Posts Tagged ‘கவிஞர் காவிரி மைந்தன்’

மனதில் நிறைந்த மக்கள் திலகம் 100 : தொகுப்பு : காவிரிமைந்தன்

சாமான்ய மனிதர்களின் கட்டுரைகள் : சுப்ரபாரதிமணீயன்   எம்.ஜி.ஆரின் நூற்றாண்டை ஒட்டி இந்த 288 பக்க நூலில் எம்.ஜி.ஆர் பற்றிய பல சாமான்ய மனிதர்களின் கட்டுரைகளைத்தொகுத்திருக்கிறார் காவிரிமைந்தன். இதில் எழுதியுள்ளவர்களில் எம்.ஜி.ஆர் மீது பேரன்பு கொண்டவர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களின் மனதினை எம்.ஜி.ஆர் பல விதங்களில் பாதித்திருக்கிறார். அந்த பாதிப்புகளை எண்ணங்களின் வடிவில் வடித்திருக்கிறார் காவிரிமைந்தன் . எம்.ஜி.ஆர் பற்றி விதவிதமான அனுபவங்கள்.. செய்திகள்... கட்சியின் தலைவராக இருந்த அனுபவங்கள், ஏழைப்பங்காளியாக இருந்து அவர் செய்த வள்ளல் தன்மை, பதவிகளை அவர் பயன்படுத்திக்கொண்டு ஏழைகளுக்குச் செய்த ... Full story

வல்லமை இணையதளத்தில் நடத்திய மூன்று போட்டிகளில் பெறப்பட்ட கட்டுரைகள் புத்தக வடிவம்

வல்லமை இணையதளத்தில் நடத்திய மூன்று போட்டிகளில் பெறப்பட்ட கட்டுரைகள் புத்தக வடிவம்
காவிரிமைந்தன் வணக்கமுடன் வரையும் மடல். நலம்.. நலமே நாடுகிறேன்! வல்லமை இணைய தளத்தோடு இணைந்து நான் நடத்திய போட்டிகள் மூன்று.. 1. என் பார்வையில் கண்ணதாசன் - கட்டுரைகள் பெறப்பட்டு பேராசிரியர் வ.வே.சுப்பிரமணியன் அவர்கள் நடுவராக இருந்து பரிசுக்குரிய கட்டுரைகளைத் தேர்ந்தெடுத்து தந்தது நீங்கள் அறிவீர்கள். பெற்றிட்ட கட்டுரைகளோடு இன்னும் எனது இலக்கிய வட்டத்தில் பல பிரமுகர்களிடம் இருந்து மேலும் பல கட்டுரைகள் பெற்று நூறு கட்டுரைகள் ஆக.. அவை ஒவ்வொன்றுக்கும் எனது பின்னூட்டம் சேர்த்து.. இந்தப் புத்தகத்தை.. 01.07.2017ல் சென்னையில் ... Full story

கர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி முடிவுகள்

கர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி முடிவுகள்
அன்பினிய நண்பர்களுக்கு, வணக்கம் . நாம் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த, வல்லமை மின்னிதழும் கவியரசு கண்ணதாசன் தமிழ்ச் சங்கமும் இணைந்து வழங்கும் கர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டியின்  நடுவர் திரு தமிழருவி மணியன் அவர்களின் தீர்ப்பை வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி கொள்கிறோம். தமிழருவி மணியன் வணக்கம். வளர்க நலம். பெருந்தலைவர் குறித்த கட்டுரைகளின் முடிவுகளை அனுப்பி வைத்துள்ளேன். கட்டுரைப் போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள் மற்றும் ... Full story

