Posts Tagged ‘எம்.ரிஷான் ஷெரீப்’

Page 1 of 512345

யாழ்ப்பாண நூலகத்துக்குத் தீ வைத்தவர் ஒருவரின் வாக்குமூலம்

யாழ்ப்பாண நூலகத்துக்குத் தீ வைத்தவர் ஒருவரின் வாக்குமூலம்
  - வைத்தியர் ருவண் எம்.ஜயதுங்க தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப் யாழ்ப்பாண நூலகத்துக்குத் தீ வைத்த நபரொருவர் எனக்களித்த வாக்குமூலத்தை பல வருடங்களுக்குப் பிறகு நான் எழுதுகிறேன். இந்த நிகழ்வு குறித்து நான் தனிப்பட்ட பதிவேதும் எழுதவில்லை. எனினும் 2002 ஆம் ஆண்டு என்னால் எழுதப்பட்ட எனது 'பிரபாகரன் நிரூபணம் குறித்த மனோவியல் ஆய்வு' எனும் தொகுப்பில் நான் குறிப்பிட்டிருக்கிறேன். இந்த நபரை, 1994 ஆம் ஆண்டு நான் ... Full story

கலவர பூமியில் இலங்கைத் தமிழ் இலக்கியமானது கண்ணீராலும், இரத்தத்தாலுமே நிறைந்திருக்கிறது !

கலவர பூமியில் இலங்கைத் தமிழ் இலக்கியமானது கண்ணீராலும், இரத்தத்தாலுமே நிறைந்திருக்கிறது !
நேர்காணலின் தமிழ் மொழிபெயர்ப்பு - எம்.ரிஷான் ஷெரீப் (இந்த நேர்காணலானது, இலங்கையிலிருந்து வெளிவந்து கொண்டிருக்கும் ஞாயிறு லக்பிம வாரப் பத்திரிகையில் (20.05.2018) வெளிவந்தது. நேர்காணல் செய்திருப்பவர் லக்பிம பத்திரிகை ஆசிரியர் குழுவைச் சேர்ந்தவரும், எழுத்தாளருமான திருமதி.கத்யானா அமரசிங்ஹ.) கேள்வி : நீங்கள் தமிழ்மொழியில் ஆக்கங்களை எழுதி வரும் படைப்பாளியாக இருப்பதோடு, சிங்கள இலக்கிய நூல்கள் பலவற்றை தமிழ் மொழிக்கு மொழிபெயர்த்த மொழிபெயர்ப்பாளராகவும் இருக்கிறீர்கள். மொழிபெயர்ப்பின் மீதான ஈடுபாடு எவ்வாறு தோன்றியது?... Full story

அரூபமானவை பூனையின் கண்கள்

      எப்போதும் ஈரலிப்பாகவே மின்னும் ஒளிப்பச்சை விழிகளினூடு வழியும் அப்பாவித்தனமும் திருட்டுக் குணமும் ஒருசேர ஆதி கால வனத்தை நினைவுபடுத்தும் மேனி வரிகளோடு அச்சுறுத்தும் சிலவேளை அதன் அசட்டுச் சிப்பிக் கண்கள்   இரைக்காகக் காத்திருக்கும்வேளையில் அக் கண்களினூடு ததும்பும் சலனமற்ற ஒற்றைச் சாதுவின் தியானம்   வேட்டை விலங்கின் உடல் மொழியைப் பேசும் பின்னங்கால்களில் அமர்ந்து மீதிப் பாதங்களை ஊன்றி நிமிர்ந்து பார்க்கையில் ஏதேனும் ... Full story

மொழிபெயர்ப்புக் கட்டுரை – கால யந்திரத்தினூடாக நல்லூர் ராஜதானிக்கு !

மொழிபெயர்ப்புக் கட்டுரை - கால யந்திரத்தினூடாக நல்லூர் ராஜதானிக்கு !
கால யந்திரத்தினூடாக நல்லூர் ராஜதானிக்கு !   'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' ஆய்வு நூல் பற்றிய ஒரு குறிப்பு   - கத்யானா அமரசிங்ஹ தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப் பருத்தித்துறையிலிருந்து யாழ்ப்பாண நகரத்துக்குச் சென்ற பயணத்தின் போது நாங்கள் கண்ட அந்தப் பழைய அரண்மையானது, 'மந்திரி மனை' என அழைக்கப்படுகிறது. தென்னிந்திய வீடுகளின் கட்டடக்கலையும், ஐரோப்பிய ... Full story

ஆகாயக் கடல்

    எத் திசையிலும் எப்போதும் சுழன்றடிக்கலாம் காற்று அதன் பிடியில் தன் வேட்கைகளையிழந்த ஓருருவற்ற வானம் மேகங்களையசைத்து அசைத்து மாறிக் கொண்டேயிருக்கிறது விதவிதமாக வர்ணங்களைக் காட்சிப்படுத்தும் தொடுவானத்தினெதிரே ஒற்றை நிறம் நிரப்பிப் பரந்து கிடக்கிறது கடல் ஆகாயத்தைப் போலவன்றி சமுத்திரத்தின் இருப்பு ஒருபோதும் மாறுவதில்லை எவ்வித மாற்றமுமற்ற கடலின் அலைப் பயணம் கரை நோக்கி மாத்திரமே பருவ காலங்களில் வானின் நீர்ச் ... Full story

