Posts Tagged ‘கிரேசி மோகன்’

Page 1 of 11712345...102030...Last »

மங்கையர் மலரில் ….

மங்கையர் மலரில் ....
  Full story

கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

கேசவ் வண்ணம் - கிரேசி எண்ணம்
180622 New Forever lr 10x14 in சரணா கதியென்று சார்ந்து கிடப்போர்க்(கு) அரணாய் இருக்கும் அரியே -நரனாய்ப் பிறந்து வளர்ந்து பிணியென்ற சாக்கில் இறந்தில்லை யாவ(து) எதற்கு!....கிரேசி மோகன்....! Full story

கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

கேசவ் வண்ணம் - கிரேசி எண்ணம்
  180621 Lord of Paradox -watercolour - Arches 10x14” 300 gsm -lr முரணெனப் பட்டாலும் மூலமே நின்னை வரவழைக்கக் கண்டேன் வழியை -இரணியன்போல் இல்லை இறையென்று சொல்லி இரையாக மல்லுக்(கு) அழைப்பேன் முனைந்து....கிரேசி மோகன்....! Full story

’’வடபத்ர ஸாயி’’….!

  வடபத்ர ஸாயி வடவேங் கடத்தில் இடமுற்ற ஏழுகொண்டல் வாடு -படமுற்ற பாம்பில் படுத்த பெருமாளே, கண்ணிநுண் தாம்புக்(கு)உட் பட்டதாமோ தர்.....கிரேசி மோகன்....! Full story

கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

கேசவ் வண்ணம் - கிரேசி எண்ணம்
180620 New Forever-lr 10x14” ஒருவர் படுக்க இருவர் அமர வருகை புரிந்தவரால் நிற்க -ஒருயிரவில் பொய்கைபேய் பூதத்தார் பின்னிப் பிணைந்திட செய்த மழையோன் சரண்....கிரேசி மோகன்....! Full story

கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

கேசவ் வண்ணம் - கிரேசி எண்ணம்
  180617 Krishna Philharmonic- 10x14” wm ''மல்லாண்டு கண்டது மாவீரன் பட்டம்தான், புள்ளாண்டான் ஹார்மனியை(சுமுகத்தை) பூமிக்கு -சொல்லாண்ட கீதை இசைக்கின்றார், கூடாரைக் கொள்ளுமிவர் பாதைக் குமார்க்க பந்து''....கிரேசி மோகன்....! Full story

கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

கேசவ் வண்ணம் - கிரேசி எண்ணம்
  மூப்பிழைய, மூச்சடைக்க, சாப்பாடே நஞ்சாக கூப்பிடாத காலன் கரம்குலுக்க -ஆப்பழியும்(உடல் அழியும்) அந்திம நாளேனும் அய்யோ மனமேநீ(கொரில்லா ஸிம்பாலிக் -கேசவ் கரெக்டா....!) நந்த குமாரனை நம்பு....கிரேசி மோகன்....! Full story

கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

கேசவ் வண்ணம் - கிரேசி எண்ணம்
180618 Yashoda -lr 10x14   ’’திருவடி தீக்‌ஷையை தாயார்க்(கு) அளித்தார், பெருவிரல் சூப்பிய பாலர் -பெருவடிவில்(திருவிக்கிரமனாய்) மாவலி உச்சியில் மூன்றென வைத்தவர் ’ மா’(தாய்)மாது(யசோதை) சொல்தட்டா மாது(மாதவர்)’’....கிரேசி மோகன்....! Full story

கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

கேசவ் வண்ணம் - கிரேசி எண்ணம்
  180616 -Balanarasimha and Prahlada lr வாமனனாய் வந்தார், வடிவில் சிறுத்(து)அரி, பூமன(பிரகலாத ஸ்வாமி) பக்திக்(குட்)உட் பட்டதால்: -கோமண சோணை ரமணமுனி சொன்னது பக்திமனத் தூணில் ஒளியும் துரும்பு(அங்குஷ்டாப்யாம்)....! ஏந்தி இலக்குமியை யோக நரசிம்மமாய் சாந்தி தவழ்கின்ற சிங்கத்தை -மாந்தி திளைப்போர் வினைத்தூண் இளைத்து துரும்பாய் களைத்தல் கதையின் கருத்து....! கொச்சு பிரகலாதன் கொஞ்சு மழலையில் உச்சரிக்க நாமம் உரத்(து)அப்போ -உச்சி குளிர்ந்தவன் ... Full story