நாளை உலகை ஆளவேண்டும்..உழைக்கும் கரங்களே! – புலவர் புலமைப்பித்தன்

நாளை உலகை ஆளவேண்டும்..உழைக்கும் கரங்களே! - புலவர் புலமைப்பித்தன்
கவிஞர் காவிரிமைந்தன் நாளை உலகை ஆளவேண்டும் கோவை செழியன் அவர்கள் தயாரிப்பில் கே.சி.பிலிம்ஸாரின் உழைக்கும் கரங்கள் திரைப்படம் இயக்குனர் ஸ்ரீதர் இயக்கத்தில்!! எம்.ஜி.ஆர். கதாநாயகனாக.. மெல்லிசை மன்னரின் இன்னிசையில் புலவர் புலமைப்பித்தன் வரைந்த பூபாளமிது! உழைக்கும் மக்களுக்காக வரையப்பட்ட உன்னத சாசனமிது!! கே.ஜே.யேசுதாஸ் என்னும் கானப்பறவை தன் கந்தர்வக்குரலில்.. நாளை உலகை ஆளவேண்டும்..உழைக்கும் கரங்களே! நாளை ... Full story

இந்திய மண்ணின் இரண்டாம் இமயம் இன்று சரிந்ததே!

இந்திய மண்ணின் இரண்டாம் இமயம் இன்று சரிந்ததே!
கவிஞர் காவிரிமைந்தன் இந்திய மண்ணின் இரண்டாம் இமயம் இன்று சரிந்ததே! இவர்போல் மனிதர் இதுவரை இங்கு பிறந்ததில்லையே! வள்ளுவன் வாய்மொழி வகுத்தது பாதையென வாழ்ந்தவரல்லவா? ''சொல்' எனும் சொல்லே உருதுமொழியில் 'கலாம்' ஆனதைச் சொல்லவா? காலம் நமக்குத் தந்த கொடைதான் 'அப்துல் கலாம்' அல்லவா? வாழும் நாள்வரை நாளும் பொழுதும் நாட்டிற்காய் உழைத்தவரல்லவா? உலகம் போற்றும் உன்னதத் தலைவர்கள் எவரும் ... Full story

கர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி!

கர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி!
அன்பினிய நண்பர்களுக்கு, வல்லமை மின்னிதழும் கவியரசு கண்ணதாசன் தமிழ்ச் சங்கமும் இணைந்து வழங்கும் கர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி வணக்கம். அன்னை சிவகாமி பெற்றெடுத்த தமிழ்ச் சிங்கம்.. பொற்கால ஆட்சியை நடத்திக் காட்டிய தலைவர்! தர்மமே மானிடப் பிறப்பெடுத்துத் தரணியிலே வந்துதித்து ஏழைகளைக் காத்து நின்றதென்றால் காமராசருக்கே அது சாலப் பொருந்தும். நம் தமிழ் நாட்டில் இலட்சோப லட்சம் மக்கள் கல்விச்செல்வம் பெற்றுத் திகழ்வதற்கு காமராசர் ... Full story

மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன் அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி

மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன் அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி
கவிஞர் காவிரிமைந்தன் ஏழிசை ஸ்வரம் எடுத்து ஏந்தி வந்த கலைமகளும் எம்.எஸ்.வி. எனும் மகனை இத்தரணிக்குத் தந்ததனால் எங்களைப் பொறுத்தவரை எம்.எஸ்.வி. என்பதுவும்.. இனியதொரு தமிழ்ச் சொல்லே.. உலகில் எத்தனையோ இசை அமைப்பாளர்கள்.. இருப்பினும் ஒரு மாபெரும் கவிஞனுக்கு சிலை அமைத்த பெருமை எங்கள் மெல்லிசை மன்னர் ... Full story

அன்னையர் தின வாழ்த்துகள்…

அன்னையர் தின வாழ்த்துகள்...
கவிஞர் காவிரி மைந்தன் அன்னைக்கு நிகரான சொல்கூட அகிலத்தில் இல்லை... அவள் அன்புக்கு ஈடாக பூமிதனில் பொருளொன்றுமில்லை கண்ணுக்கு நிகராக நம்மைக் காப்பதற்கு - கடவுள் அன்னையை நமக்களித்தான் உண்மைதானே! என்றைக்கும் அவளிருப்பாள் தாயாக... நாம் அவள் மடிதனிலே கண்ணுறங்கும் சேயாக.. உண்ணவும் உறங்கவும் வைத்து நிதம்.. தன் ஒருகோடி கனவுகளை தான் சுமப்பாள்! சிறுதுன்பம் நமக்கென்றால் பொறுக்கமாட்டாள் வரும்துயரம் யாவையும் ... Full story

