Posts Tagged ‘கீதா மதிவாணன்’

Page 1 of 212

படக்கவிதைப் போட்டி – 177

படக்கவிதைப் போட்டி  - 177
பவள சங்கரி   அன்பிற்கினிய நண்பர்களே!   வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்? கீதா மதிவாணன் எடுத்த இந்தப்படத்தை திருமதி சாந்தி மாரியப்பன் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து போட்டிக்காகத் தேர்ந்தெடுத்து வழங்கியிருக்கிறார்கள். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள், நல்ல தலைப்புடன் ... Full story

படக்கவிதைப் போட்டி (169)

படக்கவிதைப் போட்டி (169)
பவள சங்கரி அன்பிற்கினிய நண்பர்களே! வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்? கீதா மதிவாணன் எடுத்த இந்தப்படத்தை திருமதி ராமலஷ்மி ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து போட்டிக்காகத் தேர்ந்தெடுத்து வழங்கியிருக்கிறார்கள். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள், நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் ... Full story

கண்ணீரும் புன்னகையும் – நூலறிமுகம்

கண்ணீரும் புன்னகையும் - நூலறிமுகம்
கீதா மதிவாணன்   தலைப்பே நூலின் சாராம்சத்தை சொல்லிவிடுகிறது. மறைந்த பிரபல நகைச்சுவை நடிகரான சந்திரபாபு அவர்களிடமிருந்து கண்ணீர் வெளிப்பட்ட தருணங்களையும் புன்னகை வெளிப்பட்ட தருணங்களையும் மிக அழகாகப் பதிவு செய்திருக்கும் இப்புத்தகத்தின் ஆசிரியர் முகில் அவர்கள். ‘பல ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்து மறைந்த ஒருவரின் வாழ்க்கையைத் தேடித் தொகுப்பது என்பது பாலைவனத்தில் மினரல் வாட்டரைத் தேடி அலைவதற்கு சமம்’ என்ற வரிகளின் மூலம் இந்நூலாக்கத்துக்கான தன் சிரமங்களைத் தெரிவிக்கிறார் நூலாசிரியர்.... Full story

“பெருந்தலைவர் காமராஜர்” – கர்மவீரர் காமராசர்!

--கீதா மதிவாணன். நாடறிந்த ஒரு நல்லவரைப் பற்றி என்ன எழுதுவது? என்ன எழுதாமல் இதுவரை விட்டுப்போயிருக்கிறது? காமராஜர் என்னும் கம்பீரத் தோற்றத்துள் அடங்கிக் கிடந்த எண்ணற்ற ஆளுமைகளுள் எதைப்பற்றிப் பேசுவது? பெயரைக் கேட்ட மாத்திரத்திலேயே அவர்தம் புகழ்பாடும் நாவுகளிலிருந்து அன்னாரது தனிப்பட்ட குணநலன்கள் பற்றியும் அவருடைய தன்னிகரில்லா சேவையைப் பற்றியும் அறியமுடிகிறது. கட்சி பேதமற்று அனைவரும் அவர் ஆட்சியைப் போற்றுவதிலிருந்தே அம்மாமனிதரின் தீர்க்கமான அரசியல் வாழ்வைப் பற்றியும், ராஜதந்திர காய்நகர்த்தல்கள் பற்றியும் ஏராளமாய் அறியமுடிகிறது… இவற்றுள் எதைச்சொல்ல? எதை விட? வெற்றுப்பேச்சும் வீராப்பும், போலி அலங்கார ... Full story

கவிதைக் கைமாற்று!

கவிதைக் கைமாற்று!
-கீதா மதிவாணன் அன்றொருநாள் அவசர நிமித்தம் கவிதையொன்றைக் கைமாற்றாய்க் கேட்டுக் கையேந்தி நின்றிருந்தாய் என் வீட்டுவாயிலில்!              உன் கையறுநிலையைக் காணச் சகியாது என் கவிதைத் தாள்களின் கதறல்களை மீறிப் பிய்த்துக்கொடுத்தேன் என் கவிச்சிதறல்களை! காயமுற்ற என் கவிதைப் புத்தகம் நேயமற்ற என்னோடு வாழ மறுத்ததால் சுயமிழந்து தவிக்கிறேன் நான்! விரைவில் திருப்புவதாய்க் ... Full story

இந்த வார வல்லமையாளர்!

