Posts Tagged ‘க.பாலசுப்பிரமணியன்’

Page 1 of 1412345...10...Last »

திருமந்திரத்தில் சில சிந்தனைத் துளிகள் (6)

திருமந்திரத்தில் சில சிந்தனைத் துளிகள்  (6)
க. பாலசுப்பிரமணியன் உள்ளும் வெளியும் ஒருவனே "நந்தவனத்திலோர் ஆண்டி அவன் நாலாறு மாதமாய்  குயவனை வேண்டி கொண்டுவந்தானொரு தோண்டி அதைக் கூத்தாடிகூத்தாடிப் போட்டுடைத்தாண்டி " என்ற சித்தரின் தத்துவப்பாடல் இந்த மானிட வாழ்வின் நிலையற்றதன்மையைப் படம் பிடித்துக் காட்டுகிறது. இதே கருத்தை முன்னிறுத்தி “குளத்திலே இருக்கின்ற பானையின் உள்ளும் நீர் ... Full story

கற்றல் ஒரு ஆற்றல்  -75

கற்றல் ஒரு ஆற்றல்  -75
க. பாலசுப்பிரமணியன்  செவிச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை கற்றலுக்கான வழிமுறைகளை பற்றிய  ஆராய்ச்சிகளின் மூலம் கீழ்க்கண்ட நான்கு வழிகள் அதற்க்கு உறுதுணையாக இருப்பதாக அறியப்பட்டுள்ளது. : அவையாவன: கேட்டல் (Listening) பேசுதல் (speaking) படித்தல் (Reading) எழுதுதல் (writing) தொல் காலம் முதற்கொண்டே கல்வி அறிவு நல்லாசிரியர்களிடமிருந்தும் குருக்களிடமிருந்தும் மாணவர்களுக்கும் சீடர்களுக்கும் கேள்வி ஞானம் மூலமாகவே கிடைத்து வந்தது. பண்டைய காலத்தில் இந்த முறையை ... Full story

திருமந்திரத்தில் சில சிந்தனைத் துளிகள்  (5)

திருமந்திரத்தில் சில சிந்தனைத் துளிகள்  (5)
க. பாலசுப்பிரமணியன் இறைவனை நாம் எப்படி அணுக வேண்டும்? இறைவனிடம் பக்தி செய்ய எந்த முறை சரியானது? தினசரி கோவிலுக்குச் சென்று நாம் வணங்கிவிட்டு வருவதால் இறைவன் மகிழ்ச்சியடைவானா? தினசரி இறைவனுக்கு நைவைத்யம் அல்லது படைப்புகள் செய்தல் நமக்கு நன்மை கிட்டுமா? “அனுமன் ராமனிடம் கட்டிய பக்திபோல் நாம் செய்யவேண்டுமா? இல்லை, மீரா கண்ணனிடம் கட்டிய அன்பு சிறந்ததா? அல்லது ... Full story

கற்றல் ஒரு ஆற்றல் 74

கற்றல் ஒரு ஆற்றல் 74
க. பாலசுப்பிரமணியன் கற்றலின் பாதைகளும் அதன் தாக்கங்களும் மகாபாரதக் கதையிலே ஒரு நிகழ்வு. பஞ்ச பாண்டவர்கள் தங்கள் குருகுலத்தில் படித்துக் கொண்டிருந்த நேரத்தில் ஒரு முறை அர்ச்சுனன் தன்னுடைய தாத்தா பீஷ்மரிடம் சென்று கேட்கின்றான் "என்னுடைய கற்றல் எப்போது முடிவுபெறும்?” என்று. அந்தக்கேள்விக்கு பொறுமையாக பதிலளிக்கிறார் பீஷ்மர் "உனது கற்றலில் கால் பகுதி உன்னுடைய குருவிடமிருந்து கிடைக்கும். இன்னொரு கால் ... Full story

தேய்மானங்கள்

க. பாலசுப்பிரமணியன் அந்தத் தங்கச் சங்கிலியை பொற்கொல்லர் தன்னிடமிருந்த கல்லில் தேய்த்துப் பார்த்துக்கொண்டிருந்தார். "கொஞ்சம் மெதுவாக.. …நீங்க தேய்க்கிற வேகத்திலே தங்கமெல்லாம் அப்படியே உதிர்ந்து விழுந்திடும் போல இருக்கு" என்று சிரித்துக்கொண்டே பைரவி அவரிடம் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினாள் "சரிபாக்கறப்போ கொஞ்சம் தேய்மானம் இருக்கத்தாம்மா இருக்கும்" என்று அவரும் சிரித்துக்கொண்டே பதில் சொன்னார்.  "நிறைய அழுக்கு ஏறியிருக்கு,," "பின்னே என்ன. மூன்று தலைமுறையாக இவங்க வீட்டிலே ஒவ்வொருவர் கழுத்திலேயும் தொங்கிக்கொண்டிருக்கேனே.. " என்று அந்த தங்கச் சங்கிலி தனது மனதிற்குள் ... Full story

