Posts Tagged ‘கணியன் பாலன்’

பழந்தமிழக வரலாறு – 15

பழந்தமிழக வரலாறு - 15
கணியன்பாலன்   ஆ.சோழவேந்தர்கள் முதலில் சேரவேந்தர்களின் ஆட்சி ஆண்டுகள் நிர்ணயிக்கப் பட்டு அதன்பின் அவர்களின் சமகாலச் சோழ, பாண்டிய வேந்தர்களின் ஆட்சி ஆண்டுகள் நிர்ணயிக்கப்பட்டன. சேர வேந்தர்களின் ஆட்சி ஆண்டுகள், பதிற்றுப்பத்துப்பதிகத்தில் உள்ள சேர வேந்தர்களின் மொத்த ஆட்சி ஆண்டுகளைக் கொண்டும், தூமகேது தோன்றியதைக்கொண்டும், புகளூர்க் கல்வெட்டு, அந்துவன் கல்வெட்டு, சம்பைக்கல்வெட்டு, கொல்லிப்பொறைக் கல்வெட்டு, பிட்டந்தைமகள்கல்வெட்டு போன்ற கல்வெட்டுகளைக் கொண்டும், மாக்கோதை, குட்டு வன் கோதை போன்றோரின் நாணயங்களைக் கொண்டும் ஓரளவு முறையான வரலாற்றுத்தரவுகளின் ... Full story

பழந்தமிழக வரலாறு – 7

பழந்தமிழக வரலாறு – 7
பாலன் நாச்சிமுத்து   பண்டைய தக்காண அரசுகள்              (சாதவாகனர்களும் காரவேலனும்) சாதவாகனர்:         அசோகருக்குப் பின் மகத அரசு சிதைந்து போனது. கி.மு.230 அளவில் சாதவாகனர்கள்(SATAVAHANA) தமிழரசுகளின் ஆதரவோடு தக்காணப் பகுதியில் தங்களது தனி ஆட்சியை நிறுவினர். கி.மு.230 முதல் கி.பி.220 வரை சுமார் 450 ஆண்டுகள் அவர்கள் தக்காணத்தை ஆண்டனர். சாதவாகனர்களை, தமிழில் நூற்றுவர் கன்னர் அல்லது சாதவ கன்னர்(சாதவ என்பது சதம், ... Full story

பழந்தமிழக வரலாறு -4

பழந்தமிழக வரலாறு -4
  தமிழக அரசகுடி மரபின் சிறப்பு                                     -கணியன்பாலன் பண்டைய தமிழக அரசகுடிகளான சேர, சோழ, பாண்டிய அரச குடிகள் 2000 ஆண்டுகளாக இருந்து வந்துள்ளன. உலகில் வேறு எந்த நாடுகளிலும் எந்த அரச குடியும் 1000 ஆண்டுகள் கூட இருந்ததில்லை. கி.மு. 8ஆம் நூற்றாண்டு தொடங்கி, கி.பி. 12ஆம் நூற்றாண்டு முடியம்வரை தமிழக அரச குடிகள் இருந்தன. பெரும்பாலும் சேர, சோழ, பாண்டிய அரச குடிகளால் தமிழகம் ஆளப்பட்டபோது மட்டுமே ... Full story

பழந்தமிழக வரலாறு -2

பழந்தமிழக வரலாறு -2
காலமும்  வரலாறும்  கணியன்பாலன் காலம் குறித்தப் புரிதலோ, காலம் குறித்தத் தெளிவோ இன்றி எழுதப்படும் வரலாறு, ஒரு முழுமையான வரலாறாக இருக்க முடியாது. கி.பி. 17ஆம் நூற்றாண்டு உலகத்துக்கும், கி.பி. 21ஆம் நூற்றாண்டு உலகத்துக்கும் இடையே மலைக்கும் மடுவுக்குமிடயேயான வேறுபாடுகள் உள்ளன. இந்த இரண்டு காலகட்ட உலகமும் வேறு வேறானவை. அதில் வாழ்ந்த, வாழ்ந்து வருகிற மனிதர்களும் வேறு வேறானவர்கள். இவர்கள் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்வது என்பது இயலாத காரியம். ... Full story

பழந்தமிழக வரலாறு -1

பழந்தமிழக வரலாறு -1
கணியன்பாலன்           சங்க இலக்கியமும் பழந்தமிழக  வரலாறும்   கி.மு. 2ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மதுரை மருதனிள நாகனார் என்கிற சங்ககாலப்புலவர் பொருள் தேடி ஆழ் கடலில், மிகப்பெருங்கப்பலில் நீண்ட பயணம் செய்த சங்க காலத்தலைவன் குறித்துப்பாடிய அகம் 255ஆம் பாடல், “உலகுகிளர்ந்தன்ன உருகெழுவங்கம்” எனத்தொடங்கி “வருவர் மன்னால்-தோழி!” என முடிகிறது. இப்பாடலில், ‘புலால் மணமுடைய கடலின் அலைகளில், உலகமே பெயர்ந்து வந்தது போன்று அச்சம்தரும் மிகப்பெரிய கப்பலை, இயற்கையான பருவக் காற்று வீசி, இரவு பகல் பாராது, ... Full story
Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.