மொழிபெயர்ப்புக் கவிதை – சிங்களக் கவிதை

 துஷாரி ப்ரியங்கிகா தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்   செய்தி – கெக்கிராவ கல்வி வலயத்துக்குட்பட்ட அரச பாடசாலையொன்றில்,  பட்டினியின் காரணமாக வாந்தியெடுத்த 14 வயது மாணவியை, கர்ப்பிணியென பழி சுமத்தி அப் பாடசாலையிலிருந்து நீக்கி விட்டார் பெண் அதிபர். கல்வியில் சிறந்த மாணவியாகத் திகழ்ந்த அந்த ஏழைச் சிறுமி தூய்மையானவள் என்பது மருத்துவ பரிசோதனைகளின் மூலம் பின்னர் தெரிய வந்தது. உன்னிடம்தான் தரித்திருக்கிறது மகளே எம் சுவாசக் காற்று   இரவு பகலாகக் கூலி வேலை தினம் ஒரு வேளை  மட்டுமே உணவு மகளுக்குக் கல்வியளிக்கப் பாடுபட்டு வாடி வீழ்ந்தோம் நாம் கைகால் வலுவிழக்க   கல்வி மாத்திரமே ... Full story

மாசுற்ற தாமரைக் குளத்தின் வாசனை

மாசுற்ற தாமரைக் குளத்தின் வாசனை
ஒரு பெண்ணின் அழகை வைத்துத்தான் காலம் காலமாக உலகெங்கும் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஒரு பெண்ணினது அக உணர்வுகளை விடவும் அழகுதான் அவளது இருப்பையும், நடைமுறை வாழ்க்கையையும், வாழ்வு மீதான புறத் தாக்கங்களையும் தீர்மானிக்கின்றன. அவளது புறச்சூழலில் அவளைத் தாண்டிய எல்லைகளுக்குள் அடங்கும் சமூகத்தின் கோட்பாடுகள் மிகவும் வலிய கரங்களைக் கொண்டு அவள் மீதான வன்முறைகளைக் கட்டவிழ்த்து விடுகின்றன. அழகுடன் கூடிய பெண்ணினது மன உணர்வுகள், அவளது எண்ண வெளிப்பாடுகள், சமூகம் அவளுக்கிட்டிருக்கும் வேலிகள் எனப் பல்வேறான காரணிகள் அவளது வாழ்வைத் தீர்மானிக்கும் கூறுகளாக அமைகின்றன.... Full story

தளிர்களுக்கான திரை

- எம். ரிஷான் ஷெரீப் நமக்கு எழுத்தறிவித்தவரை எத்தனை பேர் தினந்தோறும் நினைத்துப் பார்க்கிறோம்? நாம் எழுத, வாசிக்கப் படிக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் எம்மைச் சார்ந்தவர்கள் எமக்கு எழுத்தறிவித்ததாலேயே இதனை வாசித்துக் கொண்டிருக்கிறோம் இல்லையா?  நம் அயலில், நம் ஊரில், நமது தேசத்தில், உலகில் எத்தனை பேருக்கு இந்த வாய்ப்பு கிட்டியிருக்கிறது? எத்தனையோ நபர்களினது ஜீவிதங்களில் கல்விக்கான ஆர்வம் பல சந்தர்ப்பங்களில் நிகழ்ந்திருக்கும் எனினும் அதற்கான வாய்ப்புக் கிட்டாமல் வாழ்க்கையோடு போராட வேண்டிய நிர்ப்பந்தங்கள் மேலோங்கியிருப்பதையும், அவையே அவர்களது நடத்தைகளில் ... Full story

மழைப் பயணி

எம்.ரிஷான் ஷெரீப்   ஆங்காங்கே தேங்கியிருக்கும் சகதிகளோடு மழை நனைத்த ஒற்றையடிப் பாதை ஈரமாகவே இருக்கிறது இன்னும்   ஊதா நிறப் பூக்களைக் கொண்ட தெருவோர மரங்கள் கிளைகளிலிருந்து காற்று உதிர்க்கும் துளிகளினூடு நீரில் தலைகீழாக மிதக்கின்றன   இருண்ட மேக இடைவெளிகளிலிருந்து வந்து தரையிலிறங்கியதும் சந்திக்க நேரும் மனிதர்களுக்கேற்ப மழையின் பெயர் மாறிவிடுகிறது ஆலங்கட்டி, தண்ணீர், ஈரம், சேறு, சகதியென   மழைக்குப் பயந்தவர்கள் அடைத்து மூடிய ரயில் யன்னல் வழியே... Full story

