Posts Tagged ‘கணியன்பாலன்’

அடிமையின் தாகம் அந்நிய மொழி மோகம்

கணியன்பாலன்         அடிமையின் தாகம் அந்நிய மொழி மோகம் பாரதியும் தமிழும்:      “வானம் அளந்தது அனைத்தும் அளந்திடும் வண்மொழி ” என்றும்      “வானம் அறிந்தது அனைத்தும் அறிந்த வளர்மொழி” என்றும்             தமிழ் மொழி குறித்து நமது எட்டயபுரத்து முண்டாசுக் கவிஞன் பெருமிதத்தோடு பாடுகிறான். அவன் தமிழின் மகாகவிகளில் ஒருவன். பல மொழிகளைக் கற்றவன். நமது தமிழகத்தின் தேசியக் கல்வி குறித்து மிக நீண்டகால நோக்கோடு அந்த மகாகவி பாரதி சொல்லிய சொற்கள் காலத்துக்கும் அழியாதவை. ஒவ்வொருவரும் அறிந்து ... Full story

பழந்தமிழக வரலாறு – 16

பழந்தமிழக வரலாறு - 16
    இ.பாண்டிய வேந்தர்கள் முதல் கரிகாலனின் ஆசிரியராக இருந்த, கரிகாலனைவிட இருதலைமுறைகள் மூத்த இரும்பிடர்த்தலையார், கருங்கை ஒள்வாள் பெரும்பெயெர்வழுதி என்கிற பாண்டிய வேந்தன் குறித்துப்பாடியுள்ளார். இவன் சேரன் உதியன், சோழன் பெரும்பூட்சென்னி ஆகியவர்களின் காலத்தவன். இவனது ஆட்சிக்காலம் சுமார் கி.மு. 350-கி.மு.320 வரையாகும். இவனுக்குப்பின் வந்தவன் இரண்டாம் காலகட்ட முதுகுடுமிப் பெருவழுதி. இவன் குறித்து மூன்று சங்கப்புலவர்கள் ஐந்து பாடல்களைப் பாடியுள்ளனர். அதுபோக ஏழாம் காலகட்டத் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனைப் பாடவந்த மாங்குடிமருதனார் ... Full story

பழந்தமிழக மூவேந்தர்களின் காலவரையறை – 14

பழந்தமிழக மூவேந்தர்களின் காலவரையறை - 14
கணியன்பாலன்   அ.சேர வேந்தர்கள்: மாமூலனார் பாடல்கள்தான் நமது கால நிர்ணயிப்புக்கான முதல் அடிப்படை ஆதாரங்களை வழங்குகின்றன. பண்டைய ஆதார சங்க இலக்கிய நூல்களில் மாமூலனாருக்கு முன் ஒரு தலைமுறையும், அவரது தலைமுறைக்குப்பின் 8 தலை முறைகளையும் நம்மால் இனங்காண முடிந்தது. முதல் காலகட்ட முதன்மைப் புலவராக குடவாயிற்கீரத்தனாரும் பத்தாம் காலகட்ட முதன்மைப்புலவராக கோவூர்கிழாரும் இருக்கின்றனர். மாமூலனார் இரண்டாம் காலகட்ட முதன்மைப் புலவராகிறார். நமக்குக் கிடைத்துள்ள ... Full story

பழந்தமிழக வரலாறு – 13

பழந்தமிழக வரலாறு - 13
பதிற்றுப்பத்தும், பதிகமும், சேர வேந்தர் ஆண்டுகளும்       பதிற்றுப்பத்துப் பதிகம் குறிப்பிடும் மொத்த ஆட்சி ஆண்டுகளை அரசனாக இருந்த ஆண்டுகள், வேந்தனாக இருந்த ஆண்டுகள் என இரு பகுதிகளாகக் கணிக்கப்பட்டன. இமயவரம்பனின் தம்பி பல்யானைச் செல்குழுகுட்டுவன், அவனது மகன்கள் களங்காய் கண்ணி நார்முடிச் சேரல், சேரன்செங்குட்டுவன் ஆகியோர் முறையே 25, 25, 55 ஆண்டுகள் ஆண்டதாகப் பதிகம் குறிப்பிடுகிறது. இவை அவர்கள் அரசனாகவும் வேந்தனாகவும் இருந்த மொத்த ஆட்சி ... Full story