உலகம் பிறந்தது எனக்காக

உலகம் பிறந்தது எனக்காக
கவிஞர் காவிரிமைந்தன் காக்கை குருவி எங்கள் ஜாதி என்றான் மகாகவி பாரதி. யாதும் ஊரே யாவரும் கேளிர் என்றான் கணியன் பூங்குன்றனார். மானுடக்கவிஞன் கண்ணதாசன் பார்வையின் விசாலத்தைப் பாருங்கள்! உலகம் பிறந்தது எனக்காக என்கிறார். 1997ல் அக்டோபர் திங்கள் 17 ஆம் நாள் சென்னை ராணி சீதை மன்றத்தில் கவியரசு கண்ணதாசன் கலை இலக்கிய மையம் (பம்மல்) சார்பில் நடைபெற்ற கண்ணதாசன் விழாவில் இனியதோர் பட்டிமன்றம் முனைவர் சரசுவதி ராமனாதன் ... Full story

பச்சைக்கிளி முத்துச்சரம் முல்லைக்கொடி யாரோ..

பச்சைக்கிளி முத்துச்சரம் முல்லைக்கொடி யாரோ..
கவிஞர் காவிரி மைந்தன் உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் என்பது எம்.ஜி.ஆர். அவர்களின் வாழ்க்கையில் மற்றுமொரு மைல்கல் மட்டுமல்ல! தமிழ்த்திரை வரலாற்றிலும் அந்தப்படம் மறக்க முடியாத ஒன்று! மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களை அழைத்து.. இந்தப் படத்திற்கான இசையமைப்பிற்கு முதல் தொகையை வழங்கிய புரட்சித்தலைவர்.. முழுக்க முழுக்க பாடல்களின் வெற்றியை எதிர்பார்க்கிறேன்! பத்துப் பாடல்கள்.. அனைத்தும் முத்துப் பாடல்களாக வரவேண்டும் என்று ... Full story

’மனத்தில் நிறைந்த மக்கள் திலகம்’ போட்டி முடிவுகள்

’மனத்தில் நிறைந்த மக்கள் திலகம்’ போட்டி முடிவுகள்
பவள சங்கரி அன்பினிய நண்பர்களே! வணக்கம். நாம் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த, ‘மனத்தில் நிறைந்த மக்கள் திலகம்’ போட்டியின் முடிவுகளை திருமதி கமலம் சங்கர் வெளியிட்டிருக்கிறார்கள். முதல் மூன்று பரிசுகள் என்ற வகையில் மட்டும் தம் முடிவை அறிவிக்காமல், தாம் பரிசுக்குரியதாக தேர்ந்தெடுத்ததன் காரணங்களோடு, போட்டியில் பங்கு பெற்ற அனைவரின் கட்டுரைகளையும், ஆழ்ந்து வாசித்து, அதற்கான தம் கருத்துகளையும் அழகாக வெளியிட்டிருப்பது பாராட்டுதலுக்குரியது. ஒரு படைப்பாளியின் மன நிலையை உணர்ந்து அவர்தம் முடிவுகளை பாரபட்சமின்றி வழங்கியிருக்கிறார். அவருக்கும், போட்டியை நல்ல ... Full story

மனத்தில் நிறைந்த மக்கள் திலகம் – கட்டுரைப் போட்டிக்கான இறுதித் தேதி நீட்டிப்பு

மனத்தில் நிறைந்த மக்கள் திலகம் - கட்டுரைப் போட்டிக்கான இறுதித் தேதி நீட்டிப்பு
மனத்தில் நிறைந்த மக்கள் திலகம் என்ற தலைப்பில் தமிழக முன்னாள் முதல்வர், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களைப் பற்றிய கட்டுரைப் போட்டியை அவரது பிறந்த நாளில் அறிவித்திருந்தோம். ஆர்வமுள்ள வாசகர்கள், தொடர்ந்து படைப்புகளை அனுப்பி வருகிறீர்கள். கையால் எழுதி ஸ்கேன் செய்தும் வெவ்வேறு எழுத்துருவிலும் சிற்சில கட்டுரைகள் அமைந்துள்ளன. ஒருங்குறியில் தட்டி எழுதப்பெற்ற படைப்புகளை மட்டுமே போட்டிக்கு ஏற்க இயலும் என்பதை வாசகர்கள் கவனத்தில் கொள்ள வேண்டுகிறோம். சில கட்டுரைகள் ... Full story

தங்கப்பதக்கத்தின் மேலே..