இந்த வார வல்லமையாளர்!
இந்த வார வல்லமையாளர்! ஜூன் 9, 2014  சென்ற திங்கள் முதல் ஞாயிறு வரையிலான காலகட்டத்தில் தம் ஆற்றலைச் சிறப்புற வெளிப்படுத்தி வல்லமை இதழின் அன்பர்கள் குழுவின் கவனத்தைக் கவர்ந்ததன் காரணமாகத் தேர்வு செய்யப்பட்டவர் ... இவ்வார வல்லமையாளர் வல்லமைமிகு திருமிகு. கீதா மதிவாணன்  அவர்கள் ... Full story

என் பார்வையில் கண்ணதாசன்

என் பார்வையில் கண்ணதாசன்
-- கீதா மதிவாணன்   என் பார்வையில் கண்ணதாசன்   திரையிசைப்பாடல்கள் வழியாகவே நம்மில் பெரும்பான்மையோருக்கு அறிமுகமானவர் கவிஞர் கண்ணதாசன் என்றாலும் திரைப்பாடலாசிரியர் என்பதைத் தவிரவும் எண்ணற்ற பன்முகங்களைக் கொண்ட அவர் என் பார்வையில் ஆகச்சிறந்த ஒரு இலக்கியவாதியாகத்தான் புலப்படுகிறார். இலக்கியங்களிலிருந்து  வரிகளையும் கருத்துக்களையும் தான் எடுத்தாள்வதைக் கவிஞரே நேர்மையாக ஒப்புக்கொண்டபடியால், இலக்கியங்களைக் களவாடி கவிதைகளில் புகுத்துகிறார் என்பவர்களின் குற்றச்சாட்டை நாம் பொருட்படுத்தத் தேவையில்லை. பந்தியில் பரிமாறப்படும் உணவுக்கான பாராட்டு பரிசாரகரிடம்தான் வழங்கப்படுகிறது. ஆனால் அது ... Full story

உன்னைப் போலவே…

உன்னைப் போலவே…
-கீதா மதிவாணன் ஆகாயம் பிளந்துதித்த அண்டரண்டப் பட்சியுமில்லை             ஆவென்று வாய்பிளந்து ஆராதித்துத் தொழுவதற்கு! பூமி கிளர்ந்து வெளிப்பட்ட புழு பூச்சியுமில்லை ’ப்பூ’வென்று புறந்தள்ளிப் புழுதியிற் புரட்டுவதற்கு! உன்னைப் போலவே ஒற்றைத் துளியில் உருவாகி உயிர்க்குடத்தில் கருவானது! உன்னைப் போலவே உண்ணவும் கழிக்கவும் உடுத்தவும் உரிமையுடையது! உன்னைப் போலவே சிரிக்கவும் அழவும்... Full story

அன்புள்ள மணிமொழி!…

 கீதா மதிவாணன்   மகனே மணிமொழி! அன்புமகன் மணிமொழிக்கு, அம்மா எழுதுகிறேன். நலமாக இருக்கிறாயா? நீ எப்போதும் குன்றாக உடல்நலத்தோடும் குறைவிலாத மகிழ்வோடும் வாழவேண்டும் என்பதுதான் பெற்றவர்களாகிய எங்கள் எண்ணமும் ஆசையும். மனத்தாங்கலுடன் ஊருக்குப் புறப்பட்டுச் சென்ற நீ இந்நேரம் வருத்தம் நீங்கி தெளிவடைந்திருப்பாய் என்றும் எப்போதும் போல் தொலைபேசியில் பேசுவாய் என்றும் நாங்கள் காத்திருந்தோம். ஆனால் கடந்த நான்கைந்து நாட்களாக உன்னிடமிருந்து அழைப்பு வரவேயில்லை. நாங்களாக அழைத்தபோதும் நீ வேலையாக இருப்பதாக உன் அறைத்தோழன்தான் பேசினான். உண்மையில் வேலையாகத்தான் இருக்கிறாயா? அல்லது மனவருத்தம் இன்னும் குறைந்தபாடில்லையா? என்ற கவலையோடு எங்கே உனக்கு உடல்நிலை ... Full story

அவளுக்கும் ஒரு பெயருண்டு!

