Posts Tagged ‘கவிஜி’

தசாவதாரம்

தசாவதாரம்
--கவிஜி. சாய்பாபா காலனி, சிவனாந்தா காலனி, சிங்காநல்லூர், உக்கடம், கணபதி, சரவணம் பட்டி, ஒன்டிபுதூர், மலுமிச்சம்பட்டி, கணுவாய், பீளமேடு...இந்த பத்து இடத்திலயும் இருப்பேன், தசாவதாரம் மாதிரி.... நீ தான் புத்திசாலியான போலிஸ் ஆச்சே.... கண்டு பிடிடா பாக்கலாம்... இப்போ சொல்றேன்டா.. இந்த முறையும் நீ என்னை பிடிக்க முடியாது........ ஏன்னா..... எப்பவும்... நான் உன்ன விட ஒரு படி மேலடா.. என் நண்பனே........ தில் இருந்தா நீ மட்டும் வா.... வந்து ... Full story

கடவுளின் அகல விரிந்த கைகள்…..

--கவிஜி.     புத்தனிடம் பேச எதுவுமில்லாத யசோதரையிடம் பேச நிறைய இருக்கிறது... ________________________________________________ உலகின் முதல் கதையும் கடைசி கதையும் 'கடவுள்' ஆகவே இருக்கிறது... ________________________________________________ கைகளை எவ்வளவு அகலமாக விரிக்க முடிகிறதோ அவ்வளவுதான் வானம் குழந்தைக்கு.... ________________________________________________ பூவைச் சூடிக் கொண்ட தோட்டம் என உன் கல்லறை... ________________________________________________ உங்கள் வீட்டுப் பூனைகளிடம் கேட்டு விடாத கேள்விகளில் எங்கள் வீட்டு அடுப்பு கடைசியாய் எரிகிறது... ________________________________________________ கவிஜி Full story

மன அரங்கம்….

கவிஜி திரையை விரித்துக் கொண்டு உள்ளே சென்று நடித்து விட்டு விடிந்ததும் வெளியேறி போகிறார்கள் நடிகர்கள் என்று நினைத்த காலத்தில் சினிமா சிலிர்த்தது... ப்ரொஜெக்டரில் தலைகீழாய் தெரிந்த காட்சிகளை குனிந்து குனிந்து பார்க்கையில் சினிமா பிரமாண்டம்.... திரைக்குள் விழுந்த குத்துகளில் வெளியே அடி வாங்கியதாக உணர்ந்த காலத்தில் புரியாத லாஜிக் ... Full story

இப்படிக்கு இது கடவுள் மொழி…

கவிஜி சட்டென தலை இழுத்துக் கொண்ட பெரு மழைக்குள் உன் துளிகள் அமிலம்.. யாருமற்ற வெளிக்குள் வேகம் குறைத்திட்ட நீ நிற்க மட்டுமில்லை... யாவரும் நலமாகிட துடிக்கும் சிறகுக்குள் சதிராடும் தென்றலை கொல்வது உன் சுபாவம்... மூச்சுக்குள் உன் சிரிப்பு முண்டியடிப்பதில் முரண்பட்டவனாவதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்... அத்தனை சரிகளையும் ... Full story

எங்கள் ஊர் ராஜகுமாரி!

-கவிஜி  இன்னும் அவளாகத்தான் இருக்கிறாள்... Full story

ஜென்

-கவிஜி வா...வந்து தேநீர் போடு... மதிய மழை வரட்டும்... *** என்றாவது திறக்கப்படும் ஜன்னலில் திறக்காமலே கிடக்கின்றன கைகள்... *** ஜென் தத்துவம் ஒன்றுமில்லை ரொட்டித் துண்டு பெரிதென்கிறது... *** எறும்புகளைக் கொண்டாடுகிறது வரிசை... *** முதலில் இளையராஜாவின் பாடலைச் சொல்... பின், காதலை சொல்...   Full story

விடிஞ்சா கல்யாணம்

-- கவிஜி. ஊரே புது வருசத்தை எதிர் நோக்கி என்ன செய்வதென்று தெரியாமல் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தது, எப்போதும் போல.... ஆனால்... மனமெங்கும் அந்த திகிலின் தவிப்புகளோடு.... இளசுகள் கோவில் திடலில் அரட்டை அடித்துக் கொண்டும்.. திகில் விஷயத்தைப் பற்றி விவாதிக் கொண்டும் இருக்க.. பெருசுகள்.. மிரண்டு போய் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்...கிட்டத்தட்ட ஊரின் மத்தியில் பெரிய வீதியில், மக்கள் கூட்டம் காலியாகவே இருக்க... சந்திரன் பெரிய வீதியின் நடுவிலிருக்கும் போர் பைப்பில் தண்ணீர் எடுக்க குடத்தை எடுத்துக் ... Full story

பிறழ்வு வண்ணங்கள்

-கவிஜி  வோல்கா கரையெங்கும் உன்கனவு மழை போத்தல் திறக்காத போதும் மதுவின் மழை என் மனங்கும்...! வழி மாறியதோ, விழி தூறியதோ, உள்ளம் பொங்கும் துளிகளின் நிலவுக் கூட்டம்... வண்ணப் பிறழ்வுகளின் மாமரத்துத் தனிமையென, தலைவிரித்த பெருமழைக்குள் நம் நிழல் வட்டம்...! காகிதப்பூக்கள் கப்பலான தத்துவத்தில் ஆளுக்கொரு ஜன்னல் நெடும் பயணம்...! திறவாத கூட்டுக்குள் திறம்பட வரைந்த தூரிகையில் சொட்டும் நிறமற்ற மழை குடியற்ற நம்வெளி...! மழைக்கு ஒதுங்கிய பாதங்களில் மனம் நிறைக்கும் மழை, வீடெங்கும்!     Full story

முரண்களின் முரண்!