திருமந்திரத்தில் சில சிந்தனைத் துளிகள் (4)

திருமந்திரத்தில் சில சிந்தனைத் துளிகள் (4)
க. பாலசுப்பிரமணியன் இறைவனிடம் நாம் என்ன கேட்கவேண்டும்? ஒரு கோவிலில் தரிசனம் செய்துவிட்டுத் திரும்பி வரும் இரு நண்பர்களில் ஒருவன் மற்றவனிடம் கேட்டான் "நீ இறைவனிடம் என்ன வேண்டிக்கொண்டாய்?" இதுபோன்ற கேள்விகள் நம் வீடுகளிலும் உறவு மற்றும் சுற்றத்திலும் அடிக்கடி கேட்கப்படுகின்றது. "செல்வம் வேண்டும், பதவி வேண்டும், புகழ் வேண்டும், வீடு மனை வேண்டும், நல்ல ... Full story

கற்றல் ஒரு ஆற்றல் 73

கற்றல் ஒரு ஆற்றல் 73
க. பாலசுப்பிரமணியன் அறிவுசால் சமுதாயமும் கற்றலும் அறிவுசால் சமுதாயத்தைப் பற்றியும், அதன் வளர்ச்சி, நோக்கங்கள் மற்றும் அதன் தாக்கங்கள் பற்றியும் உலகளாவிய கருத்துக்கள விவாத மேடைகளிலும் அரங்கங்களிலும் மற்றும் அறிவியல், தொழில் வளர்ச்சி கருத்துக்கணிப்புக்களிலும் இடம் பெற்று வருகின்றன. கணினியின் வளர்ச்சியாலும் மற்றும் தொலைபேசித் தொழில் நுட்பங்களின் எதிர்பாராத உலகளாவிய வளர்ச்சிகளாலும் தகவல் பரிமாற்றங்களும் அதன் வாயிலாக கற்றலில் தாக்கங்களாலும் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் அதிசயத்தக்கவையாக ... Full story

திருமந்திரத்தில் சில சிந்தனைத் துளிகள் (3)

திருமந்திரத்தில் சில சிந்தனைத் துளிகள் (3)
க. பாலசுப்பிரமணியன் இறைவன் எவ்வாறு நமக்கு அருளுகின்றான் ? மாயையால் பின்னப்பட்ட இந்த உலகில்,  மாயையை உண்மை என மனம் நம்பி அதன் பின்னே செல்கின்றது.  நிலையற்ற பலவற்றை உண்மை என்று எண்ணி அதைப் பாதுகாக்கவும் பேணிப்போற்றவும் நினைக்கின்றது. "நான், எனது, தனது" என்ற உரிமைப்போராட்டத்தில் தன் மதியை இழந்து தவிக்கின்றது. "கயிற்றைப் பார்த்து பாம்பாக நினைத்து" பயத்தில் வாழ்கின்றது!  ... Full story

கற்றல் ஒரு ஆற்றல் 72

கற்றல் ஒரு ஆற்றல் 72
க. பாலசுப்பிரமணியன் சுய-அடையாளங்களின் மாறும் பரிமாணங்கள் உலகின் மிகச் சிறந்த அறிவியல் மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கல்வியைப் பற்றி தன் கருத்துக்களை வெளியிடும்பொழுது மிக அழகாகக் கூறினார்: " ஒருவன் தனது பள்ளிக்காலத்தில் கற்றவைகள் அனைத்தும் மறந்த பின் எது மீதி இருக்கின்றதோ அதுவே கல்வியாகும்." (Education is what remains after one has forgotten ... Full story

திருமந்திரத்தில் சில சிந்தனைத் துளிகள் .. (2)

திருமந்திரத்தில் சில சிந்தனைத் துளிகள் .. (2)
க. பாலசுப்பிரமணியன் இறைவன் எங்கே இருக்கின்றான்? "தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான் " என்று இறைவனின் பெருமையை தந்தைக்கு மட்டுமின்றி, இந்த உலகுக் காட்டியவன்  பிரகலாதன்.  ஆனால் மனித மனத்தில் அடிக்கடி எழும் சந்தேகம் “ இறைவன் எந்த வடிவத்தில் இருக்கின்றான்?, .எந்த இடத்தில் இருக்கின்றான்? அவனை எந்த வடிவத்தில் வழிபட்டால் அவனுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டு நமக்கு அருள் புரிவான்? -சந்தேகத்தில் ... Full story