கோடைக்கு இரை ஈரம்

எம்.ரிஷான் ஷெரீப்     யானை எலும்புகளில் அமரும் மீன்கொத்திகளும் புறக்கணித்துவிட்ட இலையுதிர்த்த விருட்சங்களில் பௌர்ணமி நிலவு கோடையை வாசித்தபடி வானில் நகரும்   வனத்தில் புள்ளி மான்கள் நீரருந்திய குட்டைகள் வரண்டு விட்டன   அகோரச் சூரியன் தினமும் தனதாயிரம் உஷ்ணக் கரங்களால் தடவும் பசிய புற்கள் படர்ந்திருந்த நிலம் தன் மென்பரப்பையிழந்து வெடிக்கத் தொடங்கி விட்டது   சாம்பல் குருவிகள் ஏழு இரை தேடும் தம் ஒற்றைத் திட்டத்தோடு... Full story

வெள்ள நிவாரண முகாம்

மொழிபெயர்ப்புச் சிறுகதை (சிங்கள மொழிச் சிறுகதை) வெள்ள நிவாரண முகாம் - அஜித் பெரகும் திஸாநாயக தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்          நயனா வீட்டுக்குள் நுழையும்போது அது சகதிக் குவியலாகக் கிடந்தது. அவள் எப்போதும் பெருக்கித் துடைத்து தூய்மையாக வைத்திருந்த பளிங்குத் தரையானது, கோப்பி நிற அழுக்குச் சேறு படிந்து சேற்று வயல்வெளி போல ஆகியிருந்தது. வரவேற்பறையில் வைக்கப்பட்டிருந்த சோபா கதிரையின் ... Full story

தென்னைகளில் கள்ளெடுப்பவள்

 எம்.ரிஷான் ஷெரீப்     பக்கவாதப் புருஷனுக்கென முதலில் வீட்டுத் தென்னையில் கள்ளெடுத்தவளின் தோப்பு மரங்கள் அத் தடவை காய்த்துக் குலுங்கியது கண்டு தொடக்கத்தில் ஊர் முழுவதும் வியப்பாகக் கிசுகிசுத்துக் கொண்டார்கள் பெண்ணேறும் தென்னைகள் அதிகமாகக் காய்க்கிறதென விடியலிலும், இரவிலுமென எக் காலத்திலும் மரமேறுபவள் எல்லாத் தென்னைகளினதும் உச்சிகளைத் தொடுத்து நீண்ட கயிற்றினால் முடிச்சிட்டுக் கட்டினாள் ஓரோர் மரத்துக்கும் கயிற்றின் வழியே நடந்து சென்று மண்பானைகளைப் பொருத்தியும், எடுத்தும் ... Full story

அகாலத்தில் மரித்தவனின் கைபேசி எண்கள்

எம். ரிஷான் ஷெரீப்   மரணித்தவர்களுக்கு வரும் கைபேசி அழைப்புக்கள் அலைவரிசைகளில் அதிர்ந்து பெருகி பேரலையாகித் துரத்த கரை மணலென எங்கும் பரந்து விடுகின்றன அவர்களது தொலைபேசி எண்கள் கடற்கரைச் சிப்பிகள் பொறுக்கும் சிறுமி மீன் வலைக்காரன் மணற் சிற்பக் கலைஞன் உப்பு நீரில் கால் நனைப்பவர்களென ஓரோரும் தாமறியாது எண்களைப் பொறுக்கி கடலில் எறிந்து விடுகிறார்கள்   அன்றிலிருந்து இருளில் தொலைந்துவிடும் ஆத்மாக்களின் சுவடுகள்... Full story

சர்வதேச மகளிர் தினக் கவிதை

சர்வதேச மகளிர் தினக் கவிதை
எம்.ரிஷான் ஷெரீப் நிர்பயா, சேயா, வித்யா, ஜிஷா, ஸ்வாதி, நந்தினி, ஹாஷினி, ரித்திகா மற்றும் பாலியல் வன்முறையில் படுகொலை செய்யப்பட்ட அனைத்து குழந்தைகள், சிறுமிகள், பெண்களுக்காக… நீர்ப் பூக்குழி தொலைவிலெங்கோ புகையிரதம் நகர்ந்தபடி ஊளையிடும் ஓசை ஒரு பட்சியெனச் சிறகடித்துப் ... Full story

கட்டன்ஹாவும் மனைவியும்

(அங்கோலா நாட்டுச் சிறுகதை எழுதியவர் - ராஉல் டேவிட்) ராஉல் டேவிட் (Raúl David) பற்றிய சிறுகுறிப்பு: ராஉல் மாத்யூ டேவிட் எனும் முழுப் பெயர் கொண்ட எழுத்தாளர் ராஉல் டேவிட் 1918 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23 ஆம் திகதி அங்கோலா நாட்டிலுள்ள பெங்குஎலா மாகாணத்தில் காண்டா எனும் பிரதேசத்தில் பிறந்தார். தனது கிராமத்தில் ஆரம்பக் கல்வியைக் கற்ற அவர் மேற்படிப்புக்காக கலாங்கு எனும் நகரத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார். உயர்கல்வியைப் பூர்த்தி செய்ததும் அரச சேவையில் இணைந்து பல தரங்களிலும் பணியாற்றியுள்ளார். பணி ... Full story
Page 1 of 512345
Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.