-கவிஜி  நதி எரிக்கிறது குளிர்உதிர்த்த மதியின் நிறம்! -------- இறுதி ஊர்வலத்தில் தெரியாமல் விழுந்துவிட்ட ஒரேஒரு முள்கூட மரணத்தை வன்மையாகக் கண்டிக்கிறது! -------- எல்லா ஊர்க் கோவில் ஆலய மசூதி வாசல்களிலும் இந்தியப் பிச்சைக்காரர்கள்! -------- தலைகீழாய்த் தொங்கும் கயிற்றில் நேராக இறங்குகிறது எறும்பு...!   Full story

அம்மா வீடு!

-கவிஜி  என் வீடு அம்மா வீடாகிப் போனது... வந்து போகத் திருவிழாக்கள் தேவைப்படுகின்றன... என்குழந்தையை விட அண்ணனின் குழந்தையைச் சற்று அதிகமாகவே கொஞ்சுகிறார் அப்பா...! ஒரு பொம்மையைக் கூட கேட்டுத்தான் எடுக்க வேண்டி இருக்கிறது... சிரித்துக் கொண்டே மறுத்து விடுகிறார் அண்ணி... எனதறையில் பழைய பொருட்கள் போட்டு வைத்திருக்கிறார்கள் எனது பள்ளிக்காலச் சீருடைகள் உட்பட... ஏனோ இப்போதெல்லாம் அம்மா வீட்டை எனக்கும் அம்மா வீடென்றே சொல்லத் தோன்றுகிறது...!     Full story

ஜன்னல் தேசங்கள்!

-கவிஜி  வீதி முழுக்க அடைத்துக் கிடக்க ஒற்றை ஜன்னல் மட்டும் திறந்தே கிடக்கும் வீட்டுக்குள் யார்தான் இருப்பார்கள்? என்றபடியே பயந்து பயந்து வீதியில் நடந்து மழையில் நனைந்தும் நனையாமலும் சுற்றும் முற்றும் பார்த்தபடி ஜன்னல் அருகே சென்று எட்டிப் பார்க்கும் முன் கணமொன்றில் ஏதேச்சையாக என்வீட்டு ஜன்னலை திரும்பிப் பார்த்தேன்… எப்போதும்போல் கன்னத்தில் கைவைத்து இந்த ஜன்னலைப் பார்த்துக் கொண்டிருந்தேன் நான்...!   Full story

கண்ணாடி பார்ப்பவள்…!

-கவிஜி நீ கடந்த மரங்கள் எனை உதிர்க்கின்றன... *** வளையலுக்குள் மாட்டிக் கொண்ட விளிம்புகளில் நான் உடையப் போகும் வட்டம்... *** உன் கனவுக்குள் தூக்கம் இன்றி அலைகிறது திடுக்கென விழித்துக் கொண்ட என் இரவு... *** அறை முழுக்க வானவில்... வரையத் துவங்கினாள் கண்ணாடி பார்ப்பவள்... Full story

பொம்மைகளின் காடு!

-கவிஜி புலி, கரடி, சிங்கம், குரங்கு, மான் காட்டு நாய், மயில் எனப் பல விலங்குகளிடையே ஒய்யாரமாய் அமர்ந்திருக்கும் 'சே' என்னை அவன் காட்டுக்குள் அனுமதிக்க மறுத்தான்.... எவ்வளவு கெஞ்சியும் அனுமதிக்காத அவன், கடைசியாக உதிர்ந்த யோசனையில் ஒரு முயல் பொம்மையை வாங்கிக்கொண்டு வந்த என்னைச் சிரித்துக் கொண்டே உள்ளேசெல்ல அனுமதித்தான்... முயல் பொம்மையை அவன் கூட்டத்தில் சேர்த்துக் கொண்ட பாங்கில் எங்கள் வீட்டு முகப்பறை ஓர் அடர்ந்த காடாகத்தான் தெரிந்தது...!     Full story

தி லாஸ்ட் செல்ஃபி

--கவிஜி. இந்தப் பயணத்தின் முடிவு எப்படி இருக்குமோ எனக்கு தெரியாது.... இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற எந்த கட்டுப்பாடோ ஆசையோ இல்லை... போகி.........................றே.............................ன்... என் சொந்த ஊருக்கு, நான் பிறந்த மண்ணுக்கு... நீண்ட நாட்களுக்கு பின்.. இல்லையில்லை நீண்ட வருடங்களுக்கு பின்...போகிறேன்.. மனதுக்குள் ஏதேதோ மாற்றங்கள்.. நொடிக்கொரு தரம் மாறும் மனநிலைக்குள் நான் எந்த நொடி என்பதுதான் எனது பதிலாக இருக்கிறது, மாறாக கேள்வியும் கூட...கேள்விகளினூடாக நினைவுகளும் பயணிக்கத்தான் செய்கிறது....பயணங்களின் ஊடாக நினைவுகளும் நிலைக்கண்ணாடி சுமக்கத்தான் செய்கிறது.... எங்கள் ஊருக்கு ... Full story

இவன்

- கவிஜி அவன், அந்த வீட்டின் பின்புற சுவற்றில் ஏறி உள்ளே குதித்தான்.... மனக் கண்ணில் ஒருமுறை எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்த்து கொண்டான்... இதே வீடு தான்... குறைஞ்ச பட்சம் 200 சவரன் நகை இருக்கும்....வீட்டில் உள்ளவர்கள் அனைவருமே, திருப்பதிக்கு சாமி கும்பிட சென்றிருக்கிறார்கள்.. நம்பகமான இடத்தில் இருந்துதான் செய்தி கிடைத்திருக்கிறது... ... Full story
Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.