பழந்தமிழக வரலாறு – 12

பழந்தமிழக வரலாறு - 12
கணியன்பாலன்         தமிழக வரலாற்றுக்கான காலவரையறைகள்          நமது பழந்தமிழக வரலாறு இங்கு தரப்பட்டுள்ள இருபத்தொரு காலவரையறைகளைத் தனது வரலாற்றுக்கான அடிப்படை ஆதாரங்களாகக் கொண்டுள்ளது. இந்த அடிப்படை வரலாற்று ஆதாரங்களையும், நமது சங்க இலக்கிய ஆய்வுகளையும் இணைத்து, இவை இரண்டின் அடிப்படையில்  பல புதிய கணிப்புகள் கண்டுணரப்பட்டு, நமது முக்கிய வரலாற்று நிகழ்வுகளுக்கான ஆண்டுகளும், காலகட்டங்களும்  கணிக்கப்பட்டன. 1.கிரேக்கவீரன் அலெக்சாந்தர் கி.மு. 326 ... Full story

பழந்தமிழக வரலாறு – 11

கணியன்பாலன் இ.மாமூலனாரும் செருப்பாழிப்போரும் செங்குட்டுவனும் மோகூர்த்தலைவன்:       இறுதியில் மோகூர்த் தலைவனும் அதியன்மரபினரும், திதியனும் எல்லையோர அனைத்துப்பிற தமிழ் அரசுகளும் ஒன்றிணைந்து மோரியர்களைப் போரில் தோற்கடித்துத் தங்களது எல்லையைவிட்டு துரத்திவிடுகின்றனர். மோரியர்படை பின்வாங்கி துளுவநாட்டை அடைந்து பாழிநகரில் நிலைகொள்ளுகிறது. துளுவநாட்டு வெற்றிக்குப்பின் மௌரியரது எல்லைப் பகுதிப் படைத்தலைவர்களே வடுகர்களின் துணையோடு போரிட்டு வந்தனர். ஆனால் அவர்களால் தமிழக எல்லையில் உள்ள குறுநில மன்னர்களை, வேளிர்களை வெல்ல இயலவில்லை. தமிழகத்தின் எல்லையில் மௌரியப்படைகளின் தோல்வி மௌரியப்பேரரசைத் தட்டி எழுப்பியது. மௌரியப்பேரரசின் ... Full story

பழந்தமிழக வரலாறு – 10 ஆ.மாமூலனாரும் செருப்பாழிப்போரும் செங்குட்டுவனும்

பழந்தமிழக வரலாறு - 10  ஆ.மாமூலனாரும் செருப்பாழிப்போரும் செங்குட்டுவனும்
கணியன்பாலன் மாமூலனார் பாடல்கள்:      மாமூலனார், பரணர், கபிலர் ஆகியவர்கள் குறித்து அப்பாதுரையார் தனது தென்னாட்டுப் போர்க்களங்கள் என்ற நூலில், “பரணர் சங்ககாலப் புலவர்களிலேயே மிக முற்பட்டவர், மிக நீண்ட நாள் வாழ்ந்தவர், அவர் முதுமைக்காலத்திலே கபிலர் இளையவராக இருந்தார், மாமூலனாரோ பரணரிலும் பழமையானவர். அவர் மௌரியருக்கு முற்பட்டு கி.மு. 3ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்தவர்” எனக்கூறுகிறார்(11). ஓரளவு பொருத்தமான காலத்தையே அப்பாதுரையார் கூறியுள்ளார் எனலாம். ஆகவே ... Full story

