Posts Tagged ‘க. பால சுப்பிரமணியன்’

வாழ்ந்து பார்க்கலாமே – 20

வாழ்ந்து பார்க்கலாமே - 20
வாழ்வின் வளத்திற்கு ஆக்கபூர்வமான சிந்தனைகள் சிந்தனை என்பது நாம் விரும்பியோ விரும்பாமலோ நமது மனதில் நிகழ்ந்து கொண்டிருக்கக்கூடிய ஒரு செயல். உயிர் வாழும் எல்லா உயிரினங்களுக்கும் சிந்திக்கும் திறன் மாறுபாட்ட அளவுகளிலும் மாறுபட்ட வகைகளிலும் இருப்பதாக உளவியல் வல்லுநர்கள் கூறுகின்றனர். சிந்தனை ஒரு மனிதனின் வாழ்க்கைக்குத் தேவையான சக்தியையும் உணர்வாற்றல்களையும் அளிப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் இந்தச் சிந்தனை ஆக்கபூர்வமாக அமையும் பொழுது அது வாழ்வின் வளத்திற்கும் ... Full story

வாழ்ந்து பார்க்கலாமே 19

வாழ்ந்து பார்க்கலாமே 19
க. பாலசுப்பிரமணியன்   சிந்தனைகள் வாழ்வின் வளத்திற்கு அடிப்படை வாழ்க்கையின் வளம் என்பது எல்லோருக்கும் ஒன்றாக அமைவதில்லை. பிறக்கும் நாடு, ஊர், அங்குள்ள சமுதாய பழக்க வழக்கங்கள், இயற்கை வளங்கள் மற்றும் அதன் தாக்கங்கள், குடும்பச் சூழ்நிலைகள், போன்ற பல ஒருவருடைய வாழ்க்கைக்கு ஆதாரமாக அமைகின்றன. ஆனால் இவற்றையெல்லாம் கடந்து அறிவாலும், முயற்சியாலும், உழைப்பாலும் முன்னேறித் தன்னுடை வாழ்க்கை வளத்தை மாற்றிக்கொண்டவர்கள் பலர். இவர்களின் அறிவு, உழைப்பு, செல்வம் எல்லாவற்றிக்கும் அடிப்படையாக அமைந்தது அவர்கள் சிந்தனைத் திறனே. ... Full story

கற்றல் ஒரு ஆற்றல் 69

கற்றல் ஒரு ஆற்றல்  69
க. பாலசுப்பிரமணியன் சுயஅடையாளம் முன்னேற்றத்தின் முதல் படி லெபனோனைச் சேர்ந்த தத்துவ மேதையும் கவிஞருமான கலீல் கிப்ரானின் குழந்தைகளை பற்றிய  கீழ்க்கண்ட வரிகள் உலகம் முழுதும் பேசப்பட்டும் பாராட்டப்பட்டும் வருகின்றன. Your children are not your children. They are the sons and daughters of Life's longing for itself.... Full story

மார்கழி மணாளன் 26

மார்கழி மணாளன் 26
  திருக்கடல்மல்லை - அருள்மிகு ஸ்தலசயனப் பெருமாள்  திருக்கோயில் புலனடக்கிப் புண்டரீகன் மாமல்லைக் கடலோரம் பூப்பறித்துப் புகழ்பாடி புண்ணியனே உனைப்போற்ற புவிபோற்றும் தவத்தோனாய் புசித்திடவே வந்தாயே பசிமறந்து பாற்கடலாய் நினைத்தங்கே படுத்தவனே !   மாமுனிவன் மனமடக்கிய மாதவத்தில் மகிழ்ந்தாயோ மாமல்லை வருகையிலே மற்றதெல்லாம் மறந்தாயோ மங்கையினை மார்பினிலே மறக்காமல் வைப்பவனே மனமுவந்தே சேடனுக்கோர் ஓய்வினையே தந்தாயோ?  ... Full story

மார்கழி மணாளன் 23

மார்கழி மணாளன் 23
    திருவைகுண்ட விண்ணகரம் - அருள்மிகு தாமரைக்கண்ணுடையபிரான் கோயில்   வேடங்கள் கலைந்ததும் வேண்டிட ஒன்றில்லை வேதவன் வாழ்ந்திடும் வைகுந்தமே வேறில்லை வேதங்கள் வாதங்கள் வழியினில் துணையில்லை பேதங்கள் இல்லையே வைகுந்தன் பார்வையில்!   இழிவென்ற அழிவென்ற நினைப்பெல்லாம் நீங்கிட  விதியென்ற மதியென்ற கணக்கெல்லாம் பொய்த்திட கதியென்றே அரங்கனின் பாதங்கள் கிடக்கையிலே பிடியென்று அறிந்திடும் அறிவும்தான் வந்திடுமோ ?  ... Full story

மார்கழி மணாளன் 20

மார்கழி மணாளன் 20
    திருமணிக்கூடம்  - அருள்மிகு வரதராசப் பெருமாள் நெருப்பாக இருந்தவள் நெருப்பினிலே நின்றவுடன் நெருப்பான நெஞ்சினிலே கருப்பான உணர்வுகளுடன் நெருப்பாகி ஆடினான் துடிப்பாகத் தாண்டவனே நெருப்பாக எரிந்ததுவே மூவுலகும் முன்னாலே !   சடையனின் சிகையெல்லாம் சீறியே  மண்தொடவே படையென எழுந்தனரே பதினோரு உருத்திரரே விளையாட நினைத்தானோ விதிமுடிக்க வந்தானோ விடையமர்ந்த வள்ளலே வெகுண்டதுவே சரிதானோ?   தகிக்கின்ற நெருப்புக்குத் தாளமிடும் ... Full story

கற்றல் ஒரு ஆற்றல் 54

கற்றல் ஒரு ஆற்றல் 54
க. பாலசுப்பிரமணியன் வீட்டுச் சூழ்நிலைகளும் கற்றலும் (2) கற்றலுக்கு ஏதுவாக பெற்றோர்கள் எப்படிப்பட்ட சூழ்நிலைகளை உருவாக்கவேண்டும் என்பது பற்றிய பல கருத்தரங்கங்கள் நாட்டின் பல பகுதிகளில் நடத்தப்பட்டு வருகின்றன. அதில் உருவாகின்ற சில கருத்துக்களை மனதில் கொள்ளுதல் அவசியம். கற்றலுக்கு உதவும் வண்ணம் வீட்டில் அமைதியை காத்தல் அவசியம். பொதுவாக படிக்கும் நேரங்களில் மற்றும் இடங்களில் தேவையற்ற பேச்சுக்களையோ விவாதங்களையோ ... Full story

மார்கழி மணாளன்

க. பாலசுப்பிரமணியன்   மார்கழி மணாளன் திருக்காப்பு   வாழிய வாழிய வலக்கை சக்கரம் வாழிய வாழிய மலர்க்கை சங்கம் வாழிய வாழிய துளசி மோகனன் வாழிய வாழிய மார்கழி மணாளன் !   வண்ணங்கள் ஆயிரம் கண்களில் துள்ளும் கண்ணனின் நினைவில் காலங்கள் வெல்லும் விண்ணவர் அனைவரும் வாழ்த்திடும் வகையில் வைகறை நித்தம் மங்கலம் மலர்ந்திடும் !   திருவருள் பொங்கிடும்  திருவடி சரணம் பொன்னிரு பாதம்  இன்னுயிர் காக்கும் கண்ணிரு விழியில் கண்ணனை வைத்தால்... Full story
Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.