டி.கே.வி.தேசிகாச்சாரியார்

டி.கே.வி.தேசிகாச்சாரியார்
த்யாகச் செம்மலே ,தேசிகாச்சார் தெய்வமே, யோகப் பிதா(க்ருஷ்ணமாச்சார்)அன்று யோஜித்த -சாகஸத்தை, லோகஷேம லவ்(LOVE)சிவமே,(அன்பே சிவம்) லீலா தரங்கரே, சாகா வரம்பெற்ற சாது(மகான் -பிதாமகர் அல்ல பிதாமகான்) Full story

கேசவ் வண்ணம் கிரேசி எண்ணம்

கேசவ் வண்ணம் கிரேசி எண்ணம்
  180614 - Yogacharya Krishnamacharya - bw A4 - graphite ''பதஞ்சலி பின்வந்த பிதாமகரே, ஆன்ம பதஅஞ்சலி ஏற்றிடுவீர், பாதம் -பதிந்தோம்உம் ஆஸிபல கூறிடும் ,ஆச்சார்ய க்ருஷ்ணமாச்சார் தேசிகரே யோகத் தெளிவு’’....கிரேசி மோகன்....! Full story

கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

கேசவ் வண்ணம் - கிரேசி எண்ணம்
180611 New Forever - 26x36 cms (10x14”) Arches -cold pressed - lr ஆண்டவா, பழுப்புவண்ணம் பூண்டவா, நீள்விசும்பில் நீண்டவா, பாரதப் பாண்டவராய் -வேண்டவா?, தூண்டவா பக்தியால் ?, தீண்டவா பாரதியாய் ? கீண்டவா தீங்கைக் கிழித்து....கிரேசி மோகன்....! நாக்கில் நரம்பின்றி நாளை நமதென்ற போக்கில் தடம்புரண்டு போய்விழுவோம் -தூக்கில் இடப்பட்டும் தூங்கும் மடப்பயலே அந்த இடப்பயல் தாளே இருப்பு....கிரேசி மோகன்....! Full story

கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

கேசவ் வண்ணம் - கிரேசி எண்ணம்
  180525 Gopala nandan -gov pattabhishekam A4 lr கிள்ளை(கிளி) மணிமுடிமேல், பிள்ளை மணிவண்ணன், வெள்ளைப் பசுவேந்தும் வாத்ஸல்யம், -கொள்ளை அழகுதான் கேசவ், குழந்தையும், கன்றும் பழகச் சுரந்திடும் பால்....கிரேசி மோகன்....! Full story

கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

கேசவ் வண்ணம் - கிரேசி எண்ணம்
180613 DWA icam l பாதத்தில் மாருதி, பதுமநாபர் பார்த்தனுக்கு கீதை மொழிந்தபின் காட்டுகிறார் -பாதாதி கேசத்தை விஸ்வரூபக் காட்சி கமல்சார்டூ(பார்ட்-2) கேசவ்தன் சித்திரத்தில் காண்’’.....கிரேசி மோகன்....! Full story

கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

கேசவ் வண்ணம் - கிரேசி எண்ணம்
திரிலோக சஞ்சாரி நாரதன் உ(க)லகம் கண்ணனை கண்டதும் நன்மையில் முடிந்தது.....! ''நாத தனிமனுஷன் நாரதன் தம்புரா ஓதுமே நாரண ஓங்காரம்(ஓம்நமோநாராயணா) -யாதவரைக் கண்டதில் நாரதன் , கார்வண்ணன் நன்மையாய்க் கொண்டலாய்ப் பாடினான் கண்டு’’....கிரேசி மோகன்....! (அல்லது) விண்டனன் ஓங்கார விஷ்ணு.....! Full story
Page 1 of 11712345...102030...Last »
Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.