அவளுக்கும் ஒரு பெயருண்டு!
கீதா மதிவாணன் பட்டுத்தூளியிலிட்டு பாலாடையில் தேன்புகட்டி அந்நாளில் அவளுக்கும் ஒரு பெயர் சூட்டப்பட்டிருக்கலாம். வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும்போதோ, ரேசன் அட்டை புதுப்பிக்கப்படும்போதோ அன்றி அவளுக்கென்று ஒரு பெயர் இருப்பது அவள் நினைவுக்கு வருவதேயில்லை. தங்கமே வைரமே பவுனே பச்சைக்கிளியே என்று கொஞ்சுமொழிகளால் கொண்டாடப்பட்டும் அம்மாடி, கண்ணு, செல்லம், பாப்பாவென்று ஆசையாயும் அன்பாயும் அழைக்கப்பட்டும் அடியேய் இவளே…. நாயே பேயே சனியனே என்று பின்னாளில் பேரெரிச்சலுடன் விளிக்கப்பட்டும் கடந்துபோன காலத்தின் எந்த முடுக்கிலும் தன்பெயர் புழங்கப்படாததில் அவளுக்குப் பெருவருத்தம். பள்ளிக்குச் சென்று பழக்கப்படாவாழ்வில் அவள் பெயர் தாங்கியதொரு அஞ்சலட்டைக்கும் வழியற்றுப்போனவளின் அந்திமக்காலத்தில் ஏக்கத்தவிப்போடு ஊசலாடிக்கொண்டிருக்கிறது உயிர்க்கூடு, காலனேனும் அவளைப் பெயரிட்டு அழைக்க காலத்தே வருவானாவென்ற காத்திருப்போடு! http://www.shunya.net/Pictures/NorthIndia/Bishnupur/Bishnupur.htm Full story

மணிமொழியாம் தமிழுக்கொரு மடல்

கீதா மதிவாணன் என் வாழ்வை அணிசெய்யும் மணிமொழியாம் தமிழுக்கு, என் வந்தனம். இன்று நீ இருக்கும் நிலைமையை நன்கறிந்தபின்னும் நான் உன்னை நலமா என்று உசாவுவது பொருளற்றது. ஆயினும் உன்னால் நானிங்கே நலமென்று உரைப்பதில்தான் எனக்கெவ்வளவு இறும்பூது! பொருளீட்டும் பொருட்டு கடல்கடந்துவந்து அந்நிய மண்ணை மிதித்தபோது அகம் கொண்ட ஆற்றாமையோடு அலைபாய்ந்த என் மனத்தைத் தேற்றியது நீதான். மனத்தின் பாரமிறக்க உன் தோள்களைத் தந்து உற்ற தோழனானாய். உற்றார் உறவுகளின் பிரிவை எண்ணிக் கலங்கும்போதெல்லாம் தாயாய் ... Full story

குளிரவன் போவதெங்கே?

குளிரவன் போவதெங்கே?
கீதா மதிவாணன் அதோ… குளிரவன்! தூரத்து மலைமுகட்டு மரங்களுக்குப் பின்னே மெளனமாய்ப் பதுங்கி நழுவிப் போவதெங்கே? வசந்தமென்னும் பருவப்பெண் பச்சையம் பூசி ஓடைக் கண்ணாடியில் ஒப்பனை செய்வதை வழியில் பார்த்தவன், வெளிறிய தன் முகத்தை வேறுதிசையில் திருப்பிக்கொண்டு திரும்பிப் பாராமல் போகிறான். ஆனால் எனக்குத் தெரியவேண்டும் அவன் சென்ற வழி எதுவென்று… அவனைக் கண்டுபிடிக்க இதுவரை எவரும் முயன்றாராவென்று… இடிமுழக்கத்தால் விண்ணுக்கு இழுத்துவரப்பட்டு மேகப் பஞ்சணையில் துஞ்சவைக்கப்பட்டிருக்கிறானோ? சமுத்திரத்துக்குள் சென்றிருப்பானாயின் சதிராடும் அலைகளால் சுழற்றியெறியப்பட்டிருப்பானோ? அலைக்கழிக்கப்பட்டு ஆறாத ரணங்களுடன் உயிர் ஊசலாடியபடி கரையோரம் ஒதுங்கி காட்சியளிக்கிறானா மீனவர் எவருக்கேனும்? ஆளரவமற்றத் தீவொன்றில் அசைவற்று விறைத்துக் கிடக்கிறானா எங்கேனும்? சாம்பல் நிறத் தலையைக் கவிழ்ந்தபடி நித்தமும் சூரியன் மறையும் நீலமலைகளுக்கப்பால் எவருமறியாப் பொழுதுகளில் சென்று கல்லறையொன்றைத் ... Full story

