்றார் பூமியின் ... Full story

      பாரைவிட்டுப் போனதேனோ  !

        (  எம் . ஜெயராமசர்மா ..... மெல்பேண் .... அவுஸ்திரேலியா  )     குங்குமம் பொட்டும் குறுகுறுத்த பார்வையும் எங்குமே பரந்துநிற்கும் எழிலார்ந்த கற்பனையும் பொங்கிவரும் தமிழுணர்வும் பொறுப்பான எழுத்துக்களும் எங்களுக்கு அளித்துவிட்டு எங்குசென்றீர் சித்தரையா   !   எழுதிக் குவித்தகை எப்படித்தான் ஓய்ந்ததுவோ அளவின்றி  பலவற்றை ஆர்வமுடன் தந்தீர்கள் வழுவின்றி வையகத்தில் வாழும்வகை எழுத்தாக்கி வழங்கிவிட்டு ஏனையா மனமேங்க வைத்துவிட்டீர்        !   வெள்ளுடையில் மேடையேறி வெளியாகும் கருத்துக்களை அள்ளிநாம் பருகிவிட ஆசையுடன் இருக்கின்றோம் வெண்தாடி வெள்ளுடையில் வேறுயார் இங்குள்ளார் வித்தகரே சித்தரையா விரைவாகச் சென்றதேனோ     !   பரிசுபல பெற்றாலும் பல்லக்கில் ஏறாமல் பக்குவத்தைக் கடைப்பிடித்து பலபேரும் மதிக்கநின்றாய் படைக்கின்ற அத்தனையும் பயனாகும் பாங்கினிலே படைத்தளித்து விட்டுத்தான் பாரைவிட்டு அகன்றனையோ    !   உன்நாவல் அத்தனையும் ... Full story

வாழ்த்து !

வாழ்த்து !
Full story

அழுகுரலைத் தடுத்திடுவோம் !

எம் . ஜெயராமசர்மா ..... மெல்பேண் .... அவுஸ்திரேலியா           இல்லறத்தின் நல்லறமே இனிமையுடன் வாழுவதே              இல்லறத்தில் பிள்ளைச்செல்வம்  எல்லோர்க்கும் பெருவரமே        இல்லறத்தில் இணைவார்க்கு பிள்ளையில்லை எனும்பொழுது               இல்லறமே இணைவார்க்கு இன்பமதை அளிக்காதே !          மணமான மறுவருடம் மழலையினைக் காண்பதுதான்            மகிழ்ச்சியது உச்சமாய் வையகத்தில் இருக்கிறது        மழலையது முகம்பார்த்து மனமெல்லாம் நிறைவுபெறும்              வாழ்வுதனை யாவருமே வாஞ்சையுடன் விரும்புகிறார் !        இனிமையுடை வாத்தியங்கள் இசைகொடுத்து நின்றாலும்... Full story

அன்னையர் தின வாழ்த்து!

அன்னையர் தின வாழ்த்து!
ஶ்ரீ ஶ்ரீமதி ஜெயராமசர்மா தம்பதியர்   அனைவருமே பணிந்து நிற்போம் ! ( எம் . ஜெயராமசர்மா ..... மெல்பேண் .... அவுஸ்திரேலியா ) கண்கண்ட தெய்வமாய் காருண்யக் கடவுளாய் மண்மீது வந்திருக்கும் மாதாநம் வரமாகும் எண்ணிநாம் பார்த்துவிடா இன்னல்களை அனுபவித்தும் எமைப்பற்றி நினைத்திருப்பாள் என்னாளும் அன்னையவள் ... Full story

அனைவருமே வாருங்கள்!

-எம் . ஜெயராமசர்மா - மெல்பேண், அவுஸ்திரேலியா  இலக்கியங்கள் பலகற்றும் இங்கிதங்கள் வளரவில்லை தலைக்கனத்தை விட்டுவிட நிலத்திலுள்ளார் விரும்பவில்லை கொடுத்துதவும் மனப்பாங்கைத் தொலைத்துவிட்டு நிற்பதையே நிலத்திலுள்ள பலரிடத்து நிலைத்துநிற்கக் காணுகிறோம்! அறம்செய்ய விரும்பென்று அவ்வைகூறிச் சென்றதனை ஆருமே மனமதனில் அமர்த்தியதாய்த் தெரியவில்லை அதிகசெல்வம் சேர்ப்பதிலே ஆசைகொண்டே அலைகின்றார் அல்லலுடன் இருப்பார்க்கு அவருதவின் அறம்மகிழும்! பொருள்தேவை என்பதனால் அருளதனை ஒதுக்குவதா? மருளோடு வாழுவதால் வாழ்வுவளம் ஆகிடுமா? அருளான வழிசென்று பொருளதனைப் பயனாக்கின் மருளகன்று வாழ்வினிலே அருள்வெள்ளம் பெருகிடுமே! பலகற்று உயர்நிலையில் இருக்கின்ற பலபேர்கள் பல்லக்கில் பவனிவரும் பதவியுடை பலபேர்கள் பணந்தேடி பணந்தேடி பதராக மாறுகிறார் பாங்காக அவர்வாழின் பண்பு தடுமாறிடுமா! பூமித்தாய் பலவற்றைப் பொறுமையுடன் தாங்குகிறாள் சாமியெனச் சூரியனும் பூமிக்கு உதவுகிறான் வான்மழையும் மண்ணினுக்கு வளங்கொடுத்தே நிற்கிறது மனம்மாறா மனிதரெலாம் மாறிவிட்டால் ... Full story

அலமந்து அழுகின்றார்!

-எம். ஜெயராமசர்மா - மெல்பேண், அவுஸ்திரேலியா வீசுகின்ற காற்றுக்கு விலைபேச முனைகின்றார் வெளிச்சந்தரும் வெயிலதனை விற்றுவிட எண்ணுகிறார் வான்பொழியும் மழையதனை மறைத்துவிட முயலுகிறார் மனிதர்செயும் இச்செயலால் மாநிலமே அழுகிறதே! ஆர்ப்பரிக்கும் கடலைக்கும் அவருரிமை கேட்கின்றார் அளவற்ற நீர்கொண்ட கடலினையும் பிடுங்குகிறார் ஆண்டவனின் கொடையான ஆறுகளைத் தடுக்கின்றார் அளவற்ற ஆணவத்துள் அமிழ்ந்துவிட்டார் அனைவருமே! ஓடிவரும் ஆறுகளை ஒடுக்கிவிட முயலுகிறார் தேடித்தேடி அணையெடுத்து திருப்புகிறார் தமக்கெனவே நாடுவளம் தனையெண்ணி ஓடிவரும் ஆறுகளைக் கேடுகெட்ட எண்ணமுடன் கெடுக்கின்றார் பலருமிங்கே! ஆறுகளை ஆண்டவனாய் எண்ணிப் பூஜைசெய்கின்றார் ஆறுகளைத் தொழுவதற்கு அநேகம்பேர் செல்லுகிறார் புனிதமாய் நினைத்துநிற்கும் புவியிலுள்ள ஆறுகளைத் தனியுடமை ஆக்குதற்குத் தான்பலபேர் முயலுகிறார்! ஆறுகளை அரசியலாய் ஆக்கிவிட்ட காரணத்தால் அறம்வளர்ந்த நாட்டினிலே மறமோங்கி நிற்கிறது ஆண்டாண்டாய் பூஜைசெய்து ஆறுகளைப் போற்றிநின்றார் ஆணவத்தின் எழுச்சிகண்டு அலமந்து அழுகின்றார்!     Full story
Page 1 of 1612345...10...Last »
Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.