தங்கப்பதக்கத்தின் மேலே..
கவிஞர் காவிரி மைந்தன் தங்கப்பதக்கத்தின் மேலே.. ‘எங்கள் தங்கம்’ திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள காதல்ரசம் ததும்பும் கனிவான பாடல்! இதயம் தொடுகின்ற இனிய கலை காதலென்பதை இதுபோன்ற பாடல்கள் ஒவ்வொன்றும் நிரூபிக்கின்றன. அட்டியின்றி அவள் அழகை வர்ணிக்கக் காதலன் முற்படும்போது வட்டியும் முதலுமாக அவளும் திருப்பித்தரும் பேரழகு இப்பாடலெங்கும் வியாபித்திருக்கிறது. நாயகனும் நாயகியும் இணைசேர்ந்து இயற்றமிழை உச்சரிக்க நடப்பது அங்கே நாட்டியம் தமிழன்றோ? இவற்றை ஒருங்கிணைக்கும் இனிய பணியை இசைத்தமிழ் இனிதே நிறைவேற்றிட மற்றொரு வெற்றிப்பாடல் மக்களை ... Full story

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே – கவிஞர் வாலி

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே - கவிஞர் வாலி
கவிஞர் காவிரி மைந்தன் அந்த நாள் ஞாபகம் ..... வழக்கம்போல் இல்லாமல் புதிய யுக்தியில் பாடல்கள் பிறப்பதுண்டு! வாழ்வில் எதார்த்தமாக பேசும் வார்த்தைகளையே பாடலின் உள்ளீடாகத் தரும்போது.. அதையும் சவாலாக எடுத்துக்கொண்டு.. இசையமைத்த விதமும்.. உயர்ந்த மனிதனில் இடம்பெற்ற இப்பாடலை இன்னும் உயரச் செய்திருக்கிறது! நடிகர் திலகமும் மேஜர் சுந்தரராஜனும் இணைந்து தங்கள் பால்யகால நட்புமுடல் பள்ளிப் படிப்பு என - இன்றைய வாழ்வு வரை அலசிடும் அழகையெல்லாம் அப்படியே எழுதிக் காட்டிய வாலி அவர்களையும் அதற்கு அப்படியே ... Full story

சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து..- கவியரசு கண்ணதாசன் – விஸ்வநாதன் ராமமூர்த்தி

சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து..- கவியரசு கண்ணதாசன் - விஸ்வநாதன் ராமமூர்த்தி
சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து.. மெய், வாய், கண், மூக்கு, செவி என ஐம்புலன்கள் கொண்ட மனிதன் அவைகளை அடக்கியாளுகின்றானா? அல்லது அவைகளுக்குள் அடங்கிப் போகின்றானா? ஆறறவில் ஆறாம் அறிவாம் பகுத்துணர்வால் இன்னும் பக்குவப்படுகின்றானா? இல்லை.. ஆசையென்னும் தீயால் அவனே அவதிப் படுகின்றானா? இவை அனைத்தும் கலந்த கலவையே மனித வாழ்க்கை என்று இறைவன் எழுதி வைத்தானா? தன்னைச் சுற்றியிருக்கும் தாவரங்கள்.. மரம், செடி, கொடி என பசுமை நிறம்காட்டி வண்ணவண்ணப் பூக்களுடன் காட்சிதரும் இயற்கை தன் அழகையெல்லாம் இதமாக அள்ளி வழங்க.. சோலைவனங்களும், நிழல்தரும் மரங்களும்.. ... Full story
Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.