ஆங்காரியும் கோணங்கியும் இடையிலொரு அம்புஜவல்லியும்

 கீதா மதிவாணன் “சக்களத்தி சண்டைன்னா என்ன, தாத்தா?” சுவாரசியமாய் நெய்யப்பட்டுக்கொண்டிருந்த கதையின் இழைகள் பதினொரு வயதுப் பாலகன் அகிலின் கேள்வியால் பட்டென்று அறுபட்டன. உம் கொட்டிக்கொண்டிருந்த பிள்ளைகள் கெக்கேபிக்கேவென்று சிரித்தனர். பக்கத்தில் உட்கார்ந்திருந்த வளர்மதி அகிலின் புறங்கையில் சுள்ளெனக் கிள்ளினாள். ஸ்ஸ்… என்றவாறே கையை வெடுக்கென்று இழுத்துக்கொண்டு அவள் முகத்தைப் பார்க்க, அவளோ தூரத்தில் வேப்பமர நிழலில் மினுக்கிடும் மின்மினிகளைப் பார்த்துக்கொண்டிருந்தாள். கட்டாந்தரையில் ஓரம் கிழிந்த கோரைப்பாயில் ஒய்யாரமாய் சாய்ந்திருந்த ரங்கலட்சுமி, சிரிப்பை அடக்கநினைத்தும் முடியாமல் ஆஹாவென சிரித்தாள். ... Full story

பார், பகலும் கழிந்தது இரவும் போனது

  -கீதா மதிவாணன் பார், பகலும் கழிந்தது  இரவும் போனது, சூரியன் மேற்கை அடைந்து  மறைந்தது. அந்திப்பொழுது வந்து ஆக்கிரமித்தது. முந்தைய அந்திப்பொழுதுகள் போலவே அந்தப்பொழுதும் இருந்தது. எழுந்தது முதலாகவே ஏனோ எண்ணியிருந்தேன், பகலில் ஏதேனும் புதுமை நிகழுமென்று! பார், பகலும் கழிந்தது இரவும் போனது.   பையப் பையப் புறப்பட்ட விண்மீன்கள் மெல்ல மெல்லப் பரவின வானமெங்கும். முந்தைய இரவுகளைப் போலவேதான் அந்த இரவும் இருந்தது. அந்திவேளையில் ஏனோ சிந்தித்திருந்தேன், இரவில் ஏதேனும் அதிசயம் நிகழும் என்று. பார், பகலும் கழிந்தது இரவும் போனது.   பறவைகள் கீச்சிசைத்தன, அரும்புகள் மலர்ந்து மணம்வீசின. கிழக்கிலிருந்து மீண்டும் கதிரவன் எழுந்தது. வழக்கம்போல் வைகறைப்பொழுது புலர்ந்தது. உறங்கும்வேளையில் ஏனோ உத்தேசித்திருந்தேன், விடியலில் ஏதேனும் விநோதம் நிகழும் என்று. பார், ... Full story

அனுதாபம்

  -கீதா மதிவாணன்   உன் அனுதாபத்தால் எனக்காவதென்ன?   நான் கலங்கிநிற்கும்போதெல்லாம் கருணை காட்டுகிறாய் நீயும். ஒன்றுக்கொன்று சமன் செய்தாலும் நன்றியால் நிறைகிறேன் நாளும்! ஆனாலும் அந்நன்றிக்கடனானது எனையழுத்தும் அதிபாரமானது. உன் அனுதாபத்தால் எனக்காவதென்ன?   என்னுடைய ஒரு பெருமூச்சேனும் உன்னுடையதாகுமோ ஒருநாளேனும்? அவ்விழிகளில் வழியக்கூடுமோ இவ்விழிகளின் கண்ணீர்த்தாரை? சத்தியத்தை மூடிவைக்கலாம், சத்தத்தை எதுவரை முடியும்? உன் அனுதாபத்தால் எனக்காவதென்ன?   அடுத்தவருக்கு தன் துயரை அளிக்க இயல்பவர் யாரே? அடுத்தவர் துயரை தனதாய் ஏற்க இயல்பவர் யாரே? ஏன் நமக்கிடையே இப்படியொரு ஏமாற்றுப் பண்டமாற்று? உன் அனுதாபத்தால் எனக்காவதென்ன?   இத்தகு பாதையில்தான் நம் பயணம் ஏனோ ஏற்கமறுக்கிறோம் நாமும். ஒவ்வொரு பயணியும் ஒற்றையாய்… பரஸ்பரம் துக்கம் பகிரவியலாதவனாய்! அடுத்தவர் படும் வேதனை கண்டு தானும் வேதனை காட்டுவோரெல்லாம் அவர்தம் துயர்நீக்கும் சூட்சுமம் மகிழ்வுதானென்பதை மறைத்துவிடுகிறார். உனக்குத் துன்பமெனில் எனக்கு இன்பமது. உலகை அழுத்தும் மாபெரும் சாபக்கேடிது! உன் அனுதாபத்தால் எனக்காவதென்ன?   (மூலம் : ஹரிவம்ஷ்ராய் ... Full story
Page 1 of 212
Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.