கற்றல் ஒரு ஆற்றல் 71

கற்றல் ஒரு ஆற்றல் 71
க. பாலசுப்பிரமணியன் சுய அடையாளங்களின் வல்லமைகள் எப்படி ஒரு மனிதனின் உடல் அமைப்புக்கள் அவனுக்கு ஒரு உடல் பரிமாணத்தையும், உடல் அழகு மற்றும் திறன் என்ற வார்த்தைகளுக்கு ஒரு பொருளையும் கொடுக்கின்றனவோ, அதே போல் சுய அடையாளம் என்பது ஒரு மனிதனின் சிந்தனைக்கும், எண்ணங்களுக்கும், செயல்முறைகளுக்கும், வாழ்க்கைப் பாதைக்கும் ஒரு பொருளைக் கொடுக்கின்றது. ஆகவே, இளம் பருவத்திலிருந்தே கற்றலின் மூலமாகவும் அதைச் சார்ந்த ... Full story

கவிதை

க.பாலசுப்பிரமணியன்   உலகே .... நீயே ஒரு கவிதை...   பகலென்றும் இரவென்றும் வண்ணங்கள் தீட்டி .. மகிழ்வினிலும் துயரத்திலும் கடல் நீரை விழியோரத்தில் வடிகட்டி..   வார்த்தைகளில்லா வானவில்லாய் . நான் மௌனத்தில்.. உலவிவர..   உள்ளத்தில்.. உன் மாயைகள் எனக்கு மட்டும் அரங்கேற்றம் !   மொழிகள் மனதினில் வார்த்தைகளைத்  தேடி .. விதையில்லா மலராய் .. வாசங்கள் பெருக்கிட....   ஒளியில்லா இதயத்தின் மூலைகளில் ஒளிந்திருக்கும் அன்பே.   உனக்கு .... "கவிதை" நல்ல புனைப்பெயர்தான் Full story

திருமந்திரத்தில் சில சிந்தனைத் துளிகள்… (1)

திருமந்திரத்தில் சில சிந்தனைத் துளிகள்... (1)
க. பாலசுப்பிரமணியன் இறைவன் எப்படிப்பட்டவன்? திருமந்திரத்தைப் படித்து அதன் உட்பொருளை அறிந்து உள்வாங்கி வாழ்தல் என்பது வாழ்க்கையில் ஒருவருக்கு கிடைத்த மிகப்பெரிய வரம்.  வாழ்வின் மிகப் பெரிய தத்துவங்களை அவ்வளவு அழகாக சிறிய பாடல்கள் மூலம் நமக்கு தெள்ளத்தெளிவுற அளித்திருப்பது  நினைத்துக்கூடப் பார்க்கமுடியாத ஒரு அறிய செயல்.!! நமக்கு சில எதிர்பாராத ... Full story

கற்றல் ஒரு ஆற்றல் -70

கற்றல் ஒரு ஆற்றல் -70
க. பாலசுப்பிரமணியன் சுய அடையாளத்தின் நெருக்கடிகளும் கற்றலும் சுய அடையாளத்திற்கு ஏற்படும் நெருக்கடிகள் கற்றலை வெகுவாக பாதிப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. இந்த நெருக்கடிகள் ஏற்படுவதற்கு ஒரு குழந்தையின் அல்லது மாணவனின் வீட்டு, குடும்பச் சூழ்நிலைகள், வாழ்க்கைப் பரிமாணங்கள் மற்றும் பள்ளி, சமுதாயத் தாக்கங்கள் காரணமாக அமையலாம். ஆகவே, இந்த மாதிரியான நெருக்கடிகள் எந்த ஒரு குழந்தைக்கும் மாணவனுக்கும் வராத ... Full story

கற்றல் ஒரு ஆற்றல் 68

கற்றல் ஒரு ஆற்றல் 68
உணர்வு சார் நுண்ணறிவும் சுய அடையாளமும் தேடலின் பாதையில் கிடைக்கக்கூடிய அறிவு மற்றும் உணர்வுகள் விழிப்புணர்வை வலுப்படுத்துவதற்கு ஆக்கபூர்வமான அடித்தளத்தை உண்டாக்குகின்றன. தன்னைப்பற்றிய விழிப்புணர்வுகள் மற்றும் தன்னைச் சுற்றியுள்ள சூழ்நிலைகள், பொருட்கள், மனிதர்கள் ஆகியவற்றைப் பற்றிய விழிப்புணர்வுகள் என்ற இரண்டுக்கும் உள்ள உறவு நிலைகளைப் பற்றிய கற்றலையும் அறிவையும் அளிக்கின்றன. இந்த உறவு நிலையை பயம், விந்தை, அன்பு, ஆச்சரியம் போன்ற உணர்வுகள் மேம்படுத்தவோ ... Full story
Page 1 of 1412345...10...Last »
Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.