பழந்தமிழக வரலாறு – 9

பழந்தமிழக வரலாறு - 9
கனியன்பாலன் அ.மாமூலனாரும் செருப்பாழிப்போரும் செங்குட்டுவனும்      .        தென்னிந்தியக் கல்வெட்டுகள்(South Indian Inscription) என்கிற நூல்  தொகுதிகளை மிகக் கவனமாக தொகுத்தளித்த புகழ் பெற்ற வரலாற்று அறிஞர் உல்ட்ச்(Hultzsch)  என்பவர், முதலாம் கயவாகு மன்னனும், சேரன் செங்குட்டுவனும் ஒரே காலத்தவர் என்கிற கருத்தை ஏற்கவில்லை(1). மேலும் மகாவம்சம் குறிப்பிடும் கயவாகுவின் காலம், அந்தக் கயவாகு சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்காக நடத்திய விழாவில் கலந்து கொண்டான் என்கிற செய்தி ... Full story

பழந்தமிழக வரலாறு – 8

பழந்தமிழக வரலாறு – 8
கணியன்பாலன்              பண்டைய வடஇந்திய அரசுகள்      கி.மு. 6ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 3ஆம் நூற்றாண்டு வரையிலான வட இந்தியக் காலகட்டமே சங்ககால வரலாற்றுக் காலகட்டமாகும். பழங்காலத்தமிழக வரலாற்றை முழுமையாகக் கட்டமைக்க, அக்காலகட்ட தக்காண, வடஇந்திய அரசுகளின் வரலாறு குறித்தப் புரிதல் தேவை என்பதால் அவை இங்கு சுருக்கமாகத் தரப்பட்டுள்ளன. கி.மு. 8ஆம், 7ஆம் நூற்றாண்டுகளில் 16 ஜனபதங்கள் எனப்படுகிற 16 நகர்மைய அரசுகள் வட ... Full story

பழந்தமிழக வரலாறு – 6

பழந்தமிழக வரலாறு - 6
             மூலச்சிறப்புடைய தமிழ்ச்சிந்தனை மரபு                                         கணியன்பாலன் பண்டைய சங்ககாலத் தமிழகத்தின் தத்துவார்த்த, அறிவியல், கலை சார்ந்த அனைத்துச் சிந்தனைகளையும் “மூலச்சிறப்புடைய தமிழ்ச் சிந்தனை மரபு” எனலாம். இந்தச்சிந்தனை மரபு 1000 ஆண்டுகளுக்கும் மேலான மிக நீண்ட நெடிய காலத்தைக்கொண்டதாகும். இந்த மூலச்சிறப்புடைய தமிழ்ச்சிந்தனை மரபு ‘பொருள் ... Full story

பழந்தமிழக வரலாறு – 5

பழந்தமிழக வரலாறு - 5
             தமிழக வரலாற்றில் நகர்மைய அரசுகள்                                        -கணியன்பாலன் மனித இன நடவடிக்கைகள் குறித்தக் காலவரிசைப் படியான வரலாற்றுத்தரவுகளின் தொகுப்பே வரலாறு ஆகும். மொழிக்கு எழுத்து உருவான காலம் முதல் வரலாறு தொடங்குவதாகக் கருதப்படுகிறது. நமது பழந்தமிழகத்தை எடுத்துக்கொண்டால், அதன் வரலாறு சங்க காலத்திலிருந்து(கி.மு.750-50). தொடங்குகிறது. சங்ககால இலக்கியங்கள், மதச் சார்பான பல பாடல்களைக் கொண்டிருந்த போதிலும், பெரும்பாலான பாடல்களில் பொருள் முதல்வாத மெய்யியல் கருத்துக்கள் உள்ளன. சங்ககாலத்திலும், சங்க காலத்திற்கு முன்பும் ... Full story

பழந்தமிழக வரலாறு -4

பழந்தமிழக வரலாறு -4
                 தமிழக அரசகுடி மரபின் சிறப்பு                                     கணியன்பாலன் பண்டைய தமிழக அரசகுடிகளான சேர, சோழ, பாண்டிய அரச குடிகள் 2000 ஆண்டுகளாக இருந்து வந்துள்ளன. உலகில் வேறு எந்த நாடுகளிலும் எந்த அரச குடியும் 1000 ஆண்டுகள் கூட இருந்ததில்லை. கி.மு. 8ஆம் நூற்றாண்டு ... Full story

தமிழ் எழுத்தின் பழமை-2

கணியன்பாலன்   கி.மு. ஆறாம் நூற்றாண்டில் தமிழி-கா.இராசன்: 20 வருடங்களாக ஏழு தடவை கொடுமணலில் அகழாய்வு நடந்துள்ளது என்கிறார் தொல்லியல் ஆய்வாளர் சுப்புராயலு அவர்கள். அந்த 20 வருட அகழாய்வுகளில் கிடைத்த 500க்கும் மேற்பட்ட தமிழி(தமிழ் பிராமி) எழுத்துப்பொறிப்புகளை விரிவாக ஆய்வு செய்த கா.இராசன் அவர்கள் அவற்றின் காலம் கி.மு. 2ஆம் நூற்றாண்டு முதல் கி.மு. 6ஆம் நூற்றாண்டு  வரை எனவும் அவை மிகவும் நன்கு வளர்ந்த நிலையில் இருப்பதால் அதன் தொடக்க காலம் இதற்குச் சில நூற்றாண்டுகள் முந்தையதாக இருக்கலாம் எனவும்  தனது ‘பண்டைய எழுத்துமுறை, குறியீடுகளில் இருந்து பிராமிக்கு ஒரு ... Full story

தமிழ் எழுத்தின் பழமை-1

கணியன்பாலன்   தமிழ்மொழியும் அதன் இலக்கியங்களும் மிகப் பழமையானது என்பதற்கு அதன் ‘தமிழி’ எழுத்துத் தோன்றிய காலத்தை அறிதலே போதுமானது. தமிழகத்தில் பழனி அருகே உள்ள பொருந்தல் என்ற இடத்தில் நடந்த அகழாய்வின்போது  கிடைத்த மட்பாண்டங்களில் இருந்த இருநெல் மாதிரிகள் அமெரிக்காவில் உள்ள பீட்டா ஆய்வு நிலையத்தில், அறிவியல் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு (Accelerator Mass  Spectrometry  by the Beta Analytic Lab , USA ), அவைகளின் காலம் கி.மு.490, கி.மு. 450 எனக் கணிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு நெல் மாதிரிகளுமே, பொருந்தல் அகழாய்வில் கிடைத்த, இரு வெவ்வேறு மட்பாண்டங்களிலிருந்து எடுக்கப்பட்டவைகளாகும். இந்த மட்பண்டங்களில் ... Full story

பழந்தமிழக வரலாறு -3

பழந்தமிழக வரலாறு -3
               காலகட்டக் கணிப்பும், துல்லியமும்  கணியன்பாலன்               வரலாறு என்பது தற்செயலான நிகழ்வுகளால் ஆனது போல் தோன்றினாலும் அது தனக்கென வகுத்தளிக்கப்பட்ட விதிப்படிதான் இயங்கி வருகிறது. சமூகத்தின் பொருளாதார உற்பத்தி முறைதான் வரலாற்றின் திசைவழியை நிர்ணயிக்கிறது.  மனித வரலாற்றில் ஆண்-பெண் உறவு நிலையை எடுத்துக்கொண்டால், காட்டுமிராண்டி காலத்தில் குழு மணமும், அநாகரிக காலத்தில் இணை மணமும் இருந்தது. நாகரிக காலத்தில் குடும்பமும், ஒருதார மணமும் உருவாகியது. நிலப்பிரபுத்துவக் காலத்தில் இருந்த